இனி அனைவருக்கும் புதிய ஜிமெயில்


ஜிமெயில் கடந்த அக்டோபர் மாதம் எளிதாக மெயில் அனுப்புவதற்கு புதிய வசதியை (New Compose) கொண்டுவந்தது. இதைப் பற்றி இனி ஈஸியா (ஜி)மெயில் அனுப்பலாம் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது இந்த வசதியை கட்டாயமாக  கொண்டுவந்துள்ளது.

தற்போது நீங்கள் ஜிமெயிலுக்கு உள்நுழையும் போதே இது பற்றி அறிவிப்பு காட்டும். Continue கொடுத்து பயன்படுத்தலாம்.

இந்த புதிய முறையில், Compose என்பதை க்ளிக் செய்தால் Pop-Up விண்டோவில் மெயில் அனுப்பலாம்.


விண்டோவின் கீழே, முன்பு மெயிலில் உள்ள வசதிகள் இருக்கும். அதை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்மைலீஸ் உள்ளதைப் பற்றி ஜிமெயில் ஆயிரம் - அறிவோம் ஆயிரம்
என்ற பதிவில் கூட பார்த்தோம்.

இந்த புதிய முறை பிடிக்கவில்லை என்றால், தற்காலிகமாக, பெட்டியின் கீழே More Options பட்டனை க்ளிக் செய்து, "Temporarily switch back to old compose" என்பதை க்ளிக் செய்து பழைய முறைக்கு மாறிக் கொள்ளலாம்.

கவனிக்க, தற்காலிகமாக மட்டுமே மாறலாம். விரைவில் பழைய முறையை நீக்கவுள்ளது.

Pop-Up விண்டோவில் மெயில் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு?

Post a Comment

12 Comments

  1. சிரமமாகத்தான் இருக்கிறது... பழக வேண்டும்...

    ReplyDelete
  2. Pop-Up விண்டோவில் மெயில் எழுதுவது எனக்கும் பிடிக்கவில்லை.

    ReplyDelete
  3. இதுவும் ஒரு நல்லது என நினைக்கிறேன் .

    பகிர்வுக்கு நன்றிகள் நண்பா

    ReplyDelete
  4. புதிய தகவல்! ஜி மெயில் சென்று பார்க்கிறேன்! அப்புறம் பிடிக்கிறதா என்று சொல்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. googular vaippathuthaan sattam.use panra namma permission illama changes...old compose.....kekka yaarumilla

    ReplyDelete
  6. புதிய செய்தி முயற்சி பண்ணுவோம்

    ReplyDelete
  7. இந்த Pop-Up விண்டோ சொறித்தனமா இருக்கு

    நான் ஸ்விட்ச் பேக் செய்து பழைய முறையில் தான் மெயில் கம்போஸ் செய்கிறேன்...

    கூகிள் மட்டுமில்லைங்க எந்த ஒரு கம்பனியும் இப்படித்தான் . நன்றாக ஹிட் ஆகி இருக்கும் தங்கள் தயாரிப்புக்களை திடீரென்று மாற்றுவார்கள் .. சின்ன சின்ன மாற்றங்கள் செய்வார்கள் .அந்த மாற்றங்கள் சில சமயங்களில் பழையதை விட சிறப்பாக இருக்கும் சில சமயம் அந்த மாற்றம் நன்றாக இருக்காது .

    உதாரணத்திற்கு ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக் , மாருதி ஸ்விப்ட் கார் , இப்படி சொல்லலாம் .

    சின்ன குழந்தைகளை சொல்வார்களே நொட்டு கையை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியா ? நோண்டிக்கிடே இருக்கியே ! அதுமாதிரி இந்த ஜிமெயில் ல நோண்டி கெடுத்து வெச்சிருக்காங்க :-(

    ReplyDelete
  8. Enna dhan irundhalum yahoo mail madhiri varadhu. Gmail waste. Yahoo mail ipo stylish'a pink color la mobile view pc view kum ore madhiri kondu vandhurukanga. Android la yahoo mail apps a use pannavangaluku adhu theriyum. Thavira gmail open pannale theva illadha ad mails naraya varudhu adha 100% stop pannave mudiyala. Yahoo la indha thollai ellam kadayadhu. So yahoo mail dhan better nu enaku thonudhu

    ReplyDelete
  9. //Pop-Up விண்டோவில் மெயில் எழுதுவது எனக்கு பிடிக்கவில்லை. உங்களுக்கு?// Same Blood ...

    ReplyDelete