TechMinar.com – கடலில் ஒரு துளி

இணையம் என்னும் சமுத்திரத்தில் ஒரு சிறு துளியாய் சங்கமித்துள்ளது Techminar.com என்னும் புதிய ஆங்கில தளம். இது ப்ளாக்கர்  உதவிக் குறிப்புகள் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பச் செய்திகள் பற்றிய தளமாகும். இந்த புதிய தளத்தை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
 
 Techminar.com தளத்தை உருவாக்கியது வேறு யாரும் இல்லை, நான் தான். இது நான் புதிதாய் உருவாக்கியிருக்கும் ஆங்கில தளம். கிட்டத்தட்ட ப்ளாக்கர் நண்பன் தளத்தின் ஆங்கில மொழிபெயர்ப்புதான். இதில் ப்ளாக்கர் டிப்ஸ் பற்றியும், தொழில்நுட்பச் செய்திகளைப் பற்றியும் எழுதும் எண்ணம் உள்ளது. அதற்காகவே “Blogging Tips and Technology News” என்று Caption சேர்த்துள்ளேன். மேலும், ஆங்கில தளங்களுக்கு மட்டுமே பயன்படும் சில விசயங்களை பற்றியும் எழுத உள்ளேன்.

சொந்த டொமைனில் வெப் ஹோஸ்டிங் மூலம் ஆங்கில  தளம் ஒன்று உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாட்களாக இருந்தது. வெப் ஹோஸ்டிங் என்றால் கொஞ்சம் பணம் செலவிட வேண்டும் என்பதாலும், எதைப் பற்றி எழுதுவது? என்று தெரியாததாலும் யோசித்துக் கொண்டே இருந்தேன். தற்போது ப்ளாக்கர் நண்பனில் எழுதுவதையே எழுதலாம் என்று முடிவெடுத்தேன். சகோ. பலே பிரபு அவர்களின் Custom Domain பற்றிய தொடரை படித்த பிறகு, வெப் ஹோஸ்டிங்கிற்கு பதிலாக கூகிள் மூலம் டொமைன் வாங்கிவிட்டேன்.

ஆட்சென்ஸ் (Adsense):

ஆங்கில தளம் உருவாக்கியதற்கு காரணமே விளம்பரங்களுக்காக தான். ஆனால் கூகிள் ஆட்சென்ஸ் பெற வேண்டுமானால் பல்வேறு விதிகள் இருப்பதால் மூன்று மாதங்களுக்கு பிறகு அதில் விண்ணப்பிக்கலாம் என்று எண்ணியிருந்தேன். இடையில் ஒரு சகோதரருக்கு ஆட்சென்ஸ் பற்றி விளக்கம் கொடுத்த போது, எதார்த்தமாக விண்ணப்பித்தேன். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று தான் நினைத்தேன், ஆனால் மறுநாளே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மெயில் வந்தது. அது சமயம் ப்ளாக் பெற்ற மொத்த பார்வைகள் (Pageviews) 200-க்கும் குறைவே. அது மட்டுமின்றி ஒரு பதிவு மட்டுமே இருந்தது. இதை பெருமைக்காக சொல்லவில்லை. ஆட்சென்ஸ் வாங்குவது எளிது என்பதற்காகவே சொன்னேன். ஆட்சென்ஸ் தமிழ் தளங்களுக்கு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஆட்சென்ஸ் விதிகளில் முக்கியமான ஒன்று, விளம்பரங்களை க்ளிக் செய்யுமாறு வாசகர்களிடம் சொல்லக் கூடாது. நான் உங்களிடம் கேட்பது என்னவென்றால், அந்த விளம்பரங்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் மட்டுமே க்ளிக் செய்யவும். எனக்காக க்ளிக் செய்ய வேண்டாம். அவ்வாறு செய்வது நாம் அவர்களை ஏமாற்றுவது போல் ஆகும்.

Techminar என்றால் என்ன?

