பதிவர்களுக்கான பேஸ்புக் வசதி - Debugger


பேஸ்புக் லைக் பட்டன், பேஸ்புக் ஃபேன் பேஜ், பேஸ்புக் லைக் பாக்ஸ் என்று இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு வசதிகளைத் தருகிறது பேஸ்புக் தளம். தற்போது நாம் பார்க்கப் போவது அதிகம் பேருக்கு தெரியாத பயனுள்ள பேஸ்புக் வசதி - Facebook Debugger.

சில சமயம் நமது பதிவுகளை பேஸ்புக் தளத்தில் பகிரும் போது தலைப்பு சரியாக வராது அல்லது படம் தெரியாது அல்லது வேறு பிழைகள் வரும். அப்படி வரும் போது அதனை சரி செய்ய பயன்படுவது தான் Facebook Debugger Tool.

மேலே சொன்ன பிரச்சனை வரும் போது

https://developers.facebook.com/tools/debug என்ற முகவரிக்கு செல்லுங்கள்.


அங்குள்ள பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியை (ப்ளாக் முகவரியை அல்ல) கொடுத்து Debug என்று கொடுங்கள்.

பிறகு வரும் பக்கத்தில் பதிவின் பெயர், படம் எல்லாம் சரியாக காட்டும். பிறகு நீங்கள் பேஸ்புக்கில் முகவரியை பகிர்ந்தால் பிரச்சனை இருக்காது.

பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் பிழை:


நீங்கள் பேஸ்புக் கம்மென்ட் பாக்ஸ் வைத்திருந்தால் சில சமயம் மேலுள்ள படத்தில் உள்ளதுபோல் "Url is unreachable" என்று காட்டும். ஒரு முறை அதை க்ளிக் செய்தால் போதும். பிறகு காட்டாது.

அதை க்ளிக் செய்தால் பதிவில் சொன்ன Debug பக்கத்திற்கு தான் செல்லும்.

இது விளம்பரம் அல்ல, பரிந்துரை:

பேஸ்புக் வரலாறைப் பற்றி நண்பர் சீனு தொழிற்களம் தளத்தில் சுவாரஸ்யமான தொடர் எழுதி வருகிறார். அவசியம் படிக்கவும்.

பேஸ்புக் - முதல்பக்கம் (அத்தியாயம்-1)

இது பரிந்துரை அல்ல, விளம்பரம்:

ப்ளாக்கர் நண்பன் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்ய:

Post a Comment

12 Comments

  1. நல்ல பகிர்வு நண்பா..

    ReplyDelete
  2. தகவலுக்கு , பரிந்துரைக்கு நன்றி நண்பா

    ReplyDelete
  3. என்னவோ சொல்லுறீங்க

    ReplyDelete
  4. மிகவும் நல்ல தகவல்! அருமையான தகவல்களை தொடர்ந்து தரும் தங்களுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவு
    வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
    உங்கள் வரவை விரும்புகிறது.
    http://www.dinapathivu.com/
    தினபதிவு திரட்டி

    ReplyDelete
  6. நன்றி சகோ.அப்துல் பாசித்.

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் அனைவருக்கும்...

    நன்றி...

    ReplyDelete
  8. நல்லதொரு அருமையான பதிவு......பகிர்வுக்கு மிக்க நன்றி......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  9. எனக்கு இந்த தகவல் பயன் படாது என்றாலும் தெரிந்து கொண்டேன். நன்றிங்க..

    ஃ பேஸ் புக் வரலாறு தொடரை அறிமுகம் செய்தமைக்கும் நன்றிங்க................

    ReplyDelete
  10. இந்தப் பதிவை நீங்கள் வெளியிட்ட அன்றே வசித்து விட்டேன், செல்ல நேரமாகிய காரணத்தால் பின்னோட்டம் இட முடியவில்லை.....

    பொதுவாக பின்னூட்டம் இடும் பொழுது அதிகமான எழுத்துப் பிழைகள் எனக்கு வரும் இதை சரி செய்யும் வசதி இருந்தால் அதைப் பற்றியும் எழுதவும் :-)

    //இது விளம்பரம் அல்ல, பரிந்துரை:// இது என்ன கலாய்கிற மாதிரியே இருக்கே

    //பேஸ்புக் வரலாறைப் பற்றி நண்பர் சீனு தொழிற்களம் தளத்தில் சுவாரஸ்யமான தொடர் எழுதி வருகிறார். அவசியம் படிக்கவும்.// நிச்சயமாக இது காலத்தினால் செய்த உதவி... மிக்க நன்றி பிளாக்கர் நண்பரே....

    //சுவாரஸ்யமான தொடர் எழுதி வருகிறார்// மிக உற்சாகமான அறிமுகத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. அருமையான பதிவு.பகிர்வுக்கு மிக்க நன்றி......

    ReplyDelete