ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றுவது எப்படி?

ப்ளாக்கருக்கான டெம்ப்ளேட்களை பல தளங்கள் இலவசமாக தருகின்றன. அவற்றை டவுன்லோட் செய்து, நமது ப்ளாக்கில் நிறுவுவது எப்படி? என்று இப்பதிவில் பார்ப்போம். புதியவர்களுக்காக இந்த பதிவு.

இலவச டெம்ப்ளேட்களை தரும் தளங்கள்:

1. http://btemplates.com/
2. http://blogger-templates.anshuldudeja.com/
3. http://splashytemplates.com/
4. http://bloggertemplateplace.com/
5. http://www.bloggertemplatesfree.com/

மேலும் பல தளங்களுக்கு, கூகிள்சர்ச்சில் "Free Blogger Templates" என டைப் செய்து பார்க்கவும்.

 டெம்ப்ளேட்களை டவுன்லோட் செய்வது எப்படி?

1. மேல் சொன்ன ஏதாவது ஒரு தளத்தில் சென்று உங்களுக்கு விருப்பமான டெம்ப்ளேட் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.

2. அங்கு "Preview" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டின் மாதிரியை பார்க்கலாம், அல்லது "Download" என்பதை க்ளிக் செய்து அந்த டெம்ப்ளேட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


3. ப்ளாக்கர் டெம்ப்ளேட்டின் Format .xml என்று இருக்கும். ஆனால் அதிகமான தளங்கள் டெம்ப்ளேட்களை zip செய்திருப்பார்கள். அதாவது நீங்கள் டவுன்லோட் செய்த டெம்ப்ளேட் .zip என்ற Format-ல் இருக்கும். அதனை Unzip செய்ய, அந்த ஃபைலின் மீது Right Click செய்து, "Extract Here" என்பதை க்ளிக் செய்யவும்.


4. பின் அது folder-ஆக இருந்தால், அதன் உள்ளே சென்று .xml என்று முடியும் ஃபைலை பார்க்கவும். அது தான் டெம்ப்ளேட் ஃபைல்.புதிய டெம்ப்ளேட்டை நிறுவுவது எப்படி?

1. Blogger Dashboard => Template பக்கத்திற்கு செல்லவும்.


2. அங்கு மேலே Backup/Restore பட்டனை க்ளிக் செய்து Download Full Template என்பதை கிளிக் செய்து ஒரு காப்பி எடுத்து வைத்து கொள்ளுங்கள். நாம் டெம்ப்ளேட்டில் மாற்றம் செய்யும் போது தவறு ஏதாவது ஏற்பட்டால் மீண்டும் அதை Upload செய்து கொள்ளலாம்.

3.  அதே இடத்தில் Upload a template from a file on your hard drive என்ற இடத்தில் "Browse" பட்டனை க்ளிக் செய்து, உங்கள் கணிணியில் நீங்கள் டவுன்லோட் செய்த புதிய டெம்ப்ளேட்டின் ஃபைலை தேர்வு செய்து, "Upload" என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.

5. பிறகு "Uploaded Successfully" என்று வரும். உங்கள் புதிய டெம்ப்ளேட் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளது என அர்த்தம். View Blog என்பதை க்ளிக் செய்து உங்கள் ப்ளாக்கின் புதிய தோற்றத்தைப் பார்க்கலாம்.

இது பற்றிய வீடியோ செய்முறை:Update: புதிய டாஷ்போர்டுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளது.

Post a Comment

25 Comments

 1. பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

  ReplyDelete
 2. //மாணவன் said... 1

  பயனுள்ள பிளாக்கர் டிப்ஸ் தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)
  //

  நன்றி, நண்பரே!

  ReplyDelete
 3. //Mohammed Sinan said... 3

  நன்றி..
  //

  நன்றி நண்பா!

  ReplyDelete
 4. நாம் புதிய டெம்ப்ளேட்டை மாற்றினால் பழைய டெம்ப்ளேட்டில் செய்துள்ள மாற்றங்கள், உதாரணத்திற்கு நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது போன்றவை, ஓட்டுப்பட்டைகள் போய்விடுமா?

