ப்ளாக்கரில் கஸ்டம் டொமைன் பிரச்சனை


ப்ளாக்கர் தளத்தில் புதிதாக ப்ளாக் ஒன்றை தொடங்கினால் அதன் முகவரி நீங்கள் கொடுக்கும் பெயருடன் சேர்த்து .blogspot.om என்று முடியும். இதற்கு பதிலாக .blogspot என்றில்லாமல் வெறும் .com, .net போன்ற முகவரிகளை பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தலாம். இதற்கு கஸ்டம் டொமைன் (Custom Domain) என்று பெயர்.

இது பற்றி ஏற்கனவே பார்த்தோமே? இப்போ எதற்கு என்று கேள்வி எழுகிறதா? கீழே படியுங்கள்.

ப்ளாக்கர் தளம் மூலம் நீங்கள் புதிதாக டொமைன் வாங்கினால் சில பிரச்சனைகள் வரும்.

1. Domain வாங்கிய பிறகு உங்கள் பழைய முகவரி தானாக புது முகவரிக்கு Redirect ஆகாது.

2. கூகுள் மூலம் வரும் மின்னஞ்சலில் அட்மின் கணக்கு துவங்க ஒரு இணைப்பு இருக்கும். அதை க்ளிக் செய்தால் "Server error: We are unable to process your request at this time, please try again later." என்று பிழை காட்டும்.

3. Blogger Dashboard => Settings=> Publishing பகுதிக்கு சென்று நீங்கள் வாங்கிய முகவரியை கொடுத்தால் "We have not been able to verify your authority to this domain" என்று பிழை காட்டும்.

இதனை சரி செய்வது எப்படி? கீழுள்ள வீடியோவில் தெளிவாக (?) குறிப்பிட்டுள்ளேன்.



காரணங்களும், வழிமுறைகளும்:

ப்ளாக்கர் மூலம் நாம் டொமைன் வாங்கும் போது அது Google Apps மூலம் நடைபெறுகிறது. முன்பு ஒரு டொமைனுக்கு எத்தனை பயனாளர்களை(Users) வேண்டுமானாலும் சேர்க்கலாம். சமீபத்தில் அதை மாற்றிவிட்டு ஒரு டொமைனுக்கு ஒரு கணக்கு மட்டுமே கொடுத்தது. கூடுதலாக பயனாளர்களை சேர்க்க வேண்டுமானால் பணம் கட்டி வாங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி ப்ளாக்கர் மூலம் Domain வாங்கும் போது தானாக bloggeradmin என்ற பெயரில் அதுவே நமக்கான ஒரு கணக்கை உருவாக்கிவிடுகிறது. அதனால் தான்மின்னஞ்சலில் வரும் Link மூலம் நம்மால் புதிய கணக்கை உருவாக்க முடிவதில்லை.

சரி, நமக்கான கணக்கு உருவாகிவிட்டது. அதன் கடவுச்சொல்? அதை சொல்லலியே!

இந்த பிரச்னையை சரி செய்ய வீடியோவை பாருங்கள். பார்க்க மாட்டேன் என்று அடம்பிடிப்பவர்களுக்காக....

செயல் ஒன்று:

1. Blogger Dashboard => Settings=> Publishing பகுதிக்கு செல்லுங்கள்.

2. அங்கு உங்கள் ப்ளாக் முகவரிக்கு கீழே Add Custom Domain என்பதை க்ளிக் செய்யுங்கள்.

3. Switch to advanced settings என்பதை க்ளிக் செய்யுங்கள்.

4. நீங்கள் வாங்கிய டொமைன் முகவரியை கொடுத்து Save கொடுங்கள்.

இப்போது "We have not been able to verify your authority to this domain" என்ற பிழை காட்டும். மேலும் உங்கள் டொமைன் தான் என்பதை உறுதி செய்ய சிலவற்றை உங்கள் டொமைனில் சேர்க்க சொல்லும். அவைகள் CNAME records எனப்படும்.

 செயல் இரண்டு:

CNAME records-ஐ சேர்க்க நமது டொமைன் Control Panel முகவரிக்கு செல்ல வேண்டும். கூகுளிடமிருந்து வந்த மின்னஞ்சலில் இந்த முகவரி இருக்கும்.

உதாரணத்திற்கு, https://www.google.com/a/yourdomain.com

உங்களுக்கான பயனர் பெயர் - bloggeradmin

கடவுச்சொல் - ??????

Password தெரியாததால் அந்த பக்கத்தில் Can't access your account? என்பதை க்ளிக் செய்து, reset your administrator password என்பதை க்ளிக் செய்யுங்கள்.

உங்கள் மின்னஞ்சலுக்கு இணைப்பு ஒன்று வரும். அதன் மூலம் கடவுச்சொல்லை மாற்றிக் கொள்ளலாம்.

செயல் மூன்று:

1. https://www.google.com/a/yourdomain.com என்ற உங்கள் டொமைன் முகவரிக்கு சென்று புது கடவுச்சொல் மூலம் உள்நுழையுங்கள்.

2. Domain Setting => Domain Names பகுதிக்கு செல்லுங்கள்.

3. Advanced DNS setting பகுதிக்கு செல்லுங்கள்.

4. அங்கே உங்கள் டொமைனுக்கான பிரத்யேக Username & Password இருக்கும். DNS Console பகுதிக்கான இணைப்பும் இருக்கும்.

5. DNS Console பகுதிக்கு சென்று, Username & Password மூலம் உள்நுழையுங்கள்.

6. அங்கே சென்று செயல் ஒன்றில் ப்ளாக்கர் நமக்கு கொடுத்த CNAME record-களில் இரண்டாவதை மட்டும் கொடுத்து Save கொடுங்கள்.

பிறகு பிரச்சனை சரியாகிவிடும்.

ஏதாவது புரிந்ததா? இல்லையென்றால் வீடியோவை பாருங்கள். புரிந்துவிடும்.

Post a Comment

18 Comments

  1. புதிதாக டொமைன் வாங்கும் அனைவரும் அறிய வேண்டிய தகவல்.

    ReplyDelete
  2. Add custome domain... I can't able to locate this... Wat to do......

    ReplyDelete
  3. பலருக்கும் பயன்படும் நண்பரே

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி பாசித்....

    ReplyDelete
  5. நல்ல பயனுள்ள தகவல்.
    நன்றி .

    ReplyDelete
  6. அருமையான தகவல் சகோ ! மிக்க நன்றி பகிர்வுக்கு .
    மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  7. தகவல் பதிவு . நன்றி

    ReplyDelete
  8. அருமையான பதிவு, என் தளத்தில் www போடாவிடில் தளம் தெரிய மாட்டேங்குது, எப்படி சரி செய்வது.

    ReplyDelete
  9. பயனுள்ள பதிவு

    நன்றி சகோ.

    ReplyDelete
  10. என்னுடைய ப்ளாக்கர் இல் .blogspot னு தான் இருக்கின்றது.
    நான் இதில் என்னுடைய Facebook பக்கத்தினை இணைக்க அதாவது like பட்டேன் ஐ எவ்வாறு சேர்ப்பது ....

    பதில் சொல்லவும் ...

    ReplyDelete
    Replies
    1. http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

      இந்த பதிவில் கோட் உள்ளது.

      Delete
  11. vanakkam sir,
    naan bigrock moolam domain vaanginen.adhai blogger il conect seiyumbothu CNAME record il -ADCNAME record seithaal indha error message varugiradhu.idhai yappadi sari seivathu.my id-gvsivam@gmail.com
    Error Message: A,NS,MX,AAAA record Exists having same name. Please Check For Record Conflicts.

    ReplyDelete
  12. i have purchace domain from bigrock.com adhai blogger ku redirect seiyumbothu CNAME record ADD seiyumbothu indha error varugiradhu.idhai yasppadi sari seivathu.my id gvsivam@gmail.com
    Error Message: A,NS,MX,AAAA record Exists having same name. Please Check For Record Conflicts.

    ReplyDelete
  13. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ரூபக் ராம் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கனவு மெய்ப்பட

    வலைச்சர தள இணைப்பு : பனியைத் தேடி - தலைநகரில்

    ReplyDelete
  14. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது...வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete