கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை!


ஜாவா ப்ரோக்ராம் நமது கணினியிலும், உலவியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலான இணையதளங்கள் ஜாவா ப்ரோக்ராம் பயன்படுத்துவதால் அவற்றில் உள்ள சில வசதிகளைப் பயன்படுத்த நமது உலவியில் ஜாவா நிறுவியிருப்பது அவசியமாகும். தற்போது ஜாவாவில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதிப்பு மூலம் ஹேக்கர்கள் உங்களை HTML கோப்பு ஒன்றை பார்க்க வைத்து அதன் மூலம் வைரஸ் அனுப்பி உங்கள் கணினியை தாக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் இந்த வைரஸ் பாதிப்பை ஜாவாவை உருவாக்கிய ஆரக்கிள் நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்து புதிய பதிப்பை அதிக பாதுகாப்பு வசதிகளுடன் ஜாவா வெளியிட்டுள்ளது.

நீங்கள் அவசியம்  செய்ய வேண்டியது:

1. உங்கள் கணினியில் Control Panel பகுதிக்கு சென்று Programs and features (windows 7) அல்லது Add or remove programs பகுதிக்கு செல்லுங்கள்.

2. அங்கு Java 7 Update 10 (அல்லது அதற்கு முந்தைய) பதிப்பாக இருந்தால் அதில் Right Click செய்து Uninstall என்பதை க்ளிக் செய்து அதனை நீக்கிவிடுங்கள்.

3. பிறகு java.com முகவரிக்கு சென்று ஜாவா புதிய பதிப்பான Java 7 Update 11 பதிப்பை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள்.

4. புதிய பதிப்பை நிறுவிய பின் உங்கள் உலவியை Restart செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! மேலே சொன்னது எளிதாக இருந்தாலும் இதனை செய்ய வேண்டியது அவசியமானதாகும். கணினி பயன்படுத்துபவர்கள் உடனடியாக இதனை செய்யவும்.

இதனை பற்றிய எனது சிறிய வீடியோ:தகவல்: முஹம்மது ரஃபீக், குவைத்

Post a Comment

28 Comments

 1. பயனுள்ள தகவல்

  ReplyDelete
 2. பயனுள்ள தகவலுக்கு நன்றி நன்பரே

  ReplyDelete
 3. நீங்கள் எழுதியதைப்போல் நீக்கி விட்டேன்.

  Java SE Development Kit 7 update 7 என்று ஒரு Program உள்ளது.அதை என்ன செய்வது..?!

  ReplyDelete
  Replies
  1. அதையும் நீக்கிவிடுவது நல்லது...

   Delete
 4. இது விண்டோ 7, எக்ஸ் பி எல்லாவற்றுக்குமே செய்யனுமா?

  ReplyDelete
  Replies
  1. ஆமா.. இது விண்டோஸ்7, எக்ஸ் பி எல்லாவற்றுக்கும் அப்டேட் செய்யணும்

   Delete
 5. எல்லோருக்கும் பயன்தரக் கூடிய தகவல்கள். நன்றி பாஸித்.

  ReplyDelete
 6. சலாம் சகோ.

  என்னுடைய கம்ப்யூட்டரில் Java - Uninstall செய்ய பார்த்தால், Java(TM)6 Update 37 என்று உள்ள‌து. அதை Uninstall செய்யவேண்டுமா? அதுவும் பழைய பதிப்பா?

  ReplyDelete
  Replies
  1. java 6 -ல் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் அதையும் நீக்கிவிடுவது நல்லது என்கின்றனர். புதிய பதிப்பை பயன்படுத்துவதே நல்லது.

   Delete
 7. சகோ என்னுடைய கணினியில் ஜாவா 7அப்டேட் 4 உள்ளது,இதனை uninstall செய்ய வேண்டுமா

  ReplyDelete
  Replies
  1. ஆம் சகோ.! நீக்கிவிட்டு புதியதை பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.

   Delete
 8. அப்டேட் செய்து விட்டேன், தகவலுக்கு நன்றி!!! :)

  ReplyDelete
 9. நெருப்பு நரி உலவியில் plug in ல் அறிவிப்பு இருந்தது நான் பெரிது படுத்தவில்லை .தற்போது நீக்கிவிட்டேன் பகிர்வுக்கு நன்றி !

  ReplyDelete
 10. நல்ல பயனுள்ள தகவல்....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

  நன்றி,
  மலர்
  http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

  ReplyDelete
 11. மிக்க நன்றிங்க...

  சத்தியமாவே எனக்கு கண்ட்ரோல் பேனல் எங்க இருக்கும் என்றெல்லாம் தெரியாது ... இங்கு தெரிந்தவர்களை கேட்டு நீங்கள் சொன்னபடி செய்கிறேன்!!

  ReplyDelete
 12. Assalamu alaikum...
  Thanks for your info.
  Best regards,
  SAM.

  ReplyDelete
 13. சக்ஸஸ் ஃபுல்லா பண்ணி முடித்துவிட்டேன். மிக்க நன்றிங்க !!!

  ReplyDelete
 14. தகவலுக்கு நன்றி நன்பா ! உடனே செயல் படுத்துகிறேன்.

  ReplyDelete
 15. பழையதை un-install செய்யாமலே புதியதை இன்ஸ்டால் செய்தால் என்ன ஆகும்? பழையது நம் கம்ப்யூட்டரில் இருந்தாலே ஆபத்தா? அல்லது புதியதை இன்ஸ்டால் செய்தால் மட்டும் போதுமா?

  என்னுடைய கம்ப்யூட்டரில், Java(TM) 6 Update 6,7,18,33 ஆகியவை இருக்கின்றன. எல்லாத்தையும் uninstall செய்துடலாமா?

  ReplyDelete
  Replies
  1. பழையதை ஈக்கிவிடுவது நல்லது.

   java 6 -ல் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். சிலர் அதையும் நீக்கிவிடுவது நல்லது என்கின்றனர். புதிய பதிப்பை பயன்படுத்துவதே நல்லது.

   Delete
 16. வணக்கம்

  பயனுள்ள பதிவு தெரியாத தகவலை தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி
  உங்களின் பதிவு வலைச்சரத்தில் அறிமுகம் கண்டுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 17. நண்பரே,

  என்னுடைய கணிணியில் java 7 update17 என்று காட்டுகிறது. இதில் ஏதேனும் பிரச்சினை உள்ளதா?

  ReplyDelete
  Replies
  1. இதில் பிரச்சனை இல்லை நண்பரே!

   Delete
 18. உங்கள் தகவலுக்கு நன்றி,

  ReplyDelete