Hangouts – கூகுளின் புதிய சாட் வசதி

இந்த வார பிட்…பைட்…மெகாபைட்! பகுதியில் “Gmail Chat, Google Talk, Google+ chat, Google Drive Chat ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்து Babel என்ற பெயரில் கூகுள் புதிய சாட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது” என்று பார்த்தோம் அல்லவா? அந்த வசதியை “Hangouts” என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த Hangouts வசதியை ஐந்து வழிகளில் பயன்படுத்தலாம்.

  1. ஜிமெயில் சாட்
  2. கூகுள் ப்ளஸ் சாட்
  3. க்ரோம் நீட்சி (extension)
  4. ஆண்ட்ராய்ட் அப்ளிகேசன் (முன்பு Google Talk)
  5. ஐஓஎஸ் அப்ளிகேசன்

இதில் ஜிமெயிலில் மட்டும் இன்னும் சில தினங்களில் அனைவருக்கும் இந்த வசதி வந்துவிடும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. ஆனால் நீங்கள் இப்போதே ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

ஜிமெயில் சாட் பாக்ஸில் தெரியும் உங்கள் படத்தை க்ளிக் செய்தால் பல தேர்வுகள் காட்டும். அதில் Try, the new hangouts என்பதை க்ளிக் செய்தால் போதும். புதிய சாட் பாக்ஸை பயன்படுத்தலாம்.

Hangouts வசதிகள்:



  • சாட்டில் படங்களையும், அட்டகாசமான புதிய உணர்சித்திரங்களையும் (Emoticons) அனுப்பலாம்
  • பத்து நபர்கள் வரை க்ரூப் சாட் மற்றும் க்ரூப் வீடியோ சாட் செய்யலாம்
  • கணினியில் சாட் செய்ய தொடங்கி பிறகு ஆண்ட்ராய்ட், ஆப்பிள் சாதனங்களில் சாட்டிங்கை தொடரலாம்

இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் நான் எப்போதும் பயன்படுத்தும் வசதி இல்லை. Hangouts-ல் invisible வசதி கிடையாது.

மற்றப்படி இந்த வசதி எனக்கு பிடித்துள்ளது. மேலும் இதில்  எஸ்எம்எஸ் வசதியும் விரைவில் வரவிருக்கிறது.

உங்களுக்கு இந்த வசதி பிடித்துள்ளதா?

இதையும் படிங்க:  கூகுள் கால்குலேட்டர் [வீடியோ பதிவு]

6 thoughts on “Hangouts – கூகுளின் புதிய சாட் வசதி”

  1. உபயோகமான பதிவு ஆனால் எனக்கு பயன்படாது நம்ம பேஸ்புக் மட்டும் தான் 🙁

  2. உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி…! பயனுள்ள பதிவு! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்…!!!

    உங்கள் மனதில் எழும் தொழில்நுட்பம் சார்ந்த எந்தக் கேள்விக்கும் மிகக் குறுகிய நேரத்தில் பதில் கிடைக்கும் வகையில் இப்போது 'ஒன்லைன் பதில்' தளம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு முறை வந்து பாருங்கள். பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களிடமும் அறிமுகம் செய்யுங்கள்.

    இதோ 'ஒன்லைன் பதில்' தளத்திற்கான சுட்டி:
    ஒன்லைன் பதில்!
    http://www.onlinebathil.blogspot.com

  3. நான் இன்றுதான் ஜிமெயிலில் இந்தப் புதிய வசதியைப் பார்த்தேன். ''மறைந்துகொள்ளும் வசதி கிடையாதா!' நல்லவேளை நான் இந்தப் புதிய அரட்டைமுறைக்கு மாறுவதற்கான பொத்தானை அழுத்தவில்லை. வேலை காத்திருந்ததால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இந்தப் பதிவைப் படிக்காவிட்டால் நான் மாட்டிக் கொண்டிருந்திருப்பேன், சில நண்பர்களிடம்! நன்றி நண்பரே!