பிட்.. பைட்... மெகாபைட்....! (07/11/2012)

கடந்த இரு வாரங்களாக வேலைப்பளு காரணமாக அதிகம் எழுத முடியவில்லை. புதன்கிழமை வந்ததும் தான் எழுத தோன்றுகிறது. இந்தவாரம் (07/11/2012) தொழில்நுட்ப செய்திகள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

இணையத்தில் இன்ஸ்டாக்ராம் - Instagram Web Profile:நாம் எடுக்கும் சாதாரண புகைப்படங்களைக் கூட கலைப்படமாக மாற்ற உதவும் மொபைல் மென்பொருள் இன்ஸ்டாக்ராம் (Instagram). மொபைலில் மட்டுமே பயன்படுத்தும்படி இருந்த இது தற்போது இணையத்தில் பயனர் சுயவிவரப் பக்க வசதியை தந்துள்ளது. கிட்டத்தட்ட பேஸ்புக் போலவே காட்சி அளிக்கிறது. Instagram மென்பொருளை பேஸ்புக் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இணையத்தில் இருந்து புதிய கணக்கு உருவாக்க முடியாது. ஆன்ட்ராய்ட் அல்லது ஐபோன் அப்ளிகேசன் மூலம் தான் உருவாக்க முடியும்.

நான் எடுக்கும் கலைப்படங்களைக் (???) காண: http://instagram.com/basith27

Skype உள்ளே, Windows Live Messenger வெளியே!

வீடியோ கால் வசதிக் கொண்ட ஸ்கைப் மென்பொருளை மைக்ரோசாப்ட் நிறுவனம் முன்பு வாங்கியது. தற்போது ஸ்கைப் மென்பொருளை மேம்படுத்தியுள்ள மைக்ரோசாப்ட், ஏற்கனவே இருக்கும் Windows Live Messenger-ஐ நிறுத்தப் போகிறது. அதில் உள்ளவர்கள் இனி ஸ்கைப் பயன்படுத்தலாம்.

 பேஸ்புக் அன்பளிப்பு - தற்போது ஐபோனில்: பேஸ்புக்  தளம் Facebook Gifts என்ற பெயரில் நிஜ அன்பளிப்புகளை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியது பற்றி முன்பு பார்த்தோம். தற்போது ஐபோன் பேஸ்புக் அப்ளிகேசன் மூலம் அன்பளிப்பு அனுப்பும் வசதியையும் தந்துள்ளது.

Samsung SIII - 30 மில்லியன்கள் விற்பனை:

Samsung SIII மொபைல்கள் கடந்த ஐந்து மாதங்களில் முப்பது மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒருமாதம் மட்டும் கிட்டத்தட்ட மூன்று மில்லியன்கள் விற்பனையாகியுள்ளது.

Google Wallet Card:

 Paypal போன்று இணையத்தில் பணபரிமாற்றங்கள் செய்வதற்கு பயன்படுவது Google Wallet. விரைவில் கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் போல Google Wallet கார்டை அறிமுகப்படுத்தவுள்ளது கூகுள்.

இந்தியாவில் காலியான ஐபோன் 5:

கடந்த வெள்ளிக்கிழமை ஆப்பிள் ஐபோன் 5 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்து இருபத்தி நான்கு மணிநேரங்களில் பெரும்பாலான கடைகளில் விற்றுத் தீர்ந்துவிட்டது வரும் டிசம்பர் மாதத்திற்குள் இரண்டு லட்சம் ஐபோன்கள் இறக்குமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாரம் ஒரு கேள்வி:

நீங்கள் Instagram மென்பொருளை பயன்படுத்துகிறீர்களா ?

உங்கள் பதிலை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.Log Out!

Post a Comment

7 Comments

 1. உங்கள் படங்கள் ரொம்ப கலையாக உள்ளது இந்தியாவில் ஐபோன்5 தீர்ந்து விட்டதா ஆச்சர்யம் தான் இந்த அளவுக்கு வந்துவிட்டதா

  ReplyDelete
 2. போட்டோ பிடிப்பதே இல்லை அதனால் இன்ஸ்டாகிரம் நோ

  ReplyDelete
 3. என்னோட Instagram அக்கௌன்ட்க்கு தூசு தட்டி இன்னிக்கு தான் முதல் படம் Upload பண்ணி இருக்கேன். :-)

  ReplyDelete
 4. நல்ல தகவல்கள்!

  Samsung SIII - 30 மில்லியன்கள் விற்பனை:

  ஃபோனும் அதன் செயல்பாடுகளும் பற்றி தங்கள் கருத்து என்ன?

  ReplyDelete
 5. தகவலுக்கு நன்றிங்க...

  நான் கூட கேட்கலாம் என்று இருந்தேன். பதிவு வந்து நீண்ட நாட்கள் ஆனதை போல உள்ளதே என்று...

  உங்கள் வாரம் ஒரு கேள்வி .. இதெல்லாம் என் அறிவுக்கு அப்பர்ப்பட்டதாக உள்ளது.ஆகையால் பதிலளிக்கவில்லை

  நன்றி

  ReplyDelete
 6. கூகிள் வலாட், கூகிள் அடுத்த அடுத்த படிகளில் வேகமாக சென்று கொண்டுள்ளது.
  இந்தியர்கள் அவ்வளவு பணக்காரர்கள் ஆகிவிட்டார்களா என்ன ?

  //நீங்கள் Instagram மென்பொருளை பயன்படுத்துகிறீர்களா ?//

  இதுவரை இல்லை இனி இருக்கலாம்

  ReplyDelete
 7. சலாம் சகோ.

  அடடா... மைக்ரோ சாப்ட் விண்டோஸ் லைவை நிறுத்த போகிறதா? இதுவரை நான் லைவ் தான் உபயோகிக்கிறேன். ஸ்கைப் பல சமயங்களில் தரும் தொந்தரவுகள் லைவில் இல்லாததும், ஸ்கைபை விட லைவின் கிளாரிடி நன்றாக இருப்பதுவே காரணம். இப்போ என்ன செய்ய? :-(

  - இராஜகிரியார்.

  ReplyDelete