Google+ Community உருவாக்குவது எப்படி?

சமூக இணையதளங்களின் போட்டி நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இந்த போட்டியின் காரணமாக அவைகள் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. தற்போது கூகுளின் சமூக தளமான கூகுள் ப்ளஸ் பேஸ்புக் க்ரூப் போன்று Google+ Community என்னும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Google+ Community உருவாக்குவது எப்படி?

கூகுள் ப்ளஸ் தளத்திற்கு சென்றால் அங்கே Communities என்ற பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யுங்கள்.

Create Community என்னும் பட்டனை க்ளிக் செய்யுங்கள்.

நீங்கள் பொது குழுமம் உருவாக்க நினைத்தால் Public என்பதையும், ரகசிய குழுமம் உருவாக்க நினைத்தால் Private என்பதையும் க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் குழுமத்திற்கான பெயரையும், உறுப்பினர்கள் சேர்வதற்கான அனுமதியையும் கொடுங்கள்.

உங்கள் குழுமத்திற்கான Tag Line, படம், குறிப்பு ஆகியவற்றை கொடுத்து Save என்பதை க்ளிக் செய்யுங்கள்.

பிறகு உங்கள் குழுமத்தை நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழுமத்தில் இருந்து பகிரும்போது குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பகிர முடியும். அதற்கு பதிலாக Address Bar-ல் உள்ள முகவரியை காப்பி செய்து உங்கள் ப்ரொபைலில் அனைவருக்கும் பகிரலாம்.

இது பற்றிய வீடியோ:

நான் உருவாக்கிய இரண்டு குழுமங்கள்:

Android Fans Club


தமிழ் ப்ளாக்கர்ஸ்

இதையும் படிங்க:  பூமி தினம் கொண்டாடும் கூகுள்

3 thoughts on “Google+ Community உருவாக்குவது எப்படி?”