ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை!

ப்ளாக்கர் நண்பன் தளத்தில் வெளிவந்த ஒரு நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால் உங்கள் தளத்தில் மால்வேர் இருக்கும் அபாயம் இருக்கிறது.

பதிவுகளை பட்டியலிடுவது எப்படி? என்ற பதிவில் இருந்த நிரலை நீங்கள் பயன்படுத்தியிருந்தால், கூகுள் க்ரோமில் அந்த பக்கத்தை பார்க்கும்போது மேலே படத்தில் உள்ளது போல மால்வேர் எச்சரிக்கை வரும்.

காரணம், அந்த பதிவில் குறிப்பிடப்பட்ட நிரல் abu-farhan.com தளத்திலிருந்த எடுக்கப்பட்ட நிரல் ஆகும். அபு ஃபர்ஹான் தளம் மால்வேறினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த தளத்தில் உள்ள நிரலை பயன்படுத்தினாலும் இந்த எச்சரிக்கை வருகிறது.

இதனை தவிர்க்க, அந்த நிரலை உங்கள் பக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கவும். அதற்கு பதிலாக வேறொரு நிரலையும் அந்த பதிவில் கொடுத்துள்ளேன்.

நான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால் மன்னிக்கவும்!

இதையும் படிங்க:  ப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி?

13 thoughts on “ப்ளாக்கரில் மால்வேர், எச்சரிக்கை!”

  1. என்றோ எடுத்து விட்டேன்… ஆனால் ஒரு பதிவிலோ, செய்தியாகவோ வெளியிட்டால், நீங்கள் தவறாக எடுத்துக் கொள்வீர்கள் என்று(ம்) நினைத்தேன்… இருந்தாலும் தெரிவித்து விட வேண்டும் என்று நினைத்தேன்… இந்தப் பதிவு பார்க்கும் போது தான் எனது ஞாபக சக்தி எந்தளவு உள்ளது என்றும் தெரிகிறது… உடனே அன்றே தெரிவித்து இருக்க வேண்டும்… நன்றி…

    இது உங்களின் தவறு இல்லை… Take it easy…

  2. //நான் பகிர்ந்த இந்த நிரலினால் உங்கள் ப்ளாக் பாதிக்கப்பட்டிருந்தால்// அல்லாஹ் உதவியால் "உங்கள் ப்ளாக்" என்றும் பாதிக்கப்படாது.

  3. வணக்கம்…

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6.html) சென்று பார்க்கவும்… நன்றி…

  4. அஸ்ஸலாமு அலைக்கும் …
    சகோ அந்த நிரலை எமது தளத்தில் பயன்படுத்தி இருந்தோம் ..
    நேற்று முதல் எமது தளம் பாதிக்கப்பட்டு உள்ளது….
    மீட்கும் வழிமுறைகள் தரவும்….
    வஸ்ஸலாம்…

  5. வணக்கம் ஐயா, எனது தளத்தை அனுக முடியவில்லை. உதவிதேவை… madurakavi.blogspot.com அவசியம் கவனித்து வழி செய்யுங்கள்.