பிட்.. பைட்... மெகாபைட்....! (26/12/2012)


சுதந்திரத்தைப் பற்றி அதிகம் பேசும் நாம், சமூக வலைத்தளங்களிடமும், மொபைல் அப்ளிகேசன்களிடமும் விரும்பியோ, விரும்பாமலோ நம் சுதந்திரத்தைப் பறிகொடுக்கிறோம். அதைப் பற்றி கவலைக்கொள்ளாத வரை நம் பாதுகாப்பு கேள்விக்குறியே! சரி, இனி இந்த வாரம் (26/12/2012) தொழில்நுட்ப உலகில் நடந்த மாற்றங்களையும், அறிமுகங்களையும் இன்றைய "பிட்..பைட்...மெகாபைட்....!" பகுதியில் பார்ப்போம்.

Facebook Poke - நம்பர் ஒன்!


கடந்த வார  பிட்.. பைட்... மெகாபைட்....! பகுதியில், சில நிமிடங்களில் தானாக அழிந்துவிடக் கூடிய ரகசிய செய்திகள், படங்களை அனுப்பும் வசதிக் கொண்ட Snapchat அப்ளிகேசனுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் புது வசதியை கொண்டுவரப் போவதாக பார்த்தோம் அல்லவா? தற்போது இந்த வசதியை Facebook Poke என்ற பெயரில் ஐபோன் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. வெளியான 24 மணிநேரத்திற்குள் கடந்த வாரம் முதலிடம் பிடித்த கூகுள் மேப் அப்ளிகேஷனை பின்னுக்குத் தள்ளி அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட இலவச ஐபோன் அப்ளிகேசன்கள் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.

இந்த அப்ளிகேசன் பன்னிரண்டு நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவிறக்கம் செய்ய செய்ய: Facebook Poke

Snapjoy தளத்தை வாங்கிய Dropbox:

புகைப்படங்களை இணையத்தில் சேமிக்கவும், Flickr, Instagram, Picasa போன்ற தளங்களில் நாம் பதிவேற்றம் செய்த புகைப்படங்களை ஒரே இடத்தில் சேமிக்கவும் பயன்படும் Snapjoy என்னும் இணையதளத்தை, கோப்புகளை இணையத்தில் சேமிக்க உதவும் Dropbox நிறுவனம் வாங்கியுள்ளது. 

கூகுள் X போன்:

மோடோரோலா மொபைல் நிறுவனத்தை ஏழு மாதங்களுக்கு முன்பு கூகுள் வாங்கியது. தற்போது கூகுள் மோடோரோலா ஆப்பில் ஐபோன் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ் 3 மொபைல்களுக்கு போட்டியாக சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது. இதனை தற்காலிகமாக X Phone என்று அழைக்கிறார்கள். இது பற்றி கருத்து சொல்ல கூகுள் மறுத்துவிட்டது.


இவற்றை தவிர வேறு முக்கிய செய்திகள் இந்த வாரம் இல்லை. மேலும் வேலைப்பளு காரணமாக என்னால் அதிகம் பதிவெழுத முடியவில்லை.

வாரம் ஒரு கார்டூன் (ஹிஹிஹிஹி):
 Log Out!

Post a Comment

8 Comments

 1. பயனுள்ள பதிவு..தொடர்ந்து வாசிக்க ஆரம்பிக்கிறேன் நண்பா..

  ReplyDelete
 2. புதிய தகவல்கள் , நன்றி

  ReplyDelete
 3. புதிய தகவல் நன்றி சகோ

  ReplyDelete
 4. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete