இந்த வாரம் (06/03/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.
இன்று கூகுள் ப்ளே பிறந்த நாள்:
கடந்த வருடம் இதே நாள் கூகுள் தனது ஆண்ட்ராய்ட் மார்க்கெட்டை கூகுள் ப்ளே என்று மாற்றியது. இதைப் பற்றி கூகிளின் புதிய வசதி: Google Play என்ற பதிவில் பார்த்தோம். கூகுள் ப்ளே தளத்திற்கு இன்று முதல் பிறந்தநாள். அதனையொட்டி சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது.
அதனைக் காண: Our Gifts To You
Samsung Galaxy SIV - டீசர் வீடியோ:
வரும் 14-ஆம் தேதி சாம்சங் நிறுவனம் Galaxy SIV மொபைலை வெளியிடவுள்ளதாக பார்த்தோம் அல்லவா? அதனையொட்டி மேலேயுள்ள டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது.
ஜாவா 7 அப்டேட் 17:
தற்போது ஜாவா மிகப்பெரும் பிரச்சனையாக உள்ளது. ஒவ்வொரு முறை ஆரக்கிள் நிறுவனம் ஜாவாவை அப்டேட் செய்தாலும் புதிது புதிதாக பாதுகாப்பு ஓட்டைகள் முளைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது Java 7 Update 17 என்ற பெயரில் புதுப்பித்துள்ளது. ஜாவா பயன்படுத்துபவர்கள் Java.com தளத்திற்கு சென்று அப்டேட் செய்யுங்கள்.
The Croods - ரோவியோவின் புது விளையாட்டு:
Angry Birds விளையாட்டை உருவாக்கிய ரோவியோ(Rovio) நிறுவனம், அனிமேசன் படங்களை தயாரிக்கும் DreamWorks Animation நிறுவனத்துடன் இணைந்து The Croods என்னும் அனிமேசன் படத்தை அடிப்படையாகக் கொண்ட ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான இலவச விளையாட்டை வரும் 14-ஆம் தேதி வெளியிடவுள்ளது.
மொபைலுக்கான போட்டோஷாப்:
பிரபல போட்டோ எடிட்டிங் மென்பொருளான அடோப் போட்டோஷாப் தற்போது ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களிலும் வெளிவந்துள்ளது. இதன் விலை 4.99$ ஆகும்.
Photoshop Touch for Android
Photoshop Touch for iPhone
பிகாஸா to கூகுள்+ போட்டோஸ்:
கூகுளின் புகைப்பட தளமான Picasa தளத்திற்கு சென்றால் அது Google+ Photos பக்கத்திற்கு Redirect ஆகிறது. இதன் மூலம் இன்னும் சில மாதங்களில் பிகாஸா தளம் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வார சிரிப்பு புகைப்படம்:
Log Out!
8 Comments
இணையம் பற்றிய சுவையான தகவல்கள்.
ReplyDeleteபிக்காசா பத்தி நா எழுதி இருக்கக் கூடாதோ, ஓ மை காட் அப்போ பிளாகரையும் மூடிருவாங்களா...
ReplyDeletewaiting for S4 :-)))
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றி . நண்பா
ReplyDeleteThanks for your useful post.
ReplyDeleteஆமாம் கம்ப்யூட்டர் நமது நேரத்தை மிச்சம் தான் படுத்தியது ..
ReplyDeleteஆனால் என்ன ... தான் மிச்படுத்தி கொடுத்த நேரத்தை தானே எடுத்தும் கொண்டது
அப்போ பிகாசாவில் பதிவேற்றபட்ட படங்கள் என்னவாகும்
ReplyDeletegood
ReplyDelete