Minion Rush – மினியன்களின் அட்டகாசம்

அதிகமான அனிமேசன் படங்களில் கதாநாயகப் பாத்திரங்களைவிட அதில் வரும் துணைப்பாத்திரங்கள் நம்மை அதிகம் ரசிக்க வைக்கும். அது போல Despicable Me என்ற ஆங்கில அனிமேசன் படத்தில் வரும் கதாப்பாத்திரங்கள் தான் மினியன்கள் (Minions).

Despicable Me படத்தின் கதாநாயகன் க்ரூவிற்கு உதவியாக இருக்கும் இந்த  மினியன்கள் ஒன்று அல்லது இரண்டு கண்கள் கொண்ட சிறிய, மஞ்சள் நிற, வாழைப்பழ வடிவிலான உயிரினங்கள். இவைகளுக்கு பேசத்தெரியாது ஆனால் செய்கைகளால் நம்மை ரசிக்க வைக்கும். மாதிரிக்கு கீழே உள்ள ட்ரைலரை பாருங்கள்.

என்னப்பா? ப்ளாக்கர் நண்பன் தளத்துல சினிமாவா? என்று நீங்கள் கேட்பதற்குள் பதிவிற்கு சென்றுவிடுவோம்.

Despicable Me படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை மூன்றாம் தேதி வெளியாவதையொட்டி Gameloft நிறுவனம் Minion Rush என்னும் விளையாட்டை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.

தற்போது மொபைல் விளையாட்டுக்களில் பிரசித்து பெற்றது முடிவில்லா ஓட்ட விளையாட்டுகளாகும் (Endless Runner Games). இந்த விளையாட்டுக்களுக்கு முடிவே கிடையாது. நீங்கள் ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். இந்தவகை விளையாட்டுகளில் Temple run, Temple Run 2, Subway Surfers வரிசையில் தற்போது Minion Rush விளையாட்டு.

மினியன்களுக்கிடையில் நடைப்பெறும் போட்டியில் “Minion of the Year” விருது பெறுவதற்காக நீங்கள் (மினியனாக) விளையாட வேண்டும். பல்வேறு இடங்கள், சாகசங்கள், தடைகள், எதிரிகள் என்று அனைத்தும் முப்பரிமாணத்தில் அழகாக இருக்கும்.


விளையாட்டின் திரைப்பிடிப்புகள்:

 
 


ஆண்ட்ராய்டில் விளையாட: https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftDMHM


ஐபோன், ஐபேடில் விளையாட: https://itunes.apple.com/app/despicable-me-minion-rush/id596402997?mt=8

நேரமில்லாத காரணத்தினால் விரிவாக சொல்ல முடியவில்லை… நீங்கள் விளையாடிப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்….!

1 thought on “Minion Rush – மினியன்களின் அட்டகாசம்”