இண்டிப்ளாக்கர் விருதும், சின்ன இடைவெளியும்


இண்டிப்ளாக்கர் (IndiBlogger) -
தமிழில் தமிழ்மணம், இன்ட்லி, தமிழ் 10 போல ஆங்கிலத்தில் பிரபலமான இந்திய திரட்டி தளம். தற்போது இண்டிப்ளாக்கர் தளம் 2013-க்கான வலைப்பதிவு விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளில் ஏதாவது இரண்டு பிரிவுகளில் உங்கள் ப்ளாக்கை இணைக்கலாம். அத்துடன் மொழித் தொடர்பான பிரிவில் தனியாக சேர்க்கலாம்.

சமர்ப்பிக்கப்பட்ட தளங்கள் இண்டிப்ளாக்கர் நடுவர் குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு விருதுகள் அறிவிக்கப்படும்.

உங்கள் ப்ளாக்கை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி - ஜூலை 20
ஆகஸ்ட் 15-ஆம் தேதி விருதுகள் அறிவிக்கப்படும்.


வெற்றி பெறுவேனா என்றெல்லாம் தெரியாது... நானும் என் ப்ளாக்கை சமர்ப்பித்துள்ளேன்.

நீங்கள் கலந்துக் கொள்ள: http://www.indiblogger.in/iba/

ப்ளாக்கர் நண்பன் - ஒரு சின்ன இடைவெளி:


அலுவலக வேலை மாற்றம், நேரமின்மை, தூக்கமின்மை போன்ற பல காரணங்களுக்காக ப்ளாக்கர் நண்பன் தளத்திற்கு ஒரு மாத காலம் விடுமுறை விடலாம் என்று முடிவெடுத்துள்ளேன். இறைவன் நாடினால் ஆகஸ்ட் மாதம் உங்களை சந்திக்கிறேன்!

இதற்கிடையில் அவசரமான, அவசியமான செய்திகள் இருந்தால் பதிவிட முயற்சிக்கிறேன். மேலும் இந்த இடைவெளியில் உங்கள் சந்தேகங்களை தாராளமாக கருத்துப்பெட்டியில் கேட்கலாம். இறைவன் நாடினால் பதில் அளிக்கிறேன்.

Post a Comment

6 Comments

  1. சிறப்பான ஓய்வு மன நிறைவைத் தந்து மகிழ்விக்க வாழ்த்துக்கள் சகோ .
    எந்த சந்தர்ப்பத்திலும் எங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்கத் தவறாத
    உங்கள் நற் குணத்தைக் கண்டு பெருமை கொள்கின்றேன்.இறைவன்
    உங்களுக்கு எல்லா வகையிலும் துணையிருக்க வேண்டுகின்றேன் .
    மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வெற்றி பெற வாழ்த்துகள். ஓய்வு எடுத்துக்கொண்டு புதுத் தெம்புடன் வாங்க!

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. //இதற்கிடையில் அவசரமான, அவசியமான செய்திகள் இருந்தால் பதிவிட முயற்சிக்கிறேன்//
    மொதல்ல இப்டி ஒரு நெனப்பே வரக்கூடாது.விடுமுறைய அனுபவிச்சுட்டு வாங்க.விடுமுறையில் நடக்கும் சம்பவங்களையே ஒரு பதிவாக்கலாம்.01-ஆகஸ்டு-13 ல சந்திக்கலாம். அதுவர இந்த கமெண்டையே படிக்காம இருந்தா நெசமாவே செயிப்புதான்.

    ReplyDelete
  6. நண்பரே
    பிளாக்கின் பதிவுகளில் படங்களை இணைக்கும்போது ஒரு பார்டருடன் வருகிறது. (நான் பிளாக்கர் ப்யன் படுத்துகிறேன்) அதை நீக்கி படம் வெளியிட் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிவித்து உதவ வேண்டுமா?
    ரமணன்,

    ReplyDelete