ஆன்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தும் அதிகமானவர்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனை மொபைலின் பேட்டரி சார்ஜ் விரைவில் தீர்ந்துவிடுவது. பொதுவாக அதிக வசதிகள் கொண்ட (ஸ்மார்ட்) மொபைல்கள் அனைத்தும் எதிர்கொள்ளும் பிரச்சனை இது. நம்மால் இயன்றவரை பேட்டரி பயன்பாட்டை குறைத்து அதிக நேரம் நீட்டிக்க செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
பேட்டரி சார்ஜை அதிகம் எடுப்பது எது?
மொபைலில் Settings => Battery ( சில மொபைல்களில் Settings > About Phone > Battery Use) பகுதிக்கு சென்றால் பேட்டரி சார்ஜின் பயன்பாட்டை காட்டும். அங்கு எந்த அப்ளிகேசன் அதிகம் பேட்டரியை எடுத்துக் கொள்கிறது என்பதை தெரிந்துக் கொண்டு அதனை கட்டுப்படுத்தலாம்.
பேட்டரி சார்ஜை அதிகப்படுத்த பொதுவான ஐந்து வழிகள்:
1. திரை ஒளிர்வு (Brightness)
மொபைலின் Brightness-ஐ முடிந்தவரை குறைவாக வைத்திருங்கள். அதிகமாக வைத்திருந்தால் அதிகம் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும்.
Settings => Display => Brightness பகுதிக்கு சென்று Brightness-ஐ மாற்றிக் கொள்ளலாம்.
2. GPS, Wi-Fi & Bluetooth
![]() |
Status Switch |
Android மொபைலில் Power control அல்லது Status Switch என்ற Widget (மேலே உள்ள படத்தில் உள்ளது போன்று) இருக்கும். அதை Home Screen-ல் வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் GPS, Wi-Fi, Bluetooth ஆகியவற்றை எளிதாக ஆன்/ஆஃப் செய்துக் கொள்ளலாம்.
3. Live Wallpaper
![]() |
Live Wallpaper |
4. Home Screen Widgets
ஆண்ட்ராய்ட் Home Screen-ல் நாம் வைக்கும் Widget-களை நாம் பயன்படுத்தவில்லை என்றாலும், அதுவும் கொஞ்சம் பேட்டரி அளவை எடுத்துக் கொள்ளும். அதனால் நாம் அடிக்கடி பயன்படுத்துபவற்றை மட்டும் வைத்துவிட்டு மற்றவற்றை நீக்கிவிடுவது நன்று.
5. Background Applications
சில அப்ளிகேசன்களை பயன்படுத்தவில்லை என்றாலும் பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும். அதுவும் பேட்டரி சார்ஜை எடுத்துக் கொள்ளும். இது பற்றி ஆன்ட்ராய்ட் மொபைல் பாதுகாப்பானதா? என்ற பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் என்றாலே புது புது வசதிகள் கொண்டிருக்கும். எல்லா வசதிகளையும் பயன்படுத்த வேண்டுமானால் பேட்டரி அதிக தடவை சார்ஜ் செய்து தான் ஆக வேண்டும். புதிய வசதிகள் வேண்டுமா? பேட்டரி சார்ஜ் நீடிக்க வேண்டுமா? என்பதனை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
20 Comments
நண்பா ரொம்ப தேங்க்ஸ் ..அப்படியே நோக்கியா E71 யில் பேட்டரி சார்ஜை நீட்டிக்க எதாவது ஐடியா இருந்தால் சொல்லுங்க நண்பா :(
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஆண்ட்ராய்ட் பயனாளர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல். நன்றி.
அஸ்ஸலாமு அழைக்கும் சகோ பாசித்
ReplyDeleteதகவல் பகிர்வுக்கு நன்றி :)
பயனுள்ள தகவல்கள் !!!
ReplyDeleteநன்றி நண்பரே உங்களின் தகவல் மிகவும் பயனளிக்க கூடியதாக உள்ளது
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி நண்பா. ஆனால் கரண்டே இல்லாத ஊர்களில்கூட இப்படி அடிக்கடி பேட்டரி விரைவில் குறையும் போன்களின் விற்பனை கூடியே உள்ளது. நண்பா. அவர்கள் எல்லோரும் எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?????
ReplyDeleteசும்மா! ஸ்வீட்ச் ஆப் செய்து வைத்துக்கொண்டு "சீன்" போடுவார்களோ?????
:-)))))))))))
ஹா ஹா ஹா !!
இன்னும் ஆண்ட்ராய்டு மொபைல் போன் வாங்கலை நண்பா..
ReplyDeleteசகோ பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
ReplyDeletekalam.
பயனுள்ள தகவல் நண்பா ... நன்றி
ReplyDeletePhone paavikkaadhavangalukku?????
ReplyDelete:D
http://newsigaram.blogspot.com/2012/11/kalyaana-vaibogam-09.html
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல். நன்றி சகோ
தகவலுக்கு நன்றி நன்பா
ReplyDeleteநல்ல பயண்யுள்ள தகவல்... நானும் ஆண்ட்ராய்ட் சேட் வாங்கலாம் என்று இருக்கிறேன்... எனக்கு இது பயண்அளிக்கும்.... நன்றி தோழா
ReplyDeleteபயனுள்ள தகவல் நன்றிங்க...
ReplyDeleteநன்றி சகோ.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள், நானும் இது போன்ற போனை வாங்கி வைத்துக் கொண்டு சரியான வழிகாட்டுனர் இன்றி திணறுகிறேன்.நன்றி...!
ReplyDeleteபயனுள்ள பகிர்வு நண்பா.
ReplyDeletethere is an external battery for iphone which connect like a case...does android have any kind of it????
ReplyDeleteபாட்டரி தீர்ந்து போய்விடுமே என்று கவலைப்பட தேவையில்லை
ReplyDeleteஅலுவலகத்தில் இருந்தால், கம்ப்யூட்டர் USB வழியாகவும்,
வீட்டில் இருந்தால் பேட்டரி சார்ஜர் முலமாக சார்ஜ் செய்துக்கொள்ளலாம். நான் அப்படித்தான் செய்துக்கொள்கிறேன் ..
சகோ அப்துல் பாசித் நல்ல தகவல் மிக்க நன்றி.
பயனுள்ள தகவல்
ReplyDelete