சிறப்பு செய்தி ஒன்றுடன், இந்த வாரம் (06/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.
ஆண்ட்ராய்டில் பரவும் மால்வேர்:
ஆண்ட்ராய்ட் மொபைல்களில் உள்ள தேவையில்லாத மெமரியை அழித்து, அதிக இடவசதி கொடுத்து, மொபைலை வேகமாக இயங்கவைக்கும் அல்லது இயங்க வைப்பதாக சொல்லும் அப்ளிகேசன்கள் கிளீனர் அப்ளிகேசன்கள் (Cleaner Apps) என்று அழைக்கப்படும். தற்போது இந்த பெயரில் அதிகமான அப்ளிகேசன்கள் மால்வேர்களை பரப்பிவருகிறது.
இது மற்ற மால்வேர்களைவிட சக்தி வாய்ந்ததாக இருப்பதாக பாதுகாப்பு வல்லுனர்கள் கூறுகின்றனர். இந்த மால்வேர் நேரடியாக நம் மொபைலை தாக்காது. மாறாக மால்வேர் உள்ள இந்த மொபைலை கணினியில் இணைக்கும் போது அந்த கணினியை தாக்கும் சக்திக் கொண்டது. இந்த மால்வேர் நம்முடைய கணினியில் உள்ள மைக்ரோபோனை பயன்படுத்தி நமக்கு தெரியாமலேயே ரெகார்ட் செய்யும் திறமைக் கொண்டது.
இந்த அப்ளிகேசன்கள் கூகுள் ப்ளே தளத்திலும் இருப்பது தான் கவலைக்குரிய செய்தியாகும். மேலும் பயனர்கள் இந்த அப்ளிகேசன்களுக்கு அதிக டவுன்லோட் மற்றும் மதிப்பீடுகளைக் கொடுக்கின்றனர். அதைக் கண்டு ஏமாற வேண்டாம். கிளீனர் அப்ளிகேசன்களை பயன்படுத்தாமல் இருப்பதே நன்று.
ப்ளாக்பெர்ரி Z10 & Q10:
கடந்த வாரம் சொன்னது போல ப்ளாக்பெர்ரி மொபைல் நிறுவனம் புதிய இயங்குதளமான Blackberry 10 OS-யை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு (ப்ளாக்பெர்ரிக்கு) புதிய வசதிகளைக் கொண்ட இந்த இயங்குதளத்தின் முதல் இரண்டு மொபைல்களாக BlackBerry Z10 மற்றும் BlackBerry Q10 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக் புதிய அப்ளிகேசன்:
ஆப்பிள் ஐபோனில் நமக்கு அருகாமையில் இருக்கும் நண்பர்களின் இருப்பிடத்தை மேப் மூலம் அறிந்துக்கொள்ள உதவும் Find My Friends என்னும் அப்ளிகேஷனை போல பேஸ்புக் நிறுவனமும் புதிய அப்ளிகேசன் ஒன்றை வெளியிடவுள்ளது.
ஜாவா அப்டேட்:
ஜாவா மென்பொருள் மூலம் வைரஸ் பரவும் வாய்ப்பு அதிகம் என்று பார்த்தோம் அல்லவா? அதனை சரி செய்து புதிய பதிப்பாக Java 7 update 13-ஐ வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்துள்ளது.
இது பற்றி படிக்க: Oracle released Java 7 update 13
புதிய யூட்யூப் சேனல் டிசைன்:
யூட்யூப் தளம் நமது சேனல் வடிவமைப்பில் சிறிது மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் நமது சேனல் பக்கத்திற்கு Subscribe செய்திடாத வாசகர்கள் வரும் போது (மட்டும்) பிரதயேக வீடியோவை வைக்கலாம். இது Channel Trailer எனப்படும்.
மேலும் பேஸ்புக் கவர் போன்று பெரிய படம் ஒன்றையும் வைக்கலாம். அதன் கீழே நமது தளத்திற்கான இணைப்பு மற்றும் நம்முடைய Google+, Facebook மற்றும் Twitter கணக்குகளுக்கும் இணைப்பு கொடுக்கலாம். இந்த வசதி ஒரு சிலருக்கே வந்துள்ளது. மற்றவர்களுக்கு வி...ரை...வி...ல்..... வரும் என்று தெரிவித்துள்ளது.
