ஆண்ட்ராய்டில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க


ஆண்ட்ராய்ட் மொபைல் மற்றும் டேப்லட்களில் திரையில் தெரிவதை புகைப்படமாக ஸ்க்ரீன்ஷாட் எடுப்பது வெகு சுலபமான காரியம் ஆகும். இது ஆண்ட்ராய்ட் பதிப்புகளுக்கு ஏற்றவாறு வேறுபடும். அவற்றைப் பற்றி இங்கு பார்ப்போம்.


ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர்ப்ரெட் (Gingerbread 2.3):

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Home பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சாண்ட்விச் (Icecream Sandwich 4.0), ஜெல்லிபீன் (Jelly Bean 4.1):

மொபைல்/டேப்லட்டில் பவர்/லாக் பட்டனையும், Volume Down பட்டனையும் ஒன்றாக அழுத்திக் கொண்டிருந்தால் சில வினாடிகளில் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டுவிடும்.

அவ்வளவு தான்! ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் போது அறிவிப்பிற்காக சின்ன சத்தம் ஏற்படும்.

இது போன்ற சின்ன, சின்ன சந்தேகங்களுக்கு உடனடியாக பதில் பெற நினைத்தால் பதில் தளத்தில் கேட்கலாம். இறைவன் நாடினால், உங்களுக்கு விரைவாக பதில் கிடைக்கும்.

Android Mobile-ஐ Screen Capture செய்வது எப்படி?

Post a Comment

5 Comments

  1. பயனுள்ள தகவலை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி

    ReplyDelete
  2. பதில் தளம் தற்போது அழிக்கப்பட்டுள்ளது.

    http://help.tamilcomputerblog.com/

    இத்தளத்தினை பயன்படுத்தி அனைவரும் பயன்பெறுங்கள்.
    இதில் ADS ஏதம் இல்லை..

    ReplyDelete