இந்த வாரம் (23/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.
Temple Run 2:
Temple Run என்பது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டுக்கான விளையாட்டாகும். இந்த விளையாட்டில் முடிவே கிடையாது. இதுவரை 170 மில்லியன் தடவைகளுக்கு மேலாக பதிவிறக்கம் செய்யப்பட இந்த விளையாட்டின் இரண்டாவது பாகமான Temple Run 2 ஐபோனுக்கு மட்டும் கடந்த வாரம் வியாழன் அன்று வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட ஆறு மணி நேரத்தில் Top Free Apps பட்டியலில் முதல் இடத்தைப் பெற்ற இந்த கேம், முதல் நாள் அன்றே ஆறு மில்லியன் தடவைகள் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இதனுடைய ஆண்ட்ராய்ட் பதிப்பு நாளை வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: Temple Run 2 - Free iPad & iPhone game
(என்னுடைய மொபைலில் Temple Run கேம் மட்டும் தான் உள்ளது)
Mega:
MegaUpload என்பது இணையத்தில் பிரபலமான கோப்புகளை பகிரும் தளமாகும் (File Sharing site). காப்புரிமை மீறல் தொடர்பாக இந்த தளம் அமெரிக்க எஃப்.பி.ஐ-யினரால் முடக்கப்பட்டது பற்றியும், அதன் நிறுவனர் கிம் டாட்காம் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் முன்பே ஒரு பதிவில் பார்த்தோம்.
தற்போது கிம் டாட்காம் Mega என்னும் பெயரில் Google Drive, Dropbox, Skydrive போன்று மேக சேமிப்பு (Cloud Storage) தளத்தை தொடங்கியுள்ளார். இதன் மூலம் நமது கோப்புகளை இணையத்தில் சேமிக்கலாம். 50 GB இலவச சேமிப்பகத்தை தரும் இந்த தளத்தில் முதல் நாளிலேயே 1 மில்லியன் பயனாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் அதிகமானவர்களுக்கு இந்த தளத்தின் மீது நம்பிக்கையில்லை.
மேலும் படிக்க: Kim Dotcom launches "Mega" Cloud storage
Firefox OS:
பிரபல இணைய உலவியான ஃபயர்ஃபாக்ஸ் நிறுவனம் மொபைல்களுக்கான இயங்குதளத்தை உருவாக்கியுள்ளது. Firefox OS என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயங்குதளம் நிறுவப்பட்ட இரண்டு மொபைல்கள் டெவெலப்பர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் விற்பனைக்கு வரும்.
மேலும் விபரங்களுக்கு, Keon & Peak: first Firefox OS phones
இந்த வார கார்டூன் (ஹிஹிஹிஹி):
தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் படிக்க: www.techminar.com :)
Log Out!
16 Comments
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி நண்பரே.
ReplyDeleteThanks...
ReplyDeleteSuperb Brother!
ReplyDeletesuper super super - Thank u for firefox OS info
ReplyDeleteMSP.Raj
சுவாரஸ்ய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல் . நன்றி
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி சகோ
ReplyDelete//இந்த தளத்தில் முதல் நாளிலேயே 1 மில்லியன் பயனாளர்கள் பதிவு செய்துள்ளனர். இன்னும் அதிகமானவர்களுக்கு இந்த தளத்தின் மீது நம்பிக்கையில்லை.//
ReplyDeleteமுடிவா என்ன சொல்றீங்க?! :)
பகிர்வுக்கு நன்றிங்க..
ReplyDeleteகடைசியில் ஒரு கேள்வி கேட்டு விடை சொல்ல சொல்வீர்களே !! இப்பொழுதெல்லாம் கேள்வி கேட்பதில்லையே??
இப்ப என்ன கேள்வி கேட்பது என்று தெரியாததால் அதற்கு பதிலாக கார்டூன் பகுதி வருகிறது. :)
Deleteஓ !! சரீங்க :-)
Deletereally your posts are very super , this bit ,bite ,mega bite i wont miss it .because it covers whole tech issues in a week , nice job keep it up
ReplyDeleteநோக்கியானாலே கடுப்பு..அதுக்காகவே அந்த கார்ட்டூனுகாகவே ஒரு ஓட்டு போட்டேன் சகோ...பாக்கி மேலே உள்ளதுலாம் இந்த பக்கிக்கு ரொம்ப கஷ்டம்.....:)
ReplyDeleteஎன்னோட டேப்லேயும் நான் அதிகம் விளையாடுறது Temple Run தான். TR2 download பண்ணி பார்த்தேன். 1 ஐவிட சுவாரஸ்யம் குறைவு மாத்ரி தெரியுது. கொஞ்ச நாள் போனாதான் தெரியும். கார்ட்டூன் சூப்பர்.
ReplyDeleteகார்ட்டூன் கலக்கல் .நோக்கியா android கொண்டுவராதது ஏனோ ?
ReplyDeleteஉங்களை தொடர்பு கொள்ள வைத்திருந்த பக்கத்தை காணாதாதால் இங்கே கேட்கிறேன்
பதில் தளத்திலும் கேட்டு இருந்தேன் .கூகுளிலும் எனக்கு தெரிந்த வகையில் அலசி விட்டேன் .பதில் கிடைக்க வில்லை .
sundirect+ இல் ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோக்களை dvd பிளேயர் இல் avi format இல் மாற்றி காண்பது எப்படி ?
ரெகார்ட் செய்யப்பட்ட வீடியோக்கள் உள்ள folderபின்வருமாறு இருக்கிறது
PVR>>1234566>>>DATA>>DATA இறுதியில் குறிப்பிட்ட DATA எனப்படும் FOLDER இல் மட்டும் DATA என பல FILE கள் இருக்கிறது .அதில் DATA என குறிப்பிட்ட முதல் FILE மட்டும் அதிக SIZE உள்ளது.அந்த FILE TYPE என்னவென்று பார்த்தல் FILE என்றே இருக்கிறது ? என்ன செய்வது .தெரிந்தால் சொல்லுங்கள் அன்பரே
மத்த FILE கள் அனைத்தும் 2KB,5KB என்றே உள்ளது .முதல் FILE மட்டும் 50MB க்குள் உள்ளது
தொடர்புக்கு :premshopra@yahoo.com