பேஸ்புக்கில் அனுப்பிய செய்தியை நீக்குவது எப்படி?

பேஸ்புக் மெசஞ்சரில் நாம் அனுப்பிய செய்திகளை நீக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பேஸ்புக்

பொதுவாக நாம் பல இடங்களில் தவறுகள் செய்வோம். ஒருவருக்கு அனுப்ப வேண்டிய செய்தியை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிடுவோம். அல்லது ஒருவருக்கு செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொன்றை தட்டச்சு செய்தோ, அல்லது ஏதாவது ஒன்றை Paste செய்யும்போது அதற்கு பதிலாக முந்தைய காபி செய்யப்பட்ட செய்தியை Paste செய்து அனுப்பிவிடுவோம். இந்த தவறை நான் அதிகமுறை செய்துள்ளேன்.

தற்போது நாம் தனி நபருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பிய செய்தியை, அனுப்பிய பத்து நிமிடத்திற்குள் நீக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

1. முதலில் Facebook Messenger அப்ளிகேஷனை Update செய்துக்கொள்ளுங்கள்.
பேஸ்புக்


2. பிறகு நீங்கள் அனுப்பிய செய்தியை Long Press செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.

3. அதில் Remove என்பதை தேர்வு செய்யுங்கள்

4. பிறகு "Remove For Everyone" என்பதை தேர்வு செய்யுங்கள்.

செய்தியை நீக்க வேண்டுமா? என கேட்கும். "Remove" என்பதை தேர்வு செய்யுங்கள்.

நீங்கள் அனுப்பிய செய்தி உங்கள் மொபைலிலும், அவரது மொபைலிலும் நீக்கப்பட்டிருக்கும்.

செய்தியை பெறப்பட்டவருக்கு "[பெயர்] Removed a message" என்று காட்டும்.

இந்த வசதியை ஏற்கனவே வாட்சப் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1 Comments