Harlem Shake – நடனமாடும் யூட்யூப்

Harlem Shake என்பது தற்போது இணையத்தில் பிரபலமாகிவரும் நடனம் ஆகும். 30 நொடிகள் நீளம் கொண்ட இந்த வீடியோவில் கூட்டமாக சிலர் இருக்கும் இடத்தில் ஒருவர் மட்டும் 15 நொடிகள் தனியாக ஆடுவார். மீதி பதினைந்து நொடிகள் அனைவரும் சேர்ந்து ஆடுவர்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த பெயரில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் யூட்யூப் தளத்தில் Upload செய்யப்பட்டது. இதனைக் கண்ட Youtube தளம் தற்போது Do the Harlem Shake என்ற பெயரில் Easter Egg ஒன்றை வெளியிட்டுள்ளது.

யூட்யூப் தளத்தில் Do the Harlem Shake என்று நீங்கள் தேடினால், அதற்கான வீடியோக்களைக் காட்டும். சில நொடிகளில் ஹார்லம் ஷேக் பாடலுடன் Youtube Logo மட்டும் நடனமாட தொடங்கும். சில நொடிகள் கழித்து மொத்த யூட்யூப் பக்கமும் நடனமாடும்.

இதையும் படிங்க:  கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

8 thoughts on “Harlem Shake – நடனமாடும் யூட்யூப்”