2013-ல் சிறந்த 10 பதிவுகள்


2013-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் தனது பயணத்தை முடிக்கவிருக்கிறது. தற்போதைய உலக கலாசாரத்தின்படி டாப் டென் 2013 என்று எதையாவது பட்டியலிட்டாக வேண்டும். அதன்படி 2013-ல் சிறந்த பத்து பதிவுகளை பட்டியலிடுகிறேன்.

1. பேஸ்புக்கில் நடைபெறும் மிகப்பெரும் மோசடி

ஹேக்கர்கள் பேஸ்புக் அப்ப்ளிகேசன் மூலம் நமது பேஸ்புக் கணக்குகள் மூலம் குறிப்பிட்ட பக்கங்களை லைக் செய்ய வைத்து எப்படி சம்பாதிக்கிறார்கள்? என்பதைப் பற்றிய பதிவு.

2. கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!

ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். கடந்த வருடம் ஜாவாவில் ஏற்பட்ட மிகப்பெரிய பாதிப்பு பற்றிய பதிவு.

3. ஆண்ட்ராய்டில் தமிழ் - எழுத & படிக்க

ஸ்மார்ட்போன் உலகில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ள ஆண்ட்ராய்ட் மொபைல்/டேப்லட்களில் தமிழ் எழுத்துக்களை படிப்பது, எழுதுவது பற்றிய பதிவு.

4. கூகிளை அழிக்கும் Zergs, காப்பாற்ற தயாரா?

கூகிள் தேடலில் அவ்வப்போது சுவாரசியமான சில விளையாட்டுக்களை "Easter Eggs" என்ற பெயரில் அறிமுகப்படுத்தும். இந்த வருடம்  Zerg Rush என்னும் விளையாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதைப் பற்றிய பதிவு.

5. யூட்யூப் வீடியோவை டவுன்லோட் செய்ய

இணையத்தில் மட்டுமே பார்க்கக் கூடிய யூட்யூப் தளத்தில் உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பதற்கு பல வசதிகள் உள்ளன. அதில் எளிமையான இரண்டைப் பற்றிய பதிவு.

6. வாங்க.... ஏலியனுக்கு உதவி செய்யுங்க....

1947-இல் NEW TEXAS-இல் உள்ள ROSEWELL எனும் நகரிலுள்ள காட்டில் ஒரு பறக்கும் தட்டு விபத்துக்குள்ளானதாக செய்திகள் வெளியானது. அந்த நாளை நினைவு கூறும்விதமாக கூகுள் வெளியிட்ட விளையாட்டு டூடுல் பற்றிய பதிவு.

7. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?

ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி? என்பதைப் பற்றிய பதிவு.

8. தலைப்பை முதலில் எழுதுங்கள்...!

பதிவின் தலைப்பு தொடர்பாக சமீபத்தில் ப்ளாக்கர் செய்த மாற்றம் தொடர்பான பதிவு

9. கூகுள் ரகசியம் - கண்டுபிடிக்கலாம் வாங்க!

Google I/O என்பது வருடாவருடம் கூகுள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்ச்சியில் கூகுள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும். அது தொடர்பாக கூகுள் வெளியிட்ட ஈஸ்டர் எக் விளையாட்டைப் பற்றிய பதிவு.

10. மோட்டோ எக்ஸ் (Moto X) - கூகுளின் சொந்த மொபைல்

மோடோரோலா நிறுவனத்தை வாங்கிய கூகுள் நிறுவனம் கடந்த  ஆகஸ்ட் ஒன்றாம் தேதி Moto X என்ற புதிய ஆண்ட்ராய்ட் மொபைலை அறிமுகப்படுத்தியது. அது பற்றிய பதிவு

இது ப்ளாக்கர் நண்பன் தளத்தில் உங்களால் அதிகம் படிக்கப்பட்ட பட்டியல்.

Post a Comment

12 Comments

  1. பயனுள்ள தகவல்களே படிக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  2. உங்களின் தளம் சிறப்பான சேவையைத் தருகின்றது. உங்களின் அர்பணிப்புக்கு என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. நல்லதொரு தொகுப்பு நண்பா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சகோதரா .எம்மைப் பொறுத்தவரையில் உங்களது ஆக்கங்கள் யாவும் சிறப்பான முதலிடமே .தொடர்ந்தும் தங்களினது பகிர்வுகள் வலைத் தளத்தை அலங்கரிக்க வர வேண்டும் .மிக்க நன்றி சகோ பகிர்வுகளுக்கு .

    ReplyDelete
  5. பதிவு வரிசை பத்து !! அருமை பாஸித் அண்ணா !! :)

    ReplyDelete
  6. தொடர்ந்து உபயோகமான பதிவுகள் வெளியிட வாழ்த்துகள்.....

    ReplyDelete
  7. Nice Post Wish you all the best By http://wintvindia.com/

    ReplyDelete
  8. ப்ளாக்கர் நண்பனுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .
    பிறக்கப் போகும் இப் புத்தாண்டு தங்களுக்கும் தங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்வான ஆண்டாக
    மலரட்டும் .......

    ReplyDelete
  9. வணக்கம் அண்ணா, எனது பெயர் விக்ரம்...எனது வ்லைபூ http://www.pctricksworld1.com எனது வலைபூவில் ஒரு பிரட்சனை உள்ளது....லேபில் சென்றால் ஒரு சில பதிவுகள் மட்டுமே தெரிகிறது.... http://pctricksworld1.com/search/label/Games?max-results=5
    இங்கு சென்று பாருங்கள்..... நான் max-results உபயோகிப்பதாள் 5 போஸ்ட் தெரிகிறது.ஆனால் அதை 100 என்று மாட்றினால் கூட வெறும் 8 போஸ்ட் தான் தெரிகிறது...ஆனால் உண்மையில் அந்த லேபிலில் 55 பதிவுகள் உள்ளன.... இந்த பிரட்சனையை நிறைய பேரிடம் கூறிவிட்டேன்....யாராலும் சரி செய்ய முடியவில்லை.....தயவு செய்து உதவி செய்யுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் சகோ.!

      Delete
  10. நன்றி அண்ணா

    ReplyDelete