'கற்போம்' பிரபுகிருஷ்ணாவும், நானும் இணைந்து தொழில்நுட்பம் தொடர்பான கேள்வி-பதில் தளமாக பதில் தளத்தை உருவாக்கினோம். இது பற்றி கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே! என்ற பதிவில் சொல்லியிருந்தேன். தற்போது அந்த தளத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
பதில்:
பதில் தளத்தை உருவாக்கியது இரண்டு நபர்கள் என்றாலும் அதில் சிறப்பாக செயல்பட்டதற்கு எவ்வித லாபநோக்குமின்றி தொடர்ந்து பங்களித்து வந்த உங்களைப் போன்ற நண்பர்கள் தான் முக்கிய காரணம். பதிவுலகில் இல்லாத பல நண்பர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தனர்.
பிரச்சனை:
பதில் தளம் குறிப்பிட்ட ஹோஸ்டிங் மூலம் இயங்கி வந்தது. நேற்று அந்த ஹோஸ்டிங் தளத்தில் ஏற்பட்ட செர்வர் குளறுபடியால் அதில் இயங்கி வந்த பதில் தளம் உள்பட சில தளங்கள் முடங்கியது. பிரச்சனை என்னவென்றால் பதில் தளத்தை நாங்கள் பேக்கப் (Back-up) எடுத்திருக்கவில்லை. இதனால் இதுவரை பதில் தளத்தில் வெளியான 2000-க்கும் மேற்பட்ட கேள்வி-பதில்களையும் நாங்கள் இழந்துவிட்டோம்.
மன்னிப்பு!
இந்த தவறுக்கு பொறுப்பேற்று பதில் தள உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்கிறோம்! காரணம் ஐநூறுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் செயல்பட்டு வந்த தளத்தை நாங்கள் பேக்கப் எடுத்திருக்க வேண்டும். அப்படி எடுக்காதது எங்கள் தவறு. இவர்களின் உழைப்பு எங்கள் கவனக்குறைவால் வீணாகிவிட்டது.
தற்போது Cache முறையில் முடிந்தவரை இதுவரை வெளியான கேள்வி-பதில்களை பிரதி எடுத்துக் கொண்டிருக்கிறோம். இறைவன் நாடினால் விரைவில் புதிய தோற்றத்தில் பதில் தளத்தை செயல்படுத்த முயற்சிக்கிறோம்.
22 Comments
அனைத்து கேள்விகளையும் மீண்டும் கொண்டுவர முடியாவிட்டாலும் இயன்றவரை கொண்டு வருவோம்.
ReplyDeleteவிடுங்கள் கவலையை சந்தேகம் கேள்விகள் எப்பொழுதும் வந்து கொண்டே இருப்பது தான் எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற நல்ல உள்ளங்கள் என்றும் வரம் பெரும் மீண்டும் ஒரு தொடக்கம் நண்பன் படத்தில் வருவது மாதிரி ஆல் ஸ் வெல் சொல்லிக்க வேண்டியது தான்
Deleteசில கேள்விகளையும், அதற்கான பதில்களையும் குறித்துக் கொள்வதுண்டு... அந்த பதிலில் கொடுத்துள்ள இணைப்பிற்கும் சென்று விளக்கம் அறிந்ததுண்டு... இப்போது இந்த தகவல் வருத்தமடையச் செய்கிறது... மறுபடியும் சிறப்பாக அமையும் என்னும் நம்பிக்கையுடன் தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteபடிப்தற்கு சற்று கஷ்டமாக உள்ளது.... இனி கவனமாக இருக்க இது ஒரு சிறந்த பாடம்.. புதிய தோற்றத்தில் மீண்டு வர புத்துணர்ச்சியாக செயல்படவும்... உற்சாகத்தை இழந்து விட வேண்டாம்...
ReplyDeleteஎன்றும் உங்களுடன்...
முயற்ச்சி செய்யுங்கள் நண்பர்களே......!
ReplyDeleteஇவ்வுலகில் முடியாதது ஒன்றும் இல்லை...!
