பிட்.. பைட்... மெகாபைட்....! (20/03/2013)

Google Keep
இந்த வாரம் (20/03/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

Angry Birds Toons:Angry Birds விளையாட்டை தயாரித்த ரோவியோ நிறுவனத்தினர் Angry Birds Toons என்னும் கார்டூன் தொடரை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு ஞாயிறு கிழமையும் ஆண்ட்ராய்ட், ஐபோன், விண்டோஸ் போன்களில் ஆங்க்ரி பேர்ட்ஸ் விளையாட்டில் இலவசமாக பார்க்கலாம்.

Google Keep:


மொபைல், டேப்லட், கணினிகளில் குறிப்புகளை எழுதிக் கொள்ள உதவும் Evernote அப்ளிகேசனுக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் Google Keep என்ற சேவையை கொண்டுவரப் போகிறது. இன்னும் அறிமுகப்படுத்தப்படாத அந்த சேவை இந்த வாரம் தவறுதலாக வெளிவந்துவிட்டது. பிறகு சில மணி நேரங்களிலேயே அதனை நீக்கிவிட்டது கூகுள். இருந்தாலும் Android Police தளத்தினர் ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவிட்டனர். இந்த செய்தி உண்மை தான் என்பதற்கு பதிவின் முதலில் உள்ள கூகுள் கீப் லோகோ-வை சொல்லலாம். காரணம் இந்த படம் http://www.google.com/images/icons/product/keep-512.png என்ற முகவரியில் உள்ளது.

சாம்சங் ஸ்மார்ட் வாட்ச்:

Samsung நிறுவனம் ஆண்ட்ராய்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் வாட்ச்சை தயாரித்து வருவதாக முன்பு பார்த்தோம் அல்லவா? அதை உறுதி செய்துள்ளார் சாம்சங் நிறுவனத்தின் Vice President. Smart Watch தயாரிப்பில் சாம்சங் நிறுவனம் ஆப்பிளை காப்பி அடிக்கிறது என்று நீங்கள் கருதினால் அது தவறு. இதற்கு முன்பே Pebble நிறுவனம் தயாரித்த ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துவிட்டது.

Pebble Smart Watch பற்றி அறிய Pebble: E-Paper Watch for iPhone and Android

Youtube Partner:

யூட்யூப் மூலம் பணம் சம்பாதிக்க Youtube Partner வசதி பயன்படுகிறது. குறிப்பிட்ட சில நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமே இவ்வசதியை பயன்படுத்த முடியும். தற்போது இவ்வசதி UAE, Saudi Arabia மற்றும் Egypt நாடுகளில் உள்ளவர்களுக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Feedly - 500,000 புதிய உறுப்பினர்கள்:

கூகுள் நிறுவனம் தனது ரீடர் சேவையை நிறுத்தப் போவதாக பார்த்தோம் அல்லவா? அதனால் லட்சக்கணக்கான பயனர்கள் ரீடருக்கு மாற்று சேவைகளுக்கு மாறுகின்றனர். ரீடருக்கு மாற்றாக உள்ளவற்றில் ஒன்றான Feedly தளத்தில் தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான புதிய பயனாளர்கள் இணைந்துள்ளனர்.

Google News:

Apple Newsstand
ஐபோன் மற்றும் ஐபேட்களில் Newsstand என்றொரு வசதி இருக்கிறது. இதில் தினசரி, வார, மாத இதழ்களை சந்தா கட்டி படித்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட இது போன்றதொரு வசதியை Google Play News என்ற பெயரில் கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டில் கொண்டுவரப் போகிறது.

இந்த வாரம் சிரிப்பு படம்:


Log Out!

Post a Comment

10 Comments


 1. நன்றி...

  சிரிப்பு படம் : செம...

  ReplyDelete
 2. உங்களுடைய பதிவுகள் நல்ல தகவல்கள் கொடுப்பவையாக இருக்கின்றன.
  எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
  blogspotஇல் நமக்கு reblog வசதி இருக்கிறதா? எப்படி அதை உபயோகப்படுத்துவது? கொஞ்சம் விளக்குவீர்களா?

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. Reblog என்றால்? நமது ப்ளாக்கை வேறு ப்ளாக்கிற்கு மாற்றுவதா? அல்லது மீள்பதிவு இடுதலா?

   Delete
  2. ஆவது ஏற்கனவே நான் எப்பொழுதோ எழுதி Publish செய்ததை மீண்டும் பதிவு செய்ய விழைகிறேன்.(வேறு ப்ளாக் எல்லாம் இல்லை)
   மீள் பதிவு தான் என்று நினைக்கிறேன்.

   Delete
  3. பதிவை எடிட் செய்து, வலதுபுறம் Published on என்பதை க்ளிக் செய்யுங்கள்.

   அதில் automatic என்பதை தேர்வு செய்து Done கொடுங்கள்.

   பிறகு Save கொடுங்கள். இதனால் உங்கள் பழைய பதிவு உங்கள் ப்ளாக்கில் முதலாவதாக வந்துவிடும்.

   ஆனால் மற்றவர்களின் டாஷ்போர்டில் அப்டேட் ஆகாது!

   Delete
 3. அண்ணா feedburner ல் Count " 0 " என்று காட்டுகிறதே என்ன பிரச்சினை..அனைத்து தளங்களிலும் 0 என்றுதான் காட்டுகிறது...

  ReplyDelete
  Replies
  1. இந்த பிரச்சனை முன்பும் வந்தது. விரைவில் சரியாகிவிடும்.

   Delete
 4. மிக்க நன்றிங்க....

  ReplyDelete
 5. மிக்க நன்றிங்க....

  ReplyDelete