பிட்.. பைட்... மெகாபைட்....! (02/01/2013)


2013-ஆம் ஆண்டின் முதல் "பிட்.. பைட்... மெகாபைட்....!" பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த வருடம் தொழில்நுட்ப உலகில் நடந்த முக்கிய நிகழ்வுகள் சிலவற்றை மட்டும் தற்போது பார்ப்போம்.

கூகுள் (Google):



* கூகுள் நிறுவனம் (ஜிமெயில், ப்ளாக்கர், யூட்யூப் உள்பட) தனது அறுபதுக்கும் மேற்பட்ட சேவைகளுக்கு தனித்தனி தனியுரிமைக் கொள்கைகளை (Privacy Policies) வைத்திருந்தது. அதனை கடந்த மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஒரே தனியுரிமைக் கொள்கையாக மாற்றியது.

* ப்ளாக்கர் தளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் கொண்ட தளங்களை நீக்குமாறு பல்வேறு நாடுகளில் இருந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் உள்ளதால், தணிக்கை செய்வதற்கு எளிதாக இருக்க ப்ளாக்கர் தளம் Country-code top level domain முறையை அறிமுகப்படுத்தியது.

* கூகிள் தளம் தனது ஆன்ட்ராய்ட் மார்க்கெட், கூகிள் மியூசிக், கூகிள் ஈ-புக்ஸ் ஆகிய வசதிகளை ஒன்றிணைத்து கூகிள் ப்ளே (Google Play) என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியது.  

* கூகிள் நிறுவனம் தனது Google Docs சேவையினை மேம்படுத்தி கூகிள் ட்ரைவ் (Google Drive) என்ற பெயரில் கோப்புகளை இணையத்தில் சேமித்து வைக்க உதவும் மேக சேமிப்பு சேவையை அறிமுகப்படுத்தியது.

* பிரபலங்கள், முக்கிய கட்டிடங்கள், முக்கிய அடையாளங்கள் (Landmarks), திரைப்படங்கள், விண்வெளிப் பொருட்கள், கலைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்களைப் பற்றி கூகுளில் தேடும் போது, அவைகள் பற்றி உடனடி தகவல்களை காட்டும் Knowledge Graph என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.

* ஆண்ட்ராய்ட் புதிய பதிப்பான ஜெல்லி பீன் அறிமுகமானது.

* நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அற்புதக் கண்ணாடியை Project Glass என்ற பெயரில் கூகிள் உருவாக்கியது. 

* ஆப்பிள் ஐஒஎஸ் 6-லிருந்து கூகுள் மேப் அப்ளிகேசன் வெளியேற்றப்பட்டதால் புதிய கூகுள் மேப் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியது.

* மொபைல் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து நெக்சஸ் (Nexus) மொபைல் மற்றும் டேப்லட்களை அறிமுகப்படுத்தியது.


ஆப்பிள் (Apple):



* ஆப்பிள் நிறுவனத்தின் ஐஒஎஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான ஐஒஎஸ் 6 அறிமுகமானது.

* தனது ஐபோன் வரிசையில் அடுத்தப்படியாக ஐபோன் 5-ஐ அறிமுகப்படுத்தியது.

* கூகுள் மேப்பிற்கு போட்டியாக ஆப்பிள் மேப் அறிமுகமானது. ஆனால் மோசமான வழிகாட்டுதல்களால் பயனாளர்களிடம் எதிர்ப்பை சம்பாதிக்க, ஆப்பிள் நிறுவனத்தின் CEO டிம் குக் மன்னிப்புக் கேட்டார்.

* ஆப்பிள் ஐபேட் சாதனத்தின் சிறிய அளவு பதிப்பான ஐபேட் மினி அறிமுகமானது.
 
பேஸ்புக் (Facebook):



 * பேஸ்புக் தளத்தின் பயனாளர்கள் எண்ணிக்கை நூறு கோடியை தாண்டியது.