பிரச்சனை ஏற்படுவது சகஜம் என்றாலும் அதை எதிர்கொள்வதில் இருக்கிறது உங்களின் தன்னம்பிக்கை. விரைவில் மீட்டெடுபீர்கள் என நம்புகிறேன்.
ReplyDeleteஉங்களின் முயற்சிக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் பிரச்சனையின் தன்மையை புரிந்துகொள்வார்கள். எப்போதும் போல் ஒத்துழைப்பு தருவார்கள்.
என்ன பிரச்சனை என்பதை விளக்கமாக சொல்லி மன்னிப்பும் கேட்க உங்களின் பண்பிற்கு என் வணக்கங்கள்.
உங்கள் உழைப்பிற்கு விரைவில் நல்ல பலன் கிட்டும். வாழ்த்துக்கள் !
புது பொலிவு பெற வாழ்த்துக்கள்..
ReplyDeleteமீண்டும் வலிமையுடன் எழ வாழ்த்துகள் பாஸ்
ReplyDeleteநானும் கேள்விகள் கேட்டு தொலைபடுத்தி வந்த ஒரு உறுப்பினர் தான் கேட்கவே வருத்தமாக உள்ளது
Don't worry
ReplyDeleteயானைக்கும் அடி சறுக்கும் மீண்டும் எழுங்கள் அன்பரே
ReplyDeleteஅனுபவங்கள் பாடமாகின்றன! வருந்த வேண்டாம்! விரைவில் புதிய வடிவில் தளம் மிளிர வாழ்த்துக்கள்!
ReplyDeleteDont worry brothers we will ask more and more question once again.
ReplyDeleteபதிய பொலிவுடன் பதில் வரட்டும்
ReplyDeleteபுதுப் பொலிவுடன் திரும்ப வாழ்த்துகள்.....
ReplyDeleteநடந்ததை எண்ணி வருத்தம் கொள்ள வேண்டாம்.இனி நடப்பதை சிறப்பாக வளர நடவடிக்கை எடுப்போம்.அதை விட பல மடங்கு உற்சாகத்துடன் உழைத்திடுவோம்.புதிய வளர்ச்சிக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteWe will wait for "bathil" site's re-entry. All the best. We are always with you.
ReplyDeleteNo Problem We will wait. Please continue your holy work
ReplyDeleteமீண்டும் எதிர்பார்க்கிறேன் பதில் தளத்தை விரைவில்...
ReplyDelete(இன்ஷா அல்லாஹ்...)
சகோ பிரபு கிருஷ்ணாவிற்கும்,சகோ அப்துல் பாசிதிற்கும் என்னுடைய வணக்கம். பதில் தளம் கண்டிப்பாக சிறந்த முறையில் செயல் படும்,பதில் தளத்திற்கு எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு, மற்றவர்க்கு உதவுவது எவ்வளவு பெரிய நல்ல விஷயம்,அதை இன்னும் சிறப்பாக செய்வோம் சகோ, மிக்க நன்றி நட்புடன் வேல்குமார்
ReplyDeleteநல்ல எண்ணங்கள் எப்போதும் வெற்றிபெறும்... புத்துணர்ச்சி பெற்று எழ வாழ்த்துக்கள்....
ReplyDeleteநானும் அவ்வப்போது பதில் தளத்திற்கு வந்து பதிலளிப்பதில் வழக்கமாக கொண்டிருந்தேன். கொஞ்ச நாளாய் வேலை பளுவில் மறந்துவிட்டேன்.இன்று என்னால் உள்நுழைய முடியவில்லை. மீண்டும் அதே பெயரில் கணக்கு துவங்கி விட்டேன். இந்த அனுபவம் நமக்கு பெரிய பாடமாக அமைந்து விட்டது. மீண்டும் பீனிக்ஸ் பறவை போல் மீண்டும் எழுவோம். வாழ்த்துக்கள் நண்பா.
ReplyDeleteவிரைவில் புதிய வடிவில்....
ReplyDelete