Google+-ல் நண்பர்களை சேர்க்க எளிய வழி

அனைவருக்கும் என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்! நண்பர்கள் தினம் என்பதனாலோ என்னவோ, தற்போது கூகிள் ப்ளஸ்ஸில் நண்பர்களை இணைப்பதற்கு எளிய வழி கொடுத்துள்ளது கூகுள் தளம். இதன் மூலம் 150 நண்பர்களை உடனடியாக இணைக்கலாம்.

எப்படி இணைப்பது?

கூகிள் ப்ளஸ் தளத்தில் ஏற்கனவே உள்ளவர்கள், வலது புறம் Send Invitations என்பதை க்ளிக் செய்தால் அங்கு Invite People by Email என்று இருக்கும்.  அதன் மூலம் தான் இதுவரை நண்பர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வந்தோம். தற்போது அதற்கு கீழே share this link with a group of people என்று உங்களுக்காக ஒரு பிரத்யேக முகவரி கொடுத்திருப்பார்கள். அதனை நண்பர்களுக்கு அனுப்பினால், அதனை க்ளிக் செய்வதன் மூலம் நம்முடைய நண்பர்கள் உடனடியாக இணைய முடியும்.

இதுவரை இணையாதவர்கள், விருப்பம் இருந்தால் கீழ் உள்ள இணைப்பு மூலம் இணைந்துக் கொள்ளலாம். இந்த சுட்டி மூலம் 150 நபர்கள் மட்டுமே இணைய முடியும்.

https://plus.google.com/_/notifications/ngemlink?path=%2F%3Fgpinv%3DptzUJa4vo10%3AJJF0lo0gH8I

(இந்த இணைப்பிற்கு இன்னும் 48 அழைப்பிதழ்கள் மட்டுமே மீதம் உள்ளன)

இன்றைய இணையம்:

1. அடுத்த வருடத்திற்குள் கூகிள் ப்ளஸ் தளம் ட்விட்டர், லிங்க்ட் இன் (LinkedIn) தளங்களை விட அதிக பயனாளர்களை பெற்றுவிடும் என ஆய்வறிக்கை சொல்கிறது.

2. உலகளாவிய வலை(World Wide Web)-க்கு நேற்று இருபதாவது பிறந்த நாள். 

3. தேடுபொறி ரகசியங்களில் விடுபட்ட ஒன்று: மற்ற தளங்களில் உங்கள் தளத்தின் இணைப்பு இருந்தால் அது Backlinks என்று சொல்லியிருந்தேன். அதுமட்டுமல்லாமல், உங்கள் தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால், அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள். இது பற்றி இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் விரிவாக பகிர்கிறேன்.

இதையும் படிங்க:  தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள்

35 thoughts on “Google+-ல் நண்பர்களை சேர்க்க எளிய வழி”

  1. தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக.

    //உங்கள் சந்தேகங்களை இங்கு கேட்கலாம்.//—கேட்டுருவோம்… (அதுக்குத்தாம்ல பின்னூட்ட பெட்டிக்குள்ள இப்போ என்ட்டர் ஆகி இருக்கோம்.)

    //மறக்காமல் உங்கள் கருத்துக்களையும்,//—அதானே… (எழுதிக்கிட்டு இருக்கோம்ல…)

    ஆங்….அப்பால…. முக்கியமா ஒண்ணு கீது…

    //ஓட்டுக்களையும் பதிவு செய்யுங்கள்…!//—இதுதான் எப்படி..?????

    "பின்னூட்டப்பெட்டிக்குள் ஓட்டுப்போடுவது எப்படி" என்று அடுத்த "டெக்னிகல் பதிவில்" சொல்லித்தாங்க சகோ.அப்துல் பாஸித்..!!

    வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆ…

  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ

    _________

    என்ன ஆச்சு சகோ ஆஷிக்கிற்கு? ஏகத்துக்கும் காமெடில பிச்சு ஒதறுறாரு 🙂

  3. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 1

    தங்கள் மீது சாந்தி நிலவட்டுமாக.
    //

    தங்கள் மீதும் சாந்தி நிலவட்டுமாக.

    //
    "பின்னூட்டப்பெட்டிக்குள் ஓட்டுப்போடுவது எப்படி" என்று அடுத்த "டெக்னிகல் பதிவில்" சொல்லித்தாங்க சகோ.அப்துல் பாஸித்..!!

    வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டாஆஆஆஆஆஆ…//

    கருத்துக்களை கருத்து பெட்டியிலும், ஓட்டுக்களை ஓட்டு பட்டைகளிலும் போடுங்க சகோ!

    இப்ப எனக்கு ஒன்னு ஞாபகம் வருது:

    "இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்"

  4. //ஆமினா said… 3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    தகவல் பகிர்வுக்கு நன்றி சகோ//

    வ அலைக்கும் சலாம் சகோதரி!

    // என்ன ஆச்சு சகோ ஆஷிக்கிற்கு? ஏகத்துக்கும் காமெடில பிச்சு ஒதறுறாரு :)//

    சவூதில வெயில் 42 டிகிரியாம்…

    ஆனா அதுக்கும் ஆஷிக் சகோ. பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை சகோ.!

  5. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 8

    //"இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்"//

    ஓஹோ…

    யாரோ சொன்னாங்க "பிளாக்கர் நண்பன்" -ன்னு….

    அடாடா….

    இப்போ பேரை மாத்திட்டாங்களா….

    ….

    ….

    " மீனவ நண்பன் " -ன்னு….
    //

    முற்றும்.

    🙂 🙂 🙂

  6. //M.R said… 6

    நல்ல தகவல் நண்பரே

    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்//

    தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

  7. //koodal bala said… 12

    நண்பர்கள் தினத்தில் அது சார்ந்த பதிவு …நண்பர்கள் தின வாழ்த்துக்கள்….!//

    நன்றி நண்பா! தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பா!

  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நல்ல தகவலுக்கு நன்றி சகோ.

    //உங்கள் தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால், அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்//

    அப்படி அதிகமான இணைப்பு கொடுத்தால் அதனால் எதுவும் பாதிப்பு வருமா சகோ?

  9. நல்ல உபயோகமான தகவல் நண்பரே… உபயோகபடுத்திப்பார்த்துவிட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.. நண்பர் தின வாழ்த்துக்கள் நண்பரே!

  10. //சவூதில வெயில் 42 டிகிரியாம்…

    ஆனா அதுக்கும் ஆஷிக் சகோ. பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை சகோ.!//

    ஆமா ஆமா அது என்னமோ உண்மை தான்…. வெயிலுக்கும் காமெடிக்கும் சம்மந்தமே இல்ல…. சத்தியமா சம்மந்தம் இல்ல….. 🙂

    அண்ணாத்தே நோன்பு வச்சா இப்படி தான் பிச்சு ஒதறுவாராம் 🙂

  11. @Abdul Basith said…

    //முற்றும்.

    🙂 🙂 :)//—நன்றி.

    ஆனால்…

    தொடர்கிறதே…?!?

    இப்படி……………………………………………………..

    @ஆமினா said…

    //அண்ணாத்தே நோன்பு வச்சா இப்படி தான் பிச்சு ஒதறுவாராம் :)//

    இப்படி இவங்ககிட்டே வந்து என்னைப்பத்தி இப்படி சொன்னது யாராம்..?

    "இப்படி எந்த பக்கம் போனாலும் எல்லா பக்கமும் gate போட்டா என்னா பண்றதுன்னு" கேட்கிறார் நம்ம சகோ.ரஜின் என்ற ஒரு அப்பாவி..!

  12. @ அஸ்மா said…
    அலைக்கும் ஸலாம் வரஹ்…

    ////////////////////////////////////////////////////////////////////

    //உங்கள் தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால், அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்//

    //அப்படி அதிகமான இணைப்பு கொடுத்தால் அதனால் எதுவும் பாதிப்பு வருமா சகோ?//—அடாடா… என்னா ஒரு கவலை..!
    ////////////////////////////////////////////////////////////////////

    நான் எனது சமீபத்திய பதிவில் இப்படி 16 லிங்க் கொடுத்துள்ளேன். இரண்டு நாட்கள் ஆகின்றன. எனக்கு ஒன்றும் ஆகவில்லை. அல்ஹம்துலில்லாஹ், நான் நல்லாத்தான் இருக்கேன். 🙂

    நான் எவ்வளவோ தேவலாம். விக்கிபீடியா என்று ஒருத்தர் இருக்கார். அவர் பக்கம் சென்று திறந்து பாருங்கள்.

