பதிவில் நண்பர்களை குறிப்பிட புது வசதி


கூகுள் ப்ளஸ் - பேஸ்புக் தளத்திற்கு போட்டியாக கூகுள் களமிறக்கிய சமூக வலைத்தளம். நிச்சயமாக கூகுள் ப்ளஸ் தளத்தை பேஸ்புக்குடன் ஒப்பிட முடியாது. பேஸ்புக் என்பது தனி ஒரு தளம் ஆகும். அதில் பயனர்கள் விரும்பி இணைகின்றனர்.

ஆனால் கூகுள் ப்ளஸ் அப்படியில்லை. கூகுள் தளம் தனது அனைத்து தளங்களின் பயனர்களையும் கிட்டத்தட்ட வற்புறுத்தி இணைக்கிறது. அதிகமானோர் வேறு வழியின்றி இணைகின்றனர் என்பது தான் உண்மை. இருப்பினும் கூகுள் ப்ளஸ் தொடர்ந்து புதுப்புது வசதிகளை தந்துக் கொண்டே வருகிறது.

தற்போது ப்ளாக்கர் தளம் நம்முடைய பதிவில் கூகுள் ப்ளஸ் நண்பர்களை, கூகுள் ப்ளஸ் பக்கங்களை குறிப்பிடும் வசதியை அளித்துள்ளது.


பதிவு எழுதும் போது  @ என்றோ   + என்றோ எழுதி அதற்கு பிறகு எழுத்துக்களை எழுதினால், அந்த எழுத்தில் உள்ள உங்கள் நண்பர்கள், கூகுள் ப்ளஸ் பக்கங்கள், உங்கள் நண்பர்கள் பட்டியலில் இல்லாத கூகுள் ப்ளஸ் பயனர்களை(யும்) காட்டும். யாரை குறிப்பிட வேண்டுமோ, அவர்களை க்ளிக் செய்யுங்கள்.


அவ்வளவு தான்! பிறகு அந்த பதிவை ப்ளாக்கரில் இருந்து நேரடியாக கூகுள் ப்ளஸ் தளத்திற்கு பகிர்ந்தால் நாம் பதிவில் குறிப்பிட்ட நண்பர்கள், பக்கங்கள் பெயர்களும் இணைந்துவிடும்.

பதிவில் நாம் குறிப்பிட்ட நண்பர்கள், பக்கங்கள் + குறியீட்டுடன் சுட்டியாக வரும். அதன் மேலே கர்சரை நகர்த்தினால் பின்வருமாறு தெரியும்.


உதாரணத்திற்கு,

என்னுடைய கூகுள் ப்ளஸ் ப்ரொபைல்:  +Abdul Basith

ப்ளாக்கர் நண்பன் கூகுள் ப்ளஸ் பக்கம்:  +ப்ளாக்கர் நண்பன்

Post a Comment

13 Comments

 1. Purintha maathiri iruku. Try panni parkuren..

  ReplyDelete
 2. எங்கள் சங்கத் தலைவர் படத்திற்கு பதிலாக ஒரு சிறு பிள்ளையின் படத்தைக் காட்டி இருப்பது வருத்தத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை தருகிறது என்பதை திருவாளர் ஹாரியிடம் தெரிவித்துக் கொள்கிறேன்

  ReplyDelete
 3. ஏதோ கொஞ்சம் புரிகிறது
  நான் உளூந்தூர்பேட்டை!
  தமிழ்நாட்டில் வாழ்கின்றேன்

  ReplyDelete
 4. பகிர்வுக்கு நன்றிங்க.....

  ReplyDelete
 5. எனக்கும் தகவல் வந்தது! ஆனால் புரியவில்லை! முயற்சி செய்து பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete
 6. நல்ல வசதி .. பயன் படுத்தி பார்போம்

  ReplyDelete
 7. சூப்பருய்யா வாத்தீ....!

  ReplyDelete
 8. முயற்சி செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
 9. மிகவும் பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. தகவலுக்கு நன்றி சகோ.

  ReplyDelete