பிட்.. பைட்... மெகாபைட்....! (30/01/2013)


இந்த வாரம் (30/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.


 Vine - வீடியோ ட்வீட்:

ட்விட்டர் தளம் ஐபோனில் வீடியோவை பகிரும் Vine என்னும் அப்ளிகேஷனை கையகப்படுத்தியதாக கடந்த வருடம் பிட் பைட் மெகாபைட் பகுதியில் பார்த்தோம் அல்லவா? தற்போது Vine ஐபோன் அப்ளிகேசன் மூலம் ஆறு நொடிகளுக்குள்ளான வீடியோ ட்வீட் பகிரும் வசதியை அறிவித்துள்ளது. மேலே உள்ளது வைன் அப்ளிகேசன் மூலம் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வீடியோ ட்வீட்.


தற்போது இதில் பெரும் பிரச்சனையாக இருப்பது, ஆபாச வீடியோ ட்வீட்கள். பலர் ஆபாச வீடியோக்களை பகிர்கின்றனர்.

Vine app பற்றி மேலும் அறிய: Vine - Twitter app for iPhone

Blackberry OS 10:



ப்ளாக்பெர்ரி மொபைல் நிறுவனம் தனது மொபைல் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பாக ப்ளாக்பெர்ரி 10 இயங்குதளத்தை இன்று அறிமுகப்படுத்தவுள்ளது. மேலும் ப்ளாக்பெர்ரி 10 இயங்கும் முதல் இரண்டு மொபைல்களையும் வெளியிடவுள்ளது. மொபைல் உலகில் "ஆண்ட்ராய்ட் vs ஐபோன்" என்று போட்டி நிலவும் இவ்வேளையில் Blackberry 10 OS மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ப்ளாக்பெர்ரி இயங்குதளத்தின் முந்தைய பதிப்பு Blackberry 7. நடுவுல கொஞ்சம் நம்பரைக் காணோம்!

புதிய ஆப்பிள் ஐபேட் - iPad 128GB :

ஆப்பிள் நிறுவனம் ஐபேடின் அடுத்த பதிப்பாக 128GB மெமரிக் கொண்ட புதிய ஐபேடை வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி வெளியிடுகிறது. இதுவரை 120 மில்லியன்களுக்கும் அதிகமான ஐபேட்கள் விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை விவரம்: 

 iPad with Wi-Fi = $799

iPad with Wi-Fi + Cellular model = $929

Unlocking Phone - சட்ட விரோதம்:

Samsung Galaxy S3, Apple iPhone, Blackberry போன்ற மொபைல்கள் மொபைல் ஆப்பரேட்டர்கள் மூலம் ஒப்பந்த அடிப்படையில் நமக்கு கிடைக்கும். அதில் நாம் வாங்கும் மொபைல் ஆப்பரேட்டர்கள் தவிர வேறு சிம் கார்டை பயன்படுத்த முடியாது. அப்படி பயன்படுத்துவதற்கு குறிப்பிட்ட மொபைல் மாடலுக்கு ஏற்ற மென்பொருளைக் கொண்டு Unlock செய்ய வேண்டும். அப்படி செய்தால் எந்த சிம்கார்ட் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

தற்போது மொபைல்களை Unlock செய்வதுஅமெரிக்காவில் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொபைலுக்கு அதிக வசதி கொடுக்க உதவும் Jailbreaking (iPhone) மற்றும் Rooting (Android) சட்டத்திற்கு உட்பட்டது தான்.

பேஸ்புக் மோசடி:


பேஸ்புக்கில் மேலே உள்ளது போல உங்களுக்கு மெசேஜ் வந்தால் நீக்கிவிடுங்கள்.இது ஒரு மோசடியாகும். உங்கள் கணக்கு விவரங்களை கேட்கும், நீங்கள் கொடுத்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிடும்.

Temple Run 2 - ஆண்ட்ராய்ட்:


Temple Run 2 விளையாட்டைப் பற்றி கடந்த வாரம் பார்த்தோம் அல்லவா? அந்த விளையாட்டு ஆண்ட்ராய்டிலும் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களுக்கு,

Temple Run 2 for Android

இந்த வார கார்டூன் (ஹிஹிஹிஹி):


Log out!

Post a Comment

8 Comments

  1. பகிர்வுக்கு நன்றி சகோ!!

    ReplyDelete
  2. பகிர்விற்கு நன்றி.
    வலை சரம் மூலமாக உங்கள் ப்ளாகை அறிந்து கொண்டேன்.
    பிளாக் தொடங்குவது எப்படி? படிக்க வேண்டும் .

    நன்றி,
    ராஜி

    ReplyDelete
  3. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  4. தகவல்களுக்கு நன்றிங்க...

    ReplyDelete
  5. பகிர்வுக்கு நன்றி நண்பா

    ReplyDelete

  6. மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு.
    ஒரு கேள்வி .சில நாட்களாக இது என் தளத்தில் அடிக்கடி வருகிறது சகோ
    காரணம் என்ன ?..இதை update செய்ய வேண்டுமா ?.....
    Google Chrome Extension Update: FreeTwitTube by Yontoo requires a critical update

    ReplyDelete
    Replies
    1. அந்த extension நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் நீக்கிவிடுவது நல்லது.

      பயன்படுத்தினால் அப்டேட் கொடுங்கள்.

      Delete