பேஸ்புக் நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவருகிறது. நாளுக்கு நாள் புத்தம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது நம்முடைய மகிழ்ச்சி, துக்கம், சோம்பல் போன்ற உணர்வுகளை பகிர்ந்துக் கொள்ள புதுவசதியை பேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மட்டுமின்றி நீங்கள் குடிப்பது (நோ..நோ..நோ... தப்பா நெனைக்க கூடாது), படிப்பது, பார்ப்பது, கேட்பது, சாப்பிடுவது ஆகியவற்றையும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
நாம் பேஸ்புக் ஸ்டேட்டஸ் எழுதும் பக்கத்தில் கீழே புதிதாக ஸ்மைலி ஐகான் இருக்கும். அதை க்ளிக் செய்யுங்கள். (இது இல்லை என்றால் கொஞ்ச நாட்கள் காத்திருங்கள்)
பிறகு Feeling, Watching, Reading, Listening to, Drinking, Eating என்று இருக்கும். அதில் எதையாவதை க்ளிக் செய்யுங்கள்.
பிறகு உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்.

இத்துடன் நீங்கள் போஸ்ட் செய்துவிடலாம் அல்லது ஸ்டேட்டஸ் எதையாவது எழுதி போஸ்ட் செய்யலாம்.
ஒரு வேளை நான் எழுதியிருப்பது புரியவில்லை என்றால் மிஸ்டர் டாம் சொல்வதைப் பாருங்கள்...
4 Comments
அசத்துகிறீர்கள் வாத்தியாரே!
ReplyDeletemikka nantri....
ReplyDeletethanks for sharing
ReplyDeleteஎனக்கு இன்னும் இந்த வசதி வரவில்லை. :(
ReplyDelete