தமிழ் ப்ளாக்ஸ்பாட் தளங்களுக்கு ஆட்சென்ஸ்

கடந்த ஆட்சென்ஸ் பதிவில் ப்ளாக்ஸ்பாட் (blogspot) தளங்களுக்கு ஆட்சென்ஸ் கிடையாது என்றும், கஸ்டம் டொமைன் வாங்க வேண்டுமென்றும் கூறியிருந்தேன். அது தவறு, ப்ளாக்ஸ்பாட் தளங்களுக்கும் ஆட்சென்ஸ்  கிடைக்கும். எப்படி என்று இப்பதிவில் பார்ப்போம்.


ஆட்சென்ஸ் கணக்கில் Hosted Account, Non-Hosted Account என்று இரண்டு வகைகள் உள்ளது.

Hosted Account
- யூட்யூப், ப்ளாக்ஸ்பாட் போன்ற தளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் கணக்கு Hosted Account ஆகும். இவ்வாறு பெறப்படும் ஆட்சென்ஸ் கணக்கை ப்ளாக்கர் அல்லாத தளங்களில் பயன்படுத்த முடியாது. ஆனால் ஒரு Hosted கணக்கு மூலம் பல ப்ளாக்கர் தளங்களிலும் பயன்படுத்தலாம் (ஒவ்வொரு ப்ளாக்கர் தளங்களுக்கும் தனி தனியாக அப்ரூவல் வாங்க வேண்டும்).

Non-Hosted Account: .com, .net
போன்ற கஸ்டம் டொமைன்களைக்கொண்டு ஆட்சென்ஸ் தளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கும் கணக்கு Non-Hosted Account. இந்த கணக்கில் முதல் ஒரு தளத்திற்கு அப்ரூவல் கிடைத்துவிட்டால் போதும். அதனைக் கொண்டு எத்தனை தளங்களில் வேண்டுமானாலும் அப்ரூவல் வாங்காமலேயே பயன்படுத்தலாம்.

தமிழ் ப்ளாக்ஸ்பாட் தளங்களுக்கு ஆட்சென்ஸ் வாங்க:

முதலில் உங்கள் ப்ளாக்கர் Dashboard-ல் Earnings பகுதிக்கு சென்று Sign up for Adsense என்பதை க்ளிக் செய்யுங்கள்.


பிறகு உங்கள் நாட்டை தேர்வு செய்து, Yes, I have read and accept the agreement என்ற இடத்தில் டிக் செய்து Create Account என்பதை க்ளிக் செய்யுங்கள்.பிறகு முந்தைய பதிவில் சொன்னது போல உங்கள் Payment address Details கொடுக்கவும். எல்லாம் செய்த பின் உங்கள் ப்ளாக்கர் தளத்திற்கு சென்று கீழுள்ளவாறு காட்டும்.

உங்கள் தளத்தில் விளம்பரம் எவ்வாறு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்து Save Settings என்பதை க்ளிக் செய்யவும்.

உங்கள் ஆட்சென்ஸ் கணக்கு அப்ரூவல் ஆன பிறகு உங்கள் தளத்தில் விளம்பரங்கள் தெரியும்.

ஆட்சென்ஸ் மூலம் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்பதை இறைவன் நாடினால் அடுத்த பதிவில் பார்க்கலாம்.டிஸ்கி: தமிழ் தளங்களுக்கு ஆட்சென்ஸ் வந்துவிட்டதால் நான் மீண்டும் எழுத தொடங்கிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். ப்ளாக்கர் நண்பன் தளம் ஆட்சென்ஸால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் விளம்பரம் தெரியாது.

Post a Comment

10 Comments

 1. நமது முயற்சிக்கு ஏற்ற வருமானம் இல்லாவிட்டால் எந்த வேலையும் செய்வது கடினம்... கூகுல் அட்சன்ஸ் தழிம் தளங்களுக்கு கிடைத்திருப்பது எமக்கு பெரும் வரப்பிரஷாரதம்,.... அந்த கூகுல் அட்சன்ஸ் இனை உங்கள் தளத்தில் காண ஆவளுடன் எதிர்பார்க்கிறேன்......... அதனால் உங்கள் தளத்திலும் ஆட்சென்ஸ் போடவும் .... ஜெஷாக்குமுல்லாஹ்... அல்லாஹ் நாடினால்......

  ReplyDelete
 2. அப்படி ஆரம்பித்தாலும் பழைய டிரென்ட் திரும்ப வராதுதானே....

  இருந்தாலும் நான் ட்ரை பண்ரேன்....

  நன்றி

  ReplyDelete
 3. எனக்கு ஓகேன்னு நினைக்கிறேன்...? அடுத்து என்ன செய்யவேண்டும்... விளம்பர பகுதியில் விளம்பரங்கள் தானாக வருமா?... அக்கௌண்ட் விவரங்கள் எப்படி செய்ய வேண்டும் என்று சொல்லமுடியுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆட்சென்ஸ் கணக்கு அப்ரூவ் ஆகிவிட்டதா? ஆம், என்றால் EARNINGS பகுதியில் "Show ads on blog" என்ற இடத்தில் Yes கொடுத்து சேவ் செய்யுங்கள். விளம்பரம் தெரியும்.

   Delete
 4. என்னுடைய தளத்தில் earning ஆப்ஷன் இல்லை என்ன செய்வது தகவலுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. அனைத்து பிளாக்கிலும் இந்த ஆப்சன் இருக்கும். ஒருவேளை உங்களுக்கு "Your blog doesn't currently qualify for AdSense." என்று சொல்கிறதா?

   Delete
 5. Disapproved வந்தால் என்ன செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அதற்கான காரணத்தை சரி செய்துவிட்டு மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

   Delete
 6. good ... தகவலுக்கு நன்றி நண்பரே !

  ReplyDelete