ஆப்பிள் வழங்கும் 10,000$ பரிசு


ஆப்பிள் அப்ளிகேசன் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள அப்ளிகேசன்கள், விளையாட்டுக்களின் எண்ணிக்கை விரைவில் ஐந்தாயிரம் கோடியை தொடவிருக்கிறது.

இதனையொட்டி ஐந்தாயிரம் கோடியாவது அப்ளிகேசன்/விளையாட்டை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர் மதிப்புள்ள App Store Gift Card-ஐ பரிசாக அறிவித்துள்ளது. மேலும் அதற்கு அடுத்து முதல் ஐம்பது அப்ளிகேசன்/விளையாட்டுக்களை டவுன்லோட் செய்யும் பயனாளர்களுக்கு 500 அமெரிக்க டாலர் மதிப்புள்ள App Store அன்பளிப்பு அட்டையை வழங்கவுள்ளது.

இதன் மூலம் ஐபோன், ஐபேடுகளில் பணம் கட்டி வாங்கக் கூடிய அப்ளிகேசன்கள், விளையாட்டுக்கள், படங்கள், பாட்டுக்கள், புத்தகங்கள் ஆகியவற்றை தரவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

நீங்கள் ஆப்பிள் ஐபோன், ஐபேட் அல்லது ஐபோட் பயன்படுத்தி வந்தால் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! :)

முகவரி: http://bit.ly/16zBwCF

குறிப்பு: அலுவலக பணி காரணமாக தற்போது என்னால்தொடர்ந்து பதிவு எழுத முடியவில்ல.

Post a Comment

2 Comments

  1. : அலுவலக பணி காரணமாக தற்போது என்னால்தொடர்ந்து பதிவு எழுத முடியவில்ல. அப்படி சொல்லாதீங்க. உங்களாலதான் நான் ப்ளாக்கே ஆரம்பிச்சேன். உங்கள் சேவை பதிவுலகத்துக்கு தேவை.

    ReplyDelete
  2. ~~~~~~~~~~குறிப்பு: அலுவலக பணி காரணமாக தற்போது என்னால்தொடர்ந்து பதிவு எழுத முடியவில்ல~~~~~~~~~
    இது தெரியாமல் உங்களுக்கு மெயிலில் ஒரு சந்தேகம் கேட்டு விட்டேன்

    மன்னிக்கவும்

    ReplyDelete