என்னுடைய யூட்யூப் சேனல் (இந்த வசதி இன்னும் வரவில்லை)
ஹேக் செய்யப்பட ட்விட்டர்:
கடந்த வாரம் ட்விட்டர் தளம் ஹேக் செய்யப்பட்டது. இதன் மூலம் 250,000 கணக்குகள் திருடப்பட்டிருக்கலாம் என ட்விட்டர் தெரிவித்துள்ளது. நீங்கள் ட்விட்டர் பயன்படுத்தினால் உடனடியாக கடவுச்சொல்லை மாற்றுங்கள்.
பேஸ்புக் கார்ட் - Facebook Card:
பேஸ்புக் நிறுவனம் கிரெடிட் கார்ட் போலவே புதிய கார்ட் ஒன்றை Facebook Card என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. நம்முடைய நண்பர்களுக்கு 10$, 25$, 50$, 100$ மதிப்புள்ள இந்த கார்டுகளை அனுப்பலாம். அந்த கார்ட் மூலம் அவர்கள் குறிப்பிட்ட கடைகளில் அவர்களுக்கு விருப்பமானதை வாங்கிக் கொள்ளலாம். வழக்கம் போல இந்த வசதியும் தற்போது அமெரிக்க பயனாளர்களுக்கு மட்டும் தான். மற்றவர்களுக்கு வி...ரை...வி...ல்.....
ப்ளாக்கர் நண்பன் - 300 (சிறப்பு செய்தி):
தமிழில் ப்ளாக்கர் மற்றும் தொழில்நுட்ப செய்திகளைப் பற்றி எழுதிவரும் ப்ளாக்கர் நண்பன் என்னும் தளம் இன்று முன்னூறாவது பதிவை எட்டியுள்ளது. முன்னூறாவது பதிவில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஒரு வார காலமாய் யோசித்து வந்த அந்த பதிவருக்கு எதுவும் தோன்றாததால் சாதாரண பதிவாகவே எழுதியுள்ளார்.

இந்த வார கார்டூன் (ஹிஹிஹிஹி):
Log out!
20 Comments
300 vathu pathivitku
ReplyDeleteWaalthukkal
Saho!
பயனுள்ள தகவல்கள் நன்றி சகோ.
ReplyDeleteமுன்னூறுக்கு வாழ்த்துகள் :-)))
நன்றி சகோ.!
DeleteGUD NEWS. SUPERB. CARTOON - SEMA
ReplyDeleteமேலும் மேலும் பலநூறு பதிவுகளை இட்டு உங்கள் தளம்
ReplyDeleteசிறப்புற என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரரே !....
மிக்க நன்றி பயனுள்ள அத்தனை பகிர்வுகளுக்கும் .
நன்றி சகோ.!
Delete300றுக்கு வாழ்த்துகள் !!!
ReplyDeleteநன்றி நண்பரே!
DeleteCONGRATULATION ON YOU 300 POST.
ReplyDeletecongrats Basith :)
ReplyDeleteI wish you reach 30000000000000000 posts soon :)
cant count that number. Can you tell me in words? xD
DeleteThank You Friend!
தங்கள் பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDelete"முன்னூறாவது பதிவில் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று ஒரு வார காலமாய் யோசித்து வந்த அந்த பதிவருக்கு எதுவும் தோன்றாததால் சாதாரண பதிவாகவே எழுதியுள்ளார்."
ReplyDelete:-)
300 வது பதிவிற்கு வாழ்த்துகள். நீங்கள் மற்ற தொழில்நுட்ப பதிவுகளை குறைத்து விட்டீர்கள் என்று நினைக்கிறன்.. இதை எழுத ஆரம்பித்த பிறகு. நேரம் கிடைத்தால் அவற்றையும் எழுதுங்கள்
நன்றி நண்பரே!
Deleteடிராப்டில் பல பதிவு உள்ளது. பாதி எழுதும் போது அலுப்பு வருவதால் எல்லாமே முடிக்காமல் உள்ளது. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.
300 வது பதிவு மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete300 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்கள் பணி தொடரட்டும்
நன்றி நண்பரே!
Deleteவாழ்த்துக்கள்...:-) பதிவுகள் தொடரட்டும்...
ReplyDeleteநன்றி நண்பரே!
Delete