இது நான் கனவில் தேர்ந்தெடுத்த பெயர். இது பிடித்திருந்ததால் இதனையே வைத்து விட்டேன். பெயர் வைத்த பிறகு தான் இதற்கு அர்த்தமும் வைத்தேன்.

இதையும் படிங்க:  ப்ளாக் தொடங்குவது எப்படி? [பகுதி-17]

Tech – Technology – தொழில்நுட்பம்

Minar – Light House or Tall Spire – கலங்கரை விளக்கம் அல்லது உயரமான சிகரம்
[Minar என்னும் வார்த்தை Minaret என்னும் அரபி மொழியிலிருந்து வந்ததாகும்]

 உயரமான கட்டிடங்கள் ஒரு கல்லிலிருந்து தொடங்கப்படுகிறது. தற்போது ஒரு கல்லை மட்டுமே வைத்துள்ளேன். இறைவனின் உதவியால் அது மேலும் உயரமாகும் என்ற நம்பிக்கையுடன்..

தங்களுக்கு விருப்பமிருந்தால் ஒரு முறை வருகை தரவும்.

முகவரி:  www.techminar.com

39 thoughts on “TechMinar.com – கடலில் ஒரு துளி”

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ…

    மாஷா அல்லாஹ் புதிய தளத்தை அழகிய முறையில் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.

    ஆங்கிலம் அவ்வளளவு அறியாவிட்டாலும் அடிக்கடி வந்து படிக்கிறேன்.இன்ஷா அல்லாஹ்
    (ADS-ஐ கிளிக் பண்றேன்)

    ok y u not set ads.ly?
    its very useful for u

  2. நல்ல தகவல் நண்பா

    தங்களின் அந்த தளமும் மாபெரும் வளர்ச்சியை எட்டும்

    வாழ்த்துக்கள் நண்பரே

  3. //முஸ்லிம் said… 1

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோ…

    மாஷா அல்லாஹ் புதிய தளத்தை அழகிய முறையில் அறிமுகப்படுத்தி உள்ளீர்கள்.

    ஆங்கிலம் அவ்வளளவு அறியாவிட்டாலும் அடிக்கடி வந்து படிக்கிறேன்.இன்ஷா அல்லாஹ்
    (ADS-ஐ கிளிக் பண்றேன்)

    //

    வ அலைக்கும் ஸலாம்

    தங்கள் கருத்துக்கு நன்றி சகோ.! உங்களுக்கு பயனாக இருந்தால் மட்டுமே விளம்பரங்களை க்ளிக் செய்யவும்.

    //ok y u not set ads.ly?
    its very useful for u//

    அது வாசகர்களுக்கு தொல்லை கொடுக்கும் சகோ.!

  4. //Prabu Krishna said… 3

    வாழ்த்துகள் சகோ. (ஹி ஹி ஹி). நானும் வரேன் சீக்கிரம்.
    //

    நன்ற்இ சகோ.! நீங்க தான் எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களே!

  5. //சம்பத்குமார் said… 4

    வாழ்த்துக்கள் நண்பரே..

    புதிய தளம் மென்மேலும் வளர்ச்சியடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள்

    நட்புடன்
    சம்பத்குமார்//

    நன்றி நண்பரே!

  6. //stalin said… 5

    Techminar பெரும் மழையாக மாறும் …

    வாழ்த்துக்கள் ஸார் …//

    வாழ்த்துக்கு நன்றி நண்பா!

    அப்புறம் "சார்" வேண்டாமே!

  7. //M.R said… 7

    நல்ல தகவல் நண்பா

    தங்களின் அந்த தளமும் மாபெரும் வளர்ச்சியை எட்டும்

    வாழ்த்துக்கள் நண்பரே//

    நன்றி நண்பரே!

  8. //வைரை சதிஷ் said… 10

    அருமையான தகவலை தந்துள்ளீர்கள்.உங்கள் சேவை தொடரட்டும்//

    நன்றி நண்பா!

