பிட்.. பைட்... மெகாபைட்....! (05/06/2013)


இந்த வாரம் (05/06/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

Samsung Galaxy S4 Mini:

வரும் ஜூன் 20-ஆம் தேதி லண்டனில் சாம்சங் கேலக்ஸி S4 மினி அறிமுகம் ஆகலாம் என சொன்னேன் அல்லவா? சொன்ன மறுநாளே (வியாழன் அன்று) எஸ் 4 மினி மொபைலை அறிமுகப்படுத்திவிட்டது சாம்சங் நிறுவனம். இதன் சிறப்பம்சங்கள்,

*4.3-inch screen
*Android 4.2.2 Jelly Bean
*1.7GHz dual-core processor
*8-megapixel rear camera
*1.9MP front camera
*8GB of storage (expandable via microSD cards)

*2G & 3G
விலை மற்றும் விற்பனைக்கு வரும் நாள் அறிவிக்கப்படவில்லை.

 Vine - வீடியோ ட்வீட் - இப்போது ஆண்ட்ராய்டிலும்:ட்விட்டர் தளம் Vine என்ற ஆறு நொடிகளுக்குள்ளான வீடியோ ட்வீட் பகிரும்
ஐபோன் அப்ளிகேசன் வசதியை அறிவித்துள்ளது என்று முன்பு பிட்..பைட்..மெகாபைட் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தற்போது அந்த அப்ளிகேஷனை ஆண்ட்ராய்துக்காகவும் அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவிறக்கம் செய்ய, Vine for Android

விண்டோஸ் எட்டில் மீண்டும் Start பட்டன்:
மைக்ரோசாப்ட் விண்டோஸ் எட்டு இயங்குதளத்தில் ஸ்டார்ட் பட்டன் இல்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். பல்லாயிரக்கணக்கானோர் அந்த வசதியை மீண்டும் கொண்டுவர கோரினர். விண்டோஸ் எட்டின் அப்டேட் பதிப்பான விண்டோஸ் ப்ளூ என்றழைக்கப்பட்ட Windows 8.1 பதிப்பில் மீண்டும் ஸ்டார்ட் பட்டனைக் கொண்டுவரவுள்ளது.

புதிய ஜிமெயில்:

ஜிமெயில் தளம் தனது டிசைனை மாற்றியுள்ளது. அதனை தற்போது பெற settingsஐகானை அழுத்தி Configure inbox என்பதை அழுத்துங்கள். பிறகு நீங்களே புரிந்துக் கொள்வீர்கள்.

ஜூன் எட்டு - பெருசா எதையும் எதிர்பார்க்காதீங்க.... :) :) :)

இந்த வார "சிரிப்பு" படம்:


Log Out!

Post a Comment

3 Comments

  1. your use of vine application is very nice

    ReplyDelete
  2. THANK YOU FOR NEW INFORMATION.

    ReplyDelete
  3. புதிய தகவல்களுக்கு நன்றி

    ReplyDelete