Facebook Application உருவாக்குவது எப்படி?

சமூக இணையதளங்களில் தனித்து விளங்குவது பேஸ்புக் தளம். நீங்கள் பேஸ்புக் பயன்படுத்தி வந்தால் அதில் உள்ள Facebook applications பற்றி நிச்சயம் தெரிந்திருக்கும். இந்த பதிவில் நமது தளத்திற்கு தனியாக ஒரு பேஸ்புக் அப்ளிகேசன் உருவாக்குவது எப்படி? என்று பார்ப்போம்.

இது ஒரு மீள்பதிவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இது பற்றி வேறொரு மிகவும் பயனுள்ள பதிவொன்றில் கூறியுள்ளேன். இனி வழிமுறைகளை பார்ப்போம்.

1. முதலில் https://developers.facebook.com/apps என்ற முகவரிக்கு செல்லுங்கள்.

2. அங்கே Create New App என்னும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.

3. பிறகு உங்கள் அப்ளிகேசன் பெயரையும், முகவரியையும் கொடுத்து Continue என்பதை கிளிக் செய்யுங்கள்.



App Name – உங்கள் தளத்தின் பெயரை கொடுங்கள். தமிழிலும் கொடுக்கலாம்.

App Namespace – அப்ளிகேசனுக்கான முகவரி பெயர். ஆங்கிலத்தில் மட்டும் தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு “bloggernanban

Web Hosting – இது நமக்கு தேவையில்லை. வெறுமனே விட்டுவிடுங்கள்.

4. பிறகு திரையில் தெரியும் எண்ணை பெட்டியில் கொடுத்து நீங்கள் மனிதர் தான் என்பதை நிரூபியுங்கள். 🙂 🙂 🙂

5. பிறகு வரும் பக்கத்தில் உங்கள் ப்ளாக் முகவரியையும், பிரிவையும் கொடுங்கள்.

App domain – நீங்கள் ப்ளாக்ஸ்பாட் முகவரியை பயன்படுத்தினால் blogspot.com என்று மட்டும் கொடுங்கள். சொந்த டொமைனாக இருந்தால் அதனை கொடுங்கள். உதாரணத்திற்கு, www.bloggernanban.com bloggernanban.com (www என்று சேர்க்கக் கூடாது)

Category – உங்கள் தளம் எந்த பிரிவை சார்ந்தது என்பதை தேர்ந்தெடுங்கள். எதுவுமில்லை எனில் other என்பதை தேர்ந்தெடுங்கள்.

6. அதே பக்கத்தில் “website with facebook login” என்ற இடத்தில் உங்கள் ப்ளாக் முகவரியை கொடுங்கள். உதாரணத்திற்கு “http://www.bloggernanban.com“, “http://bloggernnaban.blogspot.com

7. பிறகு Save Changes என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான்! உங்கள் தளத்திற்கான பேஸ்புக் அப்ளிகேசன் தயார்!

App ID என்பதற்கு பக்கத்தில் எண்கள் இருக்கும். அதனை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும்.

பேஸ்புக் அப்ளிகேசன் உருவக்கியாயிற்று. சரி, இதனை வைத்து என்ன செய்வது?

இறைவன் நாடினால் விரைவில் அதனைப் பற்றி பார்ப்போம்.

இதையும் படிங்க:  ஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி?

31 thoughts on “Facebook Application உருவாக்குவது எப்படி?”

  1. நிறைய பேர் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல். இந்தக் கடலில் இருந்து எத்தனை முத்துகள் வரப்போகின்றன? 😉

  2. நண்பரே, இவை recent screenshots-ஆ? நான் சமீபத்தில் ப்ளேட்பீடியாவிற்காக application உருவாக்கியபோது, நீங்கள் காட்டியுள்ள ஸ்டெப்ஸ் போல இருந்ததாய் ஞாபகம் இல்லை!

  3. நேற்று சுட சுட எடுத்தது.

    ஸ்டேப் ஒன்றில் உள்ள முகவரிக்கு சென்றீர்களா? இல்லை வேறேதாவது முகவரியா?

  4. அந்த முகவரிக்குத்தான் சென்றேன்! இப்போது மாறி விட்டது போலும்! 🙂 குழப்பியதற்கு மன்னிக்கவும்! 😀

  5. \பேஸ்புக் அப்ளிகேசன் உருவக்கியாயிற்று. சரி, இதனை வைத்து என்ன செய்வது?\
    \இதனுடைய உபயோகம் என்னவென்று அறிய காத்திருக்கிறேன் :)\

    \அவைகள் பற்றி தெரிவிக்க நானும் காத்திருக்கிறேன் :)\

  6. நண்பா இதனால் நமக்கு என்ன பயன் நண்பா….ஆவலுடன் எதிர்பார்கிறேன் உங்களுடைய அடுத்த பதிவை நோக்கி….

    தகவலுக்கு நன்றி நண்பா..

  7. "website with facebook login" அடுத்து உள்ள APPLICATION , MOPILE நமது ப்ளாக் முகவரி குடுக்க வேண்டுமா இல்லை வேற எதுவுமா சரியாய் கவனிக்காமல் அதை டெலிட் செய்து விட்டேன்

  8. அந்த ரெண்டில் எதுவும் செய்ய வேண்டாம். "website with facebook login" இது மட்டும் போதும்.

  9. அன்பு நண்பரே! ஒரு சிறு திருத்தம். இப்படி முகநூல் குறுஞ்செயலி (app) உருவாக்க, முதலில் நாம் டெவலப்பராக இந்தத் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த மாற்றம், நீங்கள் இந்தப் பதிவை எழுதிய பிற்பாடு ஏற்பட்டதா, முன்பேவா எனத் தெரியவில்லை. சற்றுமுன் நான் முயன்றபொழுது, முதல் படியில், வலது மேல் ஓரத்தில் நீங்கள் கூறியுள்ளபடி 'கிரியேட் நியூ ஆப்' என்று வரவில்லை. 'ரெஜிஸ்டர் ஆஸ் எ டெவலப்பர்' என்று இருந்தது. பதிவு செய்து கொண்ட பிறகுதான் 'கிரியேட் நியூ ஆப்' என்று வந்தது. உங்கள் மேலான கவனத்துக்காக!

  10. முன்பு அப்படி கேட்கவில்லை. இப்போது மாற்றியுள்ளது என்று நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி ஐயா!

  11. இந்தச் சிறு தகவலுக்கே நீங்கள் எங்களுக்கு நன்றி சொல்வதாக இருந்தால், நீங்கள் எங்களுக்குத் தரும் தகவல் உதவிகளுக்காக நாங்கள் உங்களுக்குக் கோவிலே கட்ட வேண்டும்!