Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்

password

கணினியில் நாம் கோப்புகளை உருவாக்குவதற்கு மைக்ரோசாஃப்ட் வோர்ட் (MS Word), எக்செல் (MS Excel) ஆகியவை அதிகம் பயன்படுகிறது. சில சமயம் நாம் உருவாக்கும் கோப்புகளை வேறு எவரும் பார்க்காதவாறு ரகசியமாக வைத்திருக்க விரும்பினால் அதற்கு நாம் பாஸ்வோர்ட் கொடுக்கலாம். அதனை எப்படி செய்வது? என்று இங்கு பார்ப்போம்.

Word/Excel ஃபைல்களை உருவாக்கிய பின் Save கொடுப்போம் அல்லவா? அப்படி Save என்பதை க்ளிக் செய்வதற்கு பதிலாக Save As என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு வரும் விண்டோவின் கீழே Tools என்பதை க்ளிக் செய்து, General Options என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு வரும் விண்டோவில் இரண்டு பெட்டிகள் இருக்கும்.

Password to open – கோப்பை(File) திறப்பதற்கு கடவுச்சொல். இதனை கொடுத்தால் தான் அந்த கோப்பை படிக்க முடியும்.

Password to modify – கோப்பில் மாற்றம் செய்வதற்கு கடவுச்சொல். கோப்பை படிக்க முடியும், கடவுச்சொல் கொடுத்தால் தான் மாற்றம் செய்ய முடியும். (ஆனால் அதனை காப்பி எடுத்து மாற்றம் செய்ய முடியும்.)

இரண்டுக்கும் வேறுவேறு கடவுச்சொற்களை கொடுக்கலாம் அல்லது ஒரே சொல்லை கொடுக்கலாம்.

பிறகு OK என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்!

குறிப்பு: அலுவலக நண்பர் ஒருவர் இது பற்றி என்னிடம் கேட்டார். புதியவர்களுக்கு இது பயன்படும் என்ற நம்பிக்கையில் இங்கு பகிர்கிறேன்.

இதையும் படிங்க:  கூகுள் வெப்மாஸ்டர் டூல் - Diagnostics

15 thoughts on “Word/Excel கோப்புகளுக்கு பாஸ்வோர்ட்”

  1. மிகவும் பயனுள்ள பகிர்வினை அளித்தமைக்கு மிக்க நன்றி.!

    எம் எஸ் ஆபிஸ் 2007க்கு முன்னர் இருக்கும் பதிப்புகளில் டூல்ஸ் மெனுவிலும் வசதிகள் இருந்தது என்று நினைக்கின்றேன்.

  2. எனக்கு ஏற்கனவே தெரிந்த குறிப்புதான். அலுவலகத்தில் இதைப்போல நிறைய கோப்புகளை கையாளுகிறேன். புதியவர்களுக்கு மிகவும் பயன்படும் அற்புதக் குறிப்பு.