மீண்டும் பதில்! உங்கள் கேள்வி என்ன?


பதில் தளத்தில் ஏற்பட்ட பிரச்சனைப் பற்றி பார்த்தோம் அல்லவா? இறைவனின் உதவியால்  தற்போது பதில் தளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. தற்போது புதிய வடிவத்தில் சில மாற்றங்களுடன் வந்துள்ளது.

புதிய வடிவம்:


பதில் தளத்தில் தற்போது புதிய டெம்ப்ளேட் வைத்துள்ளோம். இதன் மூலம் கணினி, டேப்லட், மொபைல் என்று எதில் நீங்கள் பார்த்தாலும் அதற்கு ஏற்றார் போல மாறிக் கொள்ளும். இது Responsive Design எனப்படும். இதனால் சிரமம் இல்லாமல் அனைத்து திரைகளிலும் பதில் தளத்தைக் காணலாம்.

நீங்கள் மார்ச் 18-க்கு முன்பே பதில் தளத்தில் இணைந்திருந்தால் மறுபடியும் இணைந்துக் கொள்ளவும். உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் இணைந்துக் கொள்ளலாம் அல்லது பேஸ்புக் கணக்கு இருந்தால் ஒரு க்ளிக்கில் இணைந்துக் கொள்ளலாம்.

மாற்றங்கள்:


நீங்கள் பதில் அளித்தாலோ, அல்லது கேள்வி கேட்டாலோ பதில் தளத்தில் நீங்கள் பெற்றுள்ள புள்ளிகளை உங்கள் பெயருடன் காட்டும். கேள்வி அளிப்பது, பதில் அளிப்பது, உங்கள் பதில் சிறந்த பதில்களாக தேர்ந்தெடுக்கப்படுவது என்று ஒவ்வொன்றுக்கும் புள்ளிகள் கிடைக்கும். பதில் தளத்தில் இணைந்தவுடன் நூறு புள்ளிகள் கிடைக்கும்.

இந்த புள்ளிகள் ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதற்காக மட்டுமே! :)

கேள்வி கேட்கும்/பதில் அளிக்கும் பெட்டி மாற்றப்பட்டுள்ளது. முன்பிருந்த பெட்டி JavaScript முறையில் இயங்கியதால் ஒபேரா மினியில் வேலை செய்யவில்லை. பலர் ஒபேரா மினி பயன்படுத்துவதால் மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தற்போது புகைப்படங்களை இணைக்க முடியாது.

வேறு என்னென்ன மாற்றங்கள் உள்ளது என்பதை http://bathil.com தளத்திற்கு சென்று பார்க்கவும்.

Songs Download, Software Crack, Torrent போன்ற Piracy தொடர்பான கேள்விகள் கேட்க வேண்டாம். கேள்விகளை முடிந்தவரை தமிழில் கேட்கவும்!

பழைய கேள்வி-பதில்களை ஒவ்வொன்றாக மீள்பதிவு செய்து வருகிறோம். என்னுடைய சுறுசுறுப்பு சற்று குறைவு என்பதால் விரைவில் அந்த வேலையை முடிக்க முயற்சிக்கிறேன்.

"அனுபவம் சிறந்த பாடம்" - இறைவன் நாடினால் மீண்டும் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து ஆதரவளிக்கும் நண்பர்களுக்கு சகோ. பிரபு கிருஷ்ணா சார்பாகவும், என் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்!

Post a Comment

20 Comments

 1. இனி அவ்வப்போது Backup எடுத்துக் கொள்வோம் :-)))

  ReplyDelete
 2. மிக்க மகிழ்ச்சி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. // இந்த புள்ளிகள் ஒரு உற்சாகத்தைக் கொடுப்பதற்காக மட்டுமே! :) //

  நான் என்னோமோ நினச்ச்சேன் .. :)

  ReplyDelete
 4. சூப்பர் !! மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் இனி .........தலைவலிக்கு காத்திருங்கள்

  ReplyDelete
 5. நல்ல தகவல்! இணைந்து கொள்கிறேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 6. புதிய வடிவத்தில் மீண்டு வந்தது மகிழ்ச்சி தருகிறது

  ReplyDelete
 7. கேள்விகளோடும் பல பதில்களோடும் பதில்.காம் தயார்..

  ReplyDelete
 8. தலைப்பில் ஏன் ரெட் சிக்னல் பொல கொடுத்துள்ளது ஏன் என்று தான் எனக்கு. புரியவில்லை !_

  ReplyDelete
 9. மிக்க நன்றி

  ReplyDelete
 10. மிக்க மகிழ்ச்சி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 11. நான் 130 பாயிண்ட் எடுத்திருந்தேன். அதை திருப்பித்தரணும்.இல்லேன்னா...........

  ReplyDelete
 12. அன்பு நண்பரே வணக்கம்.
  பிரதி பலன் எதிர்பாராமல் செயல்படும் அனைத்து செயல்களுக்கும் இறைவனின் அருள் நிச்சியம் இருக்கிறது.
  வாழக வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
 13. bathil.com la Email Address Confirmation kodutha... problem varuthu..

  (Question2Answer fatal error:
  Could not send email confirmation
  Stack trace:
  require() /home/content/16/10751216/html/bathil/index.php:31
  require() /home/content/16/10751216/html/bathil/qa-include/qa-index.php:163
  qa_get_request_content() /home/content/16/10751216/html/bathil/qa-include/qa-page.php:755
  require() /home/content/16/10751216/html/bathil/qa-include/qa-page.php:188
  qa_send_new_confirm() /home/content/16/10751216/html/bathil/qa-include/qa-page-confirm.php:50)

  pls help me

  ReplyDelete
  Replies
  1. இந்த பிரச்சனையால் இரண்டு நாட்களுக்கு முன்னர் Email Confirmation நீக்கிவிட்டோம். தற்போது உள்நுழைந்து பாருங்கள்.

   Delete
  2. 20times try panitan.. brother work agala.. Email Address Confirmation than kakuthu..

   screen shot vana paruga work agala.
   https://picasaweb.google.com/106613527400442599956/BathilApril112013#slideshow/5865288838682491842

   or

   https://picasaweb.google.com/106613527400442599956/BathilApril112013#

   thank..you

   Delete
 14. candle stickill pangusanthai yetdra irakkangalai eppadi kandu pidippathu?

  ReplyDelete