கூகுள் தேடுபொறி முன்னணியில் இருப்பதற்கும், தனித்துவமாய் இருப்பதற்கும் அன்றாடம் அது செய்து வரும் மாற்றங்களும் ஒரு காரணம் என்று சொல்லலாம். தற்போது கூகுள் தேடலில் கால்குலேட்டர் வசதியில் செய்துள்ள மாற்றங்களைப் பார்போம்.
கூகிள் தேடலில் உடனடி பதில்கள் என்ற பதிவில் கூகுளில் நாம் தேடும் சில கேள்விகளுக்கு உடனடியாக பதில் கிடைக்கும் என்று எழுதியிருந்தேன் அல்லவா? அதன் பிறகு அந்த உடனடி பதில்களை காட்டும் வடிவமைப்பை மாற்றியது. அந்த பதில்கள் சிறிய பெட்டியில் தனியாக தெரியும். இதற்கு One Box என்று பெயரிட்டுள்ளது.
இந்த முறையில் கூகுளில் கணித கணக்குகளை [உதாரணத்திற்கு 1+1 என்று] தேடும்போது வெறும் விடைகளை மட்டும் காட்டாமல் கால்குலேட்டரையும் காட்டும். இதை பயன்படுத்தி நாம் பல்வேறு கணக்குகளை செய்து பார்க்கலாம்.
இந்த வசதியை கடந்த வருடமே அறிமுகப்படுத்தியது.
இது பற்றிய வீடியோ:
மேலும் சில உடனடி பதில்களைப் பற்றி இறைவன் நாடினால் பிறகு பார்க்கலாம்.
1 Comments
பகிர்ந்தமைக்கு நன்றிங்க....
ReplyDelete