  9. //தாரிக் said… 11

    இந்த பதிவிற்க்கு முன்பாகவே உங்கள் techminar தளத்தில் இணைந்துவிட்டேன்,பிரதர்//

    🙂 🙂 🙂

    தெரியும் பிரதர்! வருகைக்கு நன்றி!

  10. //மென்பொருள் பிரபு said… 12

    கூகிள் ஆட்சென்சில் காசை அள்ள வாழ்த்துகள்.//

    🙂 🙂 🙂

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  11. //’’சோதிடம்’’ சதீஷ்குமார் said… 14

    வாழ்த்துக்கள் நண்பா தினசரி அப்டேட் பண்ணுங்க//

    நன்றி நண்பரே! முயற்சி செய்கிறேன்.

  12. //சுப்ரமணியன் said… 16

    உங்களது சேவை என்னை நெகிழச்செய்கிறது சகொதரரே. adsence மூலமும் இதற்க்கு நல்ல பலன் கிடைக்க வாழ்த்துக்கள்.
    //

    நன்றி சகோ.!

  13. வாழ்த்துக்கள் அப்துல் பசித் 🙂

    உங்கள் தளம் குறிப்பா பின்னூட்ட பெட்டி வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது.. தேவையற்ற நிரல்களை குறையுங்கள்.

  14. //கிரி said… 32

    வாழ்த்துக்கள் அப்துல் பசித் 🙂

    உங்கள் தளம் குறிப்பா பின்னூட்ட பெட்டி வருவதற்கு நீண்ட நேரம் எடுக்கிறது.. தேவையற்ற நிரல்களை குறையுங்கள்.
    //

    நன்றி நண்பரே!

    ப்ளாக்கர் நண்பன் தளமா? அல்லது techminar தளமா?

  15. இன்றுதான் இந்த பதிவை கவனித்தேன்.. நிச்சயம் உங்கள் ஆங்கில தளத்திற்கு வருகை தருகிறேன்… எனக்கு ஓர் ஆங்கில தளம் அல்லது வலைப்பூ தொடங்கும் ஆவல் உள்ளது.. சில காரணங்களுக்காக அதனை தள்ளிப்போட்டு இருக்கிறேன்.. ஆங்கில தளத்தில் ஆட்சென்ஸ் தொகைக்காக அதில் மட்டும் எழுதாமல் இங்கும் தொடந்து எழுதும் உங்கள் சேவை பாராட்டத்தக்கது.. நன்றி…

  16. ஆட்சென்ஸ் விதிகளில் முக்கியமான ஒன்று, விளம்பரங்களை க்ளிக் செய்யுமாறு வாசகர்களிடம் சொல்லக் கூடாது.

    /////////////////////////////////////////////////////////

    ஆஹா இப்ப புரியுது என்னோட அட்சென்ஸ் கணக்கு தடை செய்யப்பட்ட காரணம் –நமது தளத்தில் தெரியும் அட்சென்ஸ் விளம்பரத்தில் நாம் கிளிக் செய்வது கூகிள் விதி மீறால தயவு செய்து விளக்கவும் என்னொரு சந்தேகம் புதிய அட்சென்ஸ் கிடைச்சுருச்சு அந்த கோடிங் எடுத்து பழைய ஆங்கிலம் தளத்தில் கோடிங் சேர்க்கலாமா ,ஆதாவது தடை செய்யப்பட்ட ப்ளாக்
    யில் விளம்பரம் add getjet முலமாக சேர்க்கலாமா ????? இது விதிமுறை மீறலா அல்லது தடை செய்ய பட்ட தளத்திற்கு மீண்டும் அட்சென்ஸ் கிடைக்க வாய்ப்பு உள்ளதா தயவு செய்து விளக்கவும்

    உங்களது பதிலை எதிர்பார்த்து Subscribe by email செய்து உள்ளேன்