இணையம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. மின்னஞ்சல் பார்க்க/அனுப்ப, உறவினர்கள்/நண்பர்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய, இதைவிட முக்கியமாக பேஸ்புக் பயன்படுத்த நமக்கு இணையம் அவசியம் ஆகிறது. ஆனால் இன்று உலகில் மூன்றில் இருவருக்கு வேகமான, மலிவான இணைய வசதி கிடைப்பது இல்லை.
இதனை சரி செய்ய கூகுள் நிறுவனம் Project Loon என்ற பெயரில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.
Project Loon என்பது பலூன் மூலம் உலகெங்கும் இணைய வசதி கொடுக்கும் தொழில்நுட்பம் ஆகும். கீழேயுள்ள வீடியோவைப் பார்த்தால் ஓரளவு புரியும்.
சூரிய ஆற்றலால் (Solar Power) தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய பலூன்களை பூமியின் வளிமண்டலக் காற்றில் (Stratospheric winds) பறக்கவிட்டு, அவைகள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு உலகமெங்கும் இணைய வசதி கொடுக்கும்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து 20 கிலோமீட்டர் உயரத்தில் பறக்கும் இந்த பலூன்கள் காற்றின் விசையினால் பூமியை சுற்றி வரும். கிட்டத்தட்ட சாட்டிலைட் போன்று செயல்படும்.
இந்த பலூன்களில் சிறப்பு ஆன்டெனாக்கள் இருக்கும். தரைப்பகுதியில் சிறப்பு ரிசீவர்கள் மூலம் பலூன்களைத் தொடர்புக் கொள்ள முடியும்.
இதன் முதற்கட்ட சோதனை தற்போது நியுசிலாந்து நாட்டில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இது வெற்றிப் பெற்றால் மற்ற நாடுகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.
கூகுளின் இந்த முயற்சி இணையப் புரட்சியாகுமா? பொறுத்திருந்து பார்போம்…!
The account associated with publisher ID ca-pub-1350178451027553 has been disapproved
Vanakkan nanba ithukku enna artham.
Adsense kanakku kidaikkuma kidaikkatha.
Vilakkam kudunga nanba.
Nanri