Google Mapathon 2013 – பரிசுகளை வெல்லுங்கள்!

கூகிள் இந்தியா நிறுவனம் Mapathon 2013 என்னும் போட்டியை அறிவித்துள்ளது. இந்தியாவில் உங்களுக்கு தெரிந்த இடங்களை கூகுள் மேப்பில் சேர்ப்பது தான் போட்டி. வெற்றி பெறுபவர்களுக்கு Samsung Galaxy Note 800 ஆண்ட்ராய்ட் டேப்லட், Samsung Galaxy S II GT I9100 ஆண்ட்ராய்ட் போன்கள் போன்ற பரிசுகளையும் தருகிறது.

என்ன செய்ய வேண்டும்?

Google Map Maker என்பது கூகுள் மேப்பில் இடங்களை சேர்ப்பதற்கு பயன்படும் வசதியாகும். இதன் மூலம் இந்தியாவில்  உங்களுக்கு தெரிந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தீயணைப்பு துறை அலுவலகம், கடைகள், சாப்பாட்டு விடுதி போன்ற இடங்களை கூடுதல் தகவல்களுடன் இணைக்க வேண்டும்.

அப்படி நீங்கள் இணைக்கும் இடங்கள் சரிபார்க்கப்பட்டு பிறகு கூகுள் மேப்பில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்படும். கூகுள் மேப்பில் சரிபார்க்கப்பட்டு பிரசுரிக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


பரிசுகள்:

  • Samsung Galaxy Note 800 Android Tablets10 நபர்களுக்கு
  • Samsung Galaxy S II GT I9100 Android Phones40 நபர்களுக்கு
  • 5000 ரூபாய் மதிப்புள்ள Flipkart gift coupons –  50 நபர்களுக்கு
  • Google Mapathon 2013 t-shirts and certificates 1000 நபர்களுக்கு (மேலே உள்ள நூறு பேர்களை சேர்த்து)

இந்த போட்டி வரும் Feb 11 முதல் Mar 25 வரை நடக்கும். இந்தியாவில் வசிப்பவர்கள் மட்டுமே கலந்துக் கொள்ள முடியும்.

இணையத்தில் உள்ள விவரங்களைப் பார்த்து இடங்களை சேர்க்க கூடாது.

போட்டியில் கலந்துக் கொள்ள: http://g.co/mapindia2013

இதையும் படிங்க:  ட்விட்டரில் பரவும் வைரஸ் - எச்சரிக்கை

3 thoughts on “Google Mapathon 2013 – பரிசுகளை வெல்லுங்கள்!”