    அவர் தளத்துக்குள்ளேயேயான லிங்க் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை விட லிங்க் கொடுக்கப்படாமல் சுதந்திரமாக விடப்பட்ட வார்த்தைகளே அதிகம்..!!!

    //ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்//—இது விக்கிபீடியாவிற்கும் பொருந்துமா..?

    அல்லது… நம்மை மாதிரி 'பிளாக்ஸ்பாட் காரர்களுக்கு' மட்டும் பொருந்துமா..?

    விபரம் அறிய ஆவல்.

  13. //ஆமினா said… 15

    //சவூதில வெயில் 42 டிகிரியாம்…

    ஆனா அதுக்கும் ஆஷிக் சகோ. பின்னூட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை சகோ.!//

    ஆமா ஆமா அது என்னமோ உண்மை தான்…. வெயிலுக்கும் காமெடிக்கும் சம்மந்தமே இல்ல…. சத்தியமா சம்மந்தம் இல்ல….. 🙂

    அண்ணாத்தே நோன்பு வச்சா இப்படி தான் பிச்சு ஒதறுவாராம் :)//

    🙂 🙂 🙂

    முற்றும்.

  14. //மாய உலகம் said… 16

    நல்ல உபயோகமான தகவல் நண்பரே… உபயோகபடுத்திப்பார்த்துவிட்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேட்கிறேன்.. நண்பர் தின வாழ்த்துக்கள் நண்பரே!//

    நன்றி நண்பரே! தங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

  15. //பலே பிரபு said… 17

    நல்ல பதிவு நன்றி. நண்பரே வலைதளத்தில் Search Box வைக்கவும்.
    //

    ஆலோசனைக்கு நன்றி நண்பரே! தற்போது search box வைத்துவிட்டேன்.

    //இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்//

    தங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!

  16. //அஸ்மா said… 20

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… நல்ல தகவலுக்கு நன்றி சகோ.

    //உங்கள் தளத்திலேயே, ஒரு பதிவிலிருந்து இன்னொரு பதிவிற்கு இணைப்பு கொடுத்தால், அதுவும் கொடுக்கப்பட்ட பதிவிற்கு Backlink ஆகும். ஆனால் ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்//

    அப்படி அதிகமான இணைப்பு கொடுத்தால் அதனால் எதுவும் பாதிப்பு வருமா சகோ?//

    வ அலைக்கும் ஸலாம்.
    தங்கள் கேள்விக்கு நன்றி சகோதரி! இதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன்.

  17. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 22
    நான் எனது சமீபத்திய பதிவில் இப்படி 16 லிங்க் கொடுத்துள்ளேன். இரண்டு நாட்கள் ஆகின்றன. எனக்கு ஒன்றும் ஆகவில்லை//

    உங்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆனா உங்க ப்ளாக்கிற்கு?

    //விக்கிபீடியா என்று ஒருத்தர் இருக்கார். அவர் பக்கம் சென்று திறந்து பாருங்கள்.

    அவர் தளத்துக்குள்ளேயேயான லிங்க் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை விட லிங்க் கொடுக்கப்படாமல் சுதந்திரமாக விடப்பட்ட வார்த்தைகளே அதிகம்..!!!

    //ஒரே பதிவிலேயே அதிகமான இணைப்பு கொடுக்காதீர்கள்//—இது விக்கிபீடியாவிற்கும் பொருந்துமா..?

    அல்லது… நம்மை மாதிரி 'பிளாக்ஸ்பாட் காரர்களுக்கு' மட்டும் பொருந்துமா..?

    விபரம் அறிய ஆவல்.//

    அதை பற்றி படித்து வருகிறேன். இறைவன் நாடினால், விரைவில் அது பற்றி விரிவாக பதிவிடுகிறேன் சகோ.!

  18. //முஹம்மத் ஆஷிக் 'Citizen of World' said… 23

    @Abdul Basith said…

    //முற்றும்.

    🙂 🙂 :)//—நன்றி.

    ஆனால்…

    தொடர்கிறதே…?!?//

    மறுபடியும் முற்றும் போட்டாச்சு..

    🙂 🙂 🙂

  19. //sambathkumar.b said… 32

    மிக்க நன்றி நண்பரே..

    நானும் சேர்ந்து விட்டேன்… உங்கள் தயவால்

    சம்பத்.
    //

    மிக்க மகிழ்ச்சி நண்பா!