பிட்.. பைட்.. மெகாபைட்..! (09/10/13)


நீண்ட இடைவெளிக்கு பிறகு பிட்.. பைட்.. மெகாபைட்..! பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த வார தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இப்போது பார்ப்போம்.

Samsung Galaxy Round - முதல் வளைந்த ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy Round என்ற வளைந்த திரையுடன் கூடிய (Curved Display) முதல்  ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது  5.7 inch திரை, 13 மெகாபிக்ஸல் கேமரா, 2.3 GHz quad-core processor ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இது ஆண்ட்ராய்ட்  4.3 ஜெல்லிபீன் இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
நவம்பர் ஒன்றில் ஐபோன் 5S & ஐபோன் 5C

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மொபைல்களான ஐபோன் 5S & ஐபோன் 5C ஆகியவை இந்தியா உள்பட மேலும் பல நாடுகளில் வெளியிடப்படுகிறது.
நோக்கியா டேப்லட் - விரைவில் 

நோக்கியா நிறுவனம் விண்டோஸ் இயங்குதளத்துடன் கூடிய டேப்லட்டை தயாரித்து வருகிறது. வரும் அக்டோபர் 22-ஆம் தேதி அபுதாபியில் நடைபெறும் NOKIA WORLD நிகழ்ச்சியில் இதுபற்றிய அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே தேதியில் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஐபேடை வெளியிடலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தோற்றத்தில் யாஹூ


யாஹூ மின்னஞ்சல் தனது தோற்றத்தை மாற்றியுள்ளது. மேலும் மின்னஞ்சலின் கொள்ளளவை 1TB-ஆக உயர்த்தியுள்ளது.

கூகுளில் டிவி தொடர் ஒளிபரப்பு அட்டவணை 



பிரபல (ஆங்கில) தொலைக்காட்சி தொடரை கூகுளில் தேடினால் அதன் ஒளிபரப்பு நாட்களை உடனடியாக தெரிந்துக் கொள்ளலாம்.

Line அப்ளிகேசனுக்கு பத்து மில்லியன் பயனாளர்கள்

உலகமெங்குமுள்ள நமது சொந்தங்களுக்கு இலவசமாக செய்திகள் அனுப்புவதற்கும், பேசிக் கொள்வதற்கும் Line அப்ப்ளிகேசன் பயன்படுகின்றது. தற்போது இதற்கு இந்தியாவில் மட்டும் பத்து மில்லியன் பயனாளர்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த வருட இறுதிக்குள் இருபது மில்லியனைத் தொடும் எனவும் நம்புகிறது. அதே சமயம் இதன் போட்டி அப்ளிகேசனான Whatsapp அப்ளிகேசன் கடந்த மாதம் இந்தியாவில் மட்டும் இருபது மில்லியன் பயனாளர்களை பெற்றுவிட்டது.

இந்த வார சிரிப்பு படம்:



Log Out!

Post a Comment

7 Comments

  1. வணக்கம்
    தகவல் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. ரொம்ப நாளாச்சி... (முக நூலில் அதிகம் இருந்தால் எப்படி...? ஹிஹி)

    புதிய தோற்றத்தில் யாஹூ... சரியில்லை... மிகவும் slow...

    ReplyDelete
  3. சிறப்பான தகவல்... வாழ்த்துக்கள்... ப்ரோ..

    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)

    ReplyDelete
  4. வணக்கம் பாசித். line அப்ளிகேஷன் ல பேசுவது அவ்வளவு சரியா கேக்கமாட்டிது.யாஹு ரொம்ப சுலோ. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //புதிய தோற்றத்தில் யாஹூ... சரியில்லை... மிகவும் slow...//
    +1 Crore :)

    ReplyDelete
  6. அனைத்தும் அருமை அண்ணா

    யாகூ , Too late


    ஐபோன்5s க்கு பதிலா தவறுதலா சாம்சங் லிங்க் குடுதுட்டிங்க

    ReplyDelete
  7. லேட்டா வந்தாலும் பரவால்ல யாஹூ நல்லாதான் இருக்கு

    ReplyDelete