 * பங்கு வர்த்தகத்தில் கால் பதித்தது பேஸ்புக். ஆனால் அதில் வீழ்ச்சியையே கண்டு வந்த பேஸ்புக் இன்று வரை அதன் ஆரம்ப விலையை விட குறைவாகவே உள்ளது.

* Instagram மென்பொருளை வாங்கியது பேஸ்புக்.

* பேஸ்புக் தோற்றத்தில் Timeline உள்பட பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்ததுடன், Facebook Gifts உள்பட பல புதிய வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.

* தான் காதலித்து வந்த Priscilla Chan என்பவரை கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் திருமணம் செய்தார் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்.

மைக்ரோசாஃப்ட் (Microsoft):


* மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது விண்டோஸ் இயங்குதளத்தின் புதிய பதிப்பான விண்டோஸ் 8-ஐ அறிமுகப்படுத்தியது.

* விண்டோஸ் போன்களுக்கான புதிய பதிப்பாக Windows Phone 8-ஆயும் அறிமுகப்படுத்தியது.

* மைக்ரோசாப்ட் நிறுவனம் Surface என்னும் புதிய டேப்லட்டை அறிமுகப்படுத்தி டேப்லட் சந்தையில் முதல் முறையாக நுழைந்தது.

* தனது ஈமெயில் சேவையினை மேம்படுத்தி அவுட்லுக் என்ற பெயரில் புதிய ஈமெயில் சேவையை அறிமுகப்படுத்தியது.

யாஹூ (Yahoo):



* யாஹூ நிறுவனத்தின் புதிய CEO-வாக மரிஸ்ஸா மேயர் (Marissa Mayer) பதவியேற்றார்.

* யாஹூ மெயிலின் தோற்றம் மாற்றப்பட்டு முன்பைவிட அதிவேகமாக செயல்படத் தொடங்கியது.

ட்விட்டர் (Twitter):


* ட்விட்டர் தளத்தின் ப்ரோபைல் மற்றும் முகப்பு பக்கத்தின் தோற்றங்கள் மேம்படுத்தப்பட்டது.

* Instagram மென்பொருளுக்கு போட்டியாக தனது ஐபோன், ஆண்ட்ராய்ட் மொபைல் அப்ளிகேசன்களில் புகைப்படங்களை மெருகூட்டும் வசதியை அறிமுகப்படுத்தியது.

இது மட்டுமின்றி மேலும் பல மாற்றங்கள் நடந்துள்ளன. அவற்றில் சிலவற்றை படிக்க பிட்.. பைட்... மெகாபைட்....! பகுதிகளை படியுங்கள்.

Post a Comment

19 Comments

  1. புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி .இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ......

    ReplyDelete
  2. நல்ல அலசல் சகோ. பயனுள்ள ஒன்றும் கூட.

    ReplyDelete
  3. Happy New Year Basith. I expected new news rather than the excerpt of the old ones :)

    ReplyDelete
  4. Wish u happy new year brother . All tips are good .

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல்!

    ReplyDelete
  6. நல்ல பயனுள்ள தகவல்கள். அனைவருக்குமே பயன் படும். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல பதிவு.நன்றி பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. உங்கள் பாணியில் கடந்த வருட நினைவலைகள் அலசல் அருமை...

    ReplyDelete
  9. நல்ல புதிய தகவல் . நன்றி

    ReplyDelete
  10. தகவலுக்கு மிக்க நன்றிங்க

    ReplyDelete
  11. Thanks bro ! and wish you happy New Year sorry for the delay

    ReplyDelete
  12. Thanks bro ! and wish you happy new year ! ! !

    ReplyDelete
  13. Wish You Happy New Year 2013!
    Thanks for sharing the News!

    ReplyDelete
  14. அசத்தலான தொகுப்பு.

    அளப்பரிய நன்றி நண்பரே.

    ReplyDelete