இந்த வாரம் (16/01/2013) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.
பேஸ்புக் Graph Search:
பேஸ்புக் நிறுவனம் நேற்று Graph Search என்னும் புதிய தேடல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு உள்-தேடுபொறியாக (Internal Search Engine) செயல்படும். இதன் மூலம் பேஸ்புக்கில் நமக்கும் நம் நண்பர்களுக்கும் இடையில் தொடர்புடைய புகைப்படங்கள், இடங்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றை தேடலாம். உதாரணத்திற்கு "நான் லைக் செய்த புகைப்படங்களை எந்தெந்த நண்பர்கள் லைக் செய்துள்ளார்கள்" என்று தேடி தெரிந்துக் கொள்ளலாம். இறைவன் நாடினால் இது பற்றி விரிவாக தனி பதிவில் எழுதுகிறேன்.
ஜாவா - பாதுகாப்பு பிரச்சனை:
ஜாவா மென்பொருளில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைப்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதிசெய்த ஆரக்கிள் நிறுவனம் ஜாவா மென்பொருளை மேம்படுத்தி புதிய பதிப்பை வெளியிட்டது. இது பற்றி கணினி பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை! என்ற பதிவில் பார்த்தோம். ஆனால், இந்த புதிய பதிப்பிலும் தாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலவியில் ஜாவாவை நிறுத்தி வைப்பதே தற்போதுள்ள ஒரே வழி.
New Myspace -திறப்பு விழா!
பேஸ்புக் தளம் வருவதற்கு முன்னால் இணையத்தில் பிரபலமான சமூகவலைத்தளமாக விளங்கிய மைஸ்பேஸ் தளம் பின்பு காணாமல் போனது. சமீபத்தில் அமெரிக்க பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் மற்றும் சிலர் இணைந்து அந்த தளத்தை விலைக்கு வாங்கினர். தற்போது இசைப்பிரியர்களுக்காகவே மாற்றியமைக்கப்பட்ட இந்த தளம் அனைவருக்காகவும் திறக்கப்பட்டுவிட்டது.
முகவரி: http://new.myspace.com/
சாம்சங் கேலக்ஸி எஸ் - நூறு மில்லியன்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ் வரிசை மொபைல் போன்கள் இதுவரை நூறு மில்லியன் விற்பனையை தாண்டியுள்ளது. இதில் சாம்சங்கின் முதன்மை மொபைலான Samsung Galaxy S3 மட்டும் 41 மில்லியன் விற்பனையாகியுள்ளது.
Wikivoyage - விக்கிபீடியாவின் புதிய சேவை:
2001-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் தேதி அறிமுகமான விக்கிபீடியா தளம் நேற்று பன்னிரெண்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு Wikivoyage என்னும் புதிய தளத்தை திறந்துள்ளது. இது உலகம் முழுவதுமுள்ள சுற்றுலா தளங்களைப் பற்றிய வழிகாட்டி தளமாகும்.
முகவரி: https://en.wikivoyage.org/
Google Project Glass - உருவாக்குனர்களுக்கான அழைப்பு:
கூகுள் நிறுவனம் Project glass என்ற பெயரில் உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய கண்ணாடியை தயாரித்து வருகிறது. தற்போது அந்த தொழில்நுட்பத்தில் இணைந்து பணிபுரிவதற்காக டெவெலப்பர்களுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சியை (Hackathon) நடத்துகிறது. இந்த மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் San Francisco நகரிலும், பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் New York நகரிலும் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Network Attached Storage- எ வீடியோ பை ப்ளேட்பீடியா:
Network Attached Storage Server என்பது நமது கோப்புகளை சேமிக்க உதவும் கருவியாகும். ஒரு NAS சர்வரில் சேமிக்கும் டேட்டாவை, வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள பல கணிணிகளில் இருந்து Network மூலம் ஒரே சமயத்தில் எளிதாக access செய்திடலாம்!!!
இந்த வார கார்டூன் (ஹிஹிஹிஹி):
Log Out!
14 Comments
அனைத்தும் புதிய தகவல்கள்(எனக்கு)..!! பதிவிற்கு நன்றி..!!
ReplyDeleteநன்றி அண்ணே!
DeleteDear abdul you are the first and best tech news informar
ReplyDeleteBest of luck
Thank You sir!
Deleteஎன்னங்க இது?! 'எ டமில் பிலிம் பை பாரதிராஜா' அப்படிங்கற மாதிரி போட்டு இருக்கீங்க!!! :)
ReplyDeleteஎன் வேண்டுகோளை ஏற்று இந்த பிட்டுப் படத்தை (அதாவது சிறிய அளவிலான நிகழ்படம்) உங்கள் பிட்டு, பைட்டு, மெகா பைட்டில் திரையிட்டதிற்கு மிக்க நன்றி!!! :) :) :)
அப்ப இது?:
ReplyDeletehttp://wikitravel.org/en/Main_Page
அது விக்கிபீடியா தளம் அல்ல... :)
Deleteதகவல்களுக்கு நன்றி சகோ
ReplyDeleteதகவல்களை துளித் துளியாகத் தந்தமை சுவைக்க வெகு அருமை.
ReplyDeleteகார்த்திக்கின் விடியோவும் மிக்க பயனுடயதாயிருக்கிறது.
ReplyDeleteநன்றி நிஜாமுதீன்! :)
DeleteGood Collection Of Datas !
ReplyDeleteஅருமையான தகவல்கல் மிக்க நன்றிங்க !!!
ReplyDeleteவித்தியாசமான தகவல்கள் நன்றி நன்றி நன்றி
ReplyDelete