இஸ்ரேல் ஆக்கிரமித்திருக்கும் பாலஸ்தீனம் நாடு பற்றி அதிகமானவர்கள் அறிந்திருப்பீர்கள். பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக கருதாமல் பிரதேசமாகவே கருதி வந்தது. கூகுளும் அதனை தனி பிரதேசமாகவே கருதிவந்தது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ஐநா சபை பாலஸ்தீனத்திற்கு 'உறுப்புரிமை அற்ற பார்வையாளர்' (Non-member observer state) என்ற அந்தஸ்தை வழங்கியது. இது சர்வதேச அரங்கில் பாலஸ்தீனத்திற்கு கிடைத்த அங்கீகாரமாகும்.
முன்பு கூகுள் தனது பாலஸ்தீன தளத்தில் Google லோகோவிற்கு கீழே "Palestinian Territories" என்று வைத்திருந்தது. தற்போது அதனை மாற்றி "Palestine" என்று மட்டும் வைத்துள்ளது.
இதுபற்றி கூகுள் தெரிவிக்கும்போது, “தனது அனைத்து தயாரிப்புகளிலும் "Palestinian Territories" என்பதை "Palestine" என்று மாற்றப்போவதாகவும், நாடுகளுக்கு பெயரிடும்போது பல்வேறு ஆதாரங்களையும், அதிகார பட்டயங்களையும் (Authorities) கணக்கில் எடுப்பதாகவும் தெரிவித்தது.
மேலும், இந்த விசயத்தில் UN, Icann [the Internet Corporation for Assigned Names and Numbers], ISO [International Organisation for Standardisation] மற்றும் பல சர்வதேச அமைப்புகளை பின்பற்றுவதாகவும் அறிவித்துள்ளது.
கூகுளின் இந்த அறிவிப்பை பாலஸ்தீனம் வரவேற்றுள்ளது! வழக்கம் போல இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
6 Comments
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteகூகுளின் இந்த முடிவு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று...
I welcome the discussion of Google about Palastine as a separate country.
ReplyDeleteThank you google !
இதே அந்தஸ்து ஈழத்திற்கு வந்தால் மிக்க மகிழ்ச்சி
ReplyDelete//வழக்கம் போல இஸ்ரேல் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.// இது மட்டும் தெரிஞ்ச விஷயம் தான
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநன்று வரவேற்போம். உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலைபெறவேண்டும்.
ReplyDelete