  ReplyDelete
  Replies
  1. முடியும் நண்பரே

   Delete
 5. //Heart Rider said... 5

  நாம் புதிய டெம்ப்ளேட்டை மாற்றினால் பழைய டெம்ப்ளேட்டில் செய்துள்ள மாற்றங்கள், உதாரணத்திற்கு நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது போன்றவை, ஓட்டுப்பட்டைகள் போய்விடுமா?//

  Edit Html-ல் செய்த மாற்றங்கள் அனைத்தும் (நமது பின்னூட்டங்கள் தனியாக தெரிவது உள்பட) போய்விடும் நண்பா! அதனை மறுபடியும் நிறுவ வேண்டும்.

  ReplyDelete
 6. அஸ்ஸலாமு அலைக்கும்...

  பாஸ்,கைய கொடுங்க இவ்ளோ நாளா zip file மாத்ததெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.BLOGGER TIPS இந்தளவு தெளிவா யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
 7. //ஐத்ருஸ் said... 7

  அஸ்ஸலாமு அலைக்கும்...

  பாஸ்,கைய கொடுங்க இவ்ளோ நாளா zip file மாத்ததெரியாம முழிச்சிட்டு இருந்தேன்.BLOGGER TIPS இந்தளவு தெளிவா யாரும் சொல்லிக் கொடுக்க முடியாது.உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....
  //

  வ அலைக்கும் ஸலாம்

  நன்றி நண்பா!

  ReplyDelete
 8. பயனுள்ள பகிர்வு பாசித்.....

  ReplyDelete
 9. மிக உபயோகமான பதிவு. வெவ்வேறு template களை எப்படி நிறைய பேர் உபயோகிக்கிறார்கள் என்பது புரிந்தது. நன்றி.

  ReplyDelete
 10. பயனுள்ள பதிவு... விளக்கத்திற்கு நன்றி...

  ReplyDelete
 11. மிகவும் பயனுள்ளது.. தங்கள் பதிவு விளக்கமாக இருந்தது..
  நன்றி

  ReplyDelete
 12. Very clear information Brother

  ReplyDelete
 13. Blogger nanban. 1 doubt. Blog name a blogspot.com nu varama website name a create panlam nu unga blog la padichen. Adhuku panam kattanum nu sonninga. Adhu epadi pannanum nu solringala?

  ReplyDelete
  Replies
  1. http://www.bloggernanban.com/2012/02/how-to-buy-custom-domain.html

   http://www.bloggernanban.com/2013/03/blogger-custom-domain-error.html

   Delete
 14. பயனுள்ள பதிவு . விளக்கம் அருமை

  ReplyDelete
 15. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 16. உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை. என் போன்ற புதியவர்களை தொடர்ந்து எழுத ஊக்கமளிக்கிறது.பதிவுலகம் இருக்கும்வரை உத்கள் பெயர் இருக்கும்.

  ReplyDelete
 17. நண்பருக்கு
  தங்களின் மேலான அறிவுரைக்கு நன்றி. என்னுடைய பிளாக்கை அப்படி மாற்றினேன். ஒரு சந்தேகம். ஒவ்வொரு பதிவைப் பறிறி ஒரு முன்னோட்டம் அருமையாக கொடுக்கிறது. ஆனால் அதன் கீழே ஒரு படம் ஒன்று இருக்கிறது. அது நான் அல்ல. அந்தப் படத்தை எவ்வாறு மாற்றுவது.

  ReplyDelete
  Replies
  1. ப்ளாக் முகவரி தர முடியுமா சார்? அப்படியே ஸ்க்ரீன்ஷாட் அனுப்பினால் நல்லது.

   மின்னஞ்சல் முகவரி: basith27[at]gmail.com

   Delete
 18. உங்கள் ஒவ்வொரு பதிவும் அருமை நண்பா,
  நான் இதில் உள்ளது போல் எனது bloger மாற்றினேன் அது சரிவந்தது,நான் இவ்வாறு பல தடவை எனது Template மாற்றினேன்,ஆனால் தற்போது புதிய Template ஒன்ரை மறுபடுயும் நிறுவ என்னால் முடிய வில்லை ,நிறுவ முயன்ர போது இவ்வாறு செய்தி காட்டுகிரது We were unable to save your template.
  Your template could not be parsed as it is not well-formed. Please make sure all XML elements are closed properly. XML error message:
  (SyntaxError) __gwt$exception: : Unexpected token < இதனை எவ்வாறு சரி செய்வது ?

  ReplyDelete
 19. நன்றி நண்பா

  ReplyDelete