கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!


நமக்குள்ளே எழும் கேள்விகள் தான் எத்தனை எத்தனை? எல்லாம் தெரிந்தவனும் இல்லை, ஒன்றும் தெரியாதவனும் இல்லை! நமக்கு தெரிந்ததை தெரியாதவர்களுக்கு சொல்லுவோம், தெரியாததை தெரிந்தவர்களிடம் கேட்போம். கொஞ்சம் மொக்கையா இருக்கோ? சரி நேரிடையாக பதிவிற்கு செல்வோம்.

பிரபல தொழில்நுட்ப பதிவர் பிரபு கிருஷ்ணாவும் நானும் இணைந்து "பதில்!" என்னும் புதிய தளத்தை உருவாக்கியுள்ளோம். பெயரை பார்த்தவுடன் புரிந்திருக்கும். ஆம், தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் தளம்.


(Piracy தவிர்த்து) தொழில்நுட்பம் தொடர்பான உங்கள் அனைத்து கேள்விகளையும் இங்கு கேட்கலாம். நாங்களோ அல்லது அந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தவர்களோ பதில் அளிப்பார்கள். அதே போல இங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரிந்தால் நீங்களும் பதில் அளிக்கலாம். கேள்வியும் நீங்களே! பதிலும் நீங்களே!

கேள்வி கேட்பதற்கும், பதில் அளிப்பதற்கும் நீங்கள் கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும். கணக்கு தொடங்கியவுடன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு சுட்டி ஒன்று வரும், அதை க்ளிக் செய்து மின்னஞ்சல் முகவரியை உறுதி செய்ய வேண்டும்.

உங்களுக்கு பேஸ்புக் கணக்கு இருந்தால் அதன் மூலமாகவும் உள் நுழையலாம்.

தற்போது தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே அனுமதி. இறைவன் நாடினால் இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து மற்ற பிரிவுகள் அனுமதிக்கப்படும்.

தமிழில் இது புதிய முயற்சி இல்லை என்றாலும் சிறந்த முயற்சியாக கொண்டுவர முயற்சிக்கிறோம்.

பதில்கள் பேஸ்புக் பக்கம்: https://www.facebook.com/bathilgal 


தங்கள் ஆதரவை எதிர்பார்த்து,

பிரபு கிருஷ்ணா & அப்துல் பாஸித்

Post a Comment

35 Comments

  1. நல்ல முயற்சி நண்பரே.. தமிழில் இப்படி ஒரு தளம் ஆரம்பிக்க பட்டது மிகவும் அருமையான விடயம்.. கலக்குங்க..

    ReplyDelete
  2. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பிரபல தொழில்நுட்ப பதிவர் பிரபு கிருஷ்ணா //

    இது மட்டும் தான் யார்னு தெரியல. :-)

    ReplyDelete
    Replies
    1. வெத்தலைல மை போட்டு தேடினீங்கன்னா தெரிஞ்சிரும்.!

      Delete
    2. போங்கையா இவ்வளவு நாள் சீனு ஹாரி தான் பிரபலபதிவர் என்பதை ஒத்து கொள்ளாமல் திரிந்தனர் இப்ப அந்த லிஸ்டில் பிரபுவும் சேர்ந்து விட்டார்,,,,,,,

      Delete
  4. நல்லதொரு முடிவு.

    இருவருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்களின் சீரிய பணி.

    ReplyDelete
  5. நல்ல முயற்சி !!! Keep it up brothers :)

    ReplyDelete
  6. சிறந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அப்துல் & பிரபு! :)

    ReplyDelete
  8. நல்ல விசயம் ..தொடருங்கள் சகோ...

    ReplyDelete
  9. எனக்கு பயன்படும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள்குக் என்று இல்லை அனைவர்க்கும் பயன்படும்......

      Delete
  10. நல்ல துவக்கம் தொடருங்கள் .

    ReplyDelete
  11. கேள்விகள் மட்டