பிட்.. பைட்... மெகாபைட்....! (22/06/2013)

Instagram for Video
புதன்கிழமைதோறும் வெளிவந்த "பிட்..பைட்..மெகாபைட்" பகுதி இனி சனிக்கிழமைதோறும் வெளிவரும். நீங்கள் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

இனி இந்த வாரம் (22/06/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

விக்கிபீடியா கட்டுரைப் போட்டி:

தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள முக்கிய கட்டுரைகளை விரிவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்தை உயர்த்த தொடர் கட்டுரைப் போட்டியினை விக்கிபீடியா தளம் அறிவித்துள்ளது. ஜூன் 2013 முதல் மே 2014 வரை 12 மாதங்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் மாதம் ஒரு வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அந்தந்த மாதங்களில் யார் அதிக கட்டுரைகளை தொகுத்தளித்தார்களோ அவர்களே வெற்றியாளர். இதற்கு பரிசு ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு ஈடான புத்தகங்கள்/மின் புத்தகங்கள்.

போட்டி பற்றி முழுமையாக பார்க்க: விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி

வீடியோவை அழகாக்க Instagram:நமது புகைப்படங்களுக்கு அழகிய வண்ணங்கள் சேர்த்து நண்பர்களுடன் பகிர்ந்துக் கொள்ள உதவும் Instagram அப்ளிகேசன் பற்றியும், அதனை 5000 கோடி ரூபாய்க்கு பேஸ்புக் வாங்கியது பற்றியும் முன்பு பார்த்தோம். தற்போது வீடியோக்களுக்கு வண்ணம் கொடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளது பேஸ்புக். இதன் மூலம் பதினைந்து நிமிட வீடியோவை ரெகார்ட் செய்து அதனை அழகுப்படுத்தி பகிர்ந்துக் கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் அப்ளிகேசன் நிறுவ:  ஆண்ட்ராய்ட் - ஐபோன்

(ஆண்ட்ராய்ட் ஜெல்லிபீன் மொபைல்களில் மட்டும் தான் இந்த வசதி உள்ளது. மற்ற பதிப்புகளுக்கு விரைவில் வரலாம்)

Tumblr-ஐ வாங்கிய யாஹூ

ப்ளாக்கர் போன்று நமக்கென்று வலைப்பதிவை உருவாக்க உதவும் தளம் Tumblr. மிகப்பிரபலமான இந்த தளத்தை யாஹூ நிறுவனம் 1.1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளது.

எதற்கும் இருக்கட்டுமே என்று 2011-ஆம் ஆண்டு நான் உருவாக்கிய Tumblr வலைப்பதிவு: http://basith27.tumblr.com/

இந்தியாவில் Android Nation Store:

ஆண்ட்ராய்ட் நேசன் ஸ்டோர் - இந்தோனேசியா

ஆண்ட்ராய்டின் மிகப்பெரும் சந்தையாக இந்தியா மாறிவருகிறது. இதனை உணர்ந்த கூகுள் இந்தியாவின் Spice Global நிறுவனத்துடன் இணைந்து விரைவில் Android Nation Store என்ற பெயரில் ஆண்ட்ராய்டுக்கான பிரத்யேக கடைகளை திறக்கவுள்ளது. இங்கு அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களும் விற்கப்படும். மேலும் இது ஆண்ட்ராய்ட் சேவை மையம் போல செயல்படும். இந்தோனேசியாவைத் தொடர்ந்து இரண்டாவதாக இந்தியாவில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் புதிய வசதிகள்:பேஸ்புக் தற்போது மூன்று புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Facebook Custom Thumbnail

 • Hashtag - ட்விட்டர் போன்று பேஸ்புக் தளமும் ஹாஷ்டேக் (Hashtag) வசதியை கொண்டுவந்துள்ளது. # கீயுடன் குறிச்சொல்லை சேர்த்து டைப் செய்து பகிர்ந்தால் அந்த குறிச்சொற்களை க்ளிக் செய்யலாம். க்ளிக் செய்தால் அந்த குறிச்சொற்கள் உள்ள பேஸ்புக் பகிர்வுகளைக் காட்டும்.
 • Image Comments - பேஸ்புக் பகிர்வுகளில் கருத்திடும் பெட்டியில்  புகைப்படங்களை பகிரலாம்.
 • Custom Thumbnail - பேஸ்புக்கில் சுட்டிகளை பகிரும் போது நமக்கு விருப்பமான படத்தை சிறுபடமாக (Thumbnail) பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். இந்த வசதி பேஸ்புக் பக்கங்களுக்கு மட்டும்!
இந்த வார "சிரிப்பு படம்:


Log Out!

5 கருத்துக்கள்:

 1. Custom Thumbnail - பேஸ்புக்கில் சுட்டிகளை பகிரும் போது நமக்கு விருப்பமான படத்தை சிறுபடமாக (Thumbnail) பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம்.---------இது தான் பாஸ் எனக்கு புரியல

  ReplyDelete
 2. புதிய தகவல்களுக்கு நன்றி...

  ReplyDelete
 3. ஃபேஸ்புக் பற்றிய தகவல் முற்றிலும் புதிது. அறிய தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 4. பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete

Creative Commons License இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.

Friends

Google+ Followers