யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட் செய்ய…

வீடியோ என்றாலே நமக்கெல்லாம் நினைவுக்கு வருபவற்றில் முதன்மையான ஒன்று யூட்யூப். யூட்யூப் தளத்திற்கு தற்போது மாதம் நூறு கோடி பயனாளர்கள் வருகை தருகிறார்கள். வீடியோக்களை பகிர உதவும் யூட்யூப் தளத்தில் புகைப்படங்களை பகிரலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

நமது புகைப்படங்களை Slideshow வீடியோவாக பகிரும் வசதியை யூட்யூப் தருகிறது.

யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட்செய்ய:

1. யூட்யூபில் வீடியோவை அப்லோட் செய்யும் பகுதிக்கு செல்லுங்கள்.

2. அங்கு வலது புறம் Photo Slideshow என்று இருக்கும். அதன் கீழுள்ள Create என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. உங்கள் புகைப்படங்களை அப்லோட் செய்யுங்கள்.

4. புகைப்படங்களை வரிசைப்படுத்துங்கள்.

5. முன்னோட்ட வீடியோவுக்கு கீழ் உள்ள அமைவுகளை உங்கள் விருப்பம் போல் மாற்றிக் கொள்ளுங்கள்.

6. விருப்பமிருந்தால்ஆடியோக்களை இலவசமாக இணைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யூட்யூபில் விளம்பரம் பெற்றிருந்தால் ஆடியோ சேர்க்க வேண்டாம். சேர்த்தால் அந்த வீடியோக்கான வருமானம் உங்களுக்கு வராது.

7. வீடியோ விவரங்களைக் கொடுத்து பப்ளிஷ் கொடுங்கள். அவ்வளவுதான்!

தெளிவாக புரிந்துக் கொள்ள வீடியோவை பார்க்கவும்.

மாதிரி வீடியோ:

இதையும் படிங்க:  யூட்யூப் Subscribe Widget-ஐ ப்ளாக்கில் வைக்க

1 thought on “யூட்யூபில் புகைப்படங்களை அப்லோட் செய்ய…”