கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி ஐந்து கோடி பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.
பேஸ்புகில் View As என்றொரு வசதி இருக்கிறது. அதாவது உங்கள் பேஸ்புக் ப்ரொபைல் பக்கத்தை மற்றவர்கள் பார்க்கும்போது எப்படி தெரியும்? என்று நாம் பார்க்கலாம். இந்த வசதியில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டினால் ஹேக்கர்கள் பேஸ்புக் கணக்கை ஹேக் செய்துள்ளார்கள்.
சமீபத்தில் நீங்கள் இந்த View As வசதியை பயன்படுத்தியிருந்தால் நீங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இப்படி பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளை லாக் அவுட் செய்துள்ளது பேஸ்புக். பேஸ்புக்கில் நுழையும்போது மீண்டும் லாகின் செய்ய வேண்டும். உடனடியாக நீங்கள் பேஸ்புக் பாஸ்வோர்ட் மாற்றுவது நல்லது.
தற்காப்புக்காக பேஸ்புக் நிறுவனம் View As வசதியை தற்காலிகமாகமுடக்கியுள்ளது.
You must log in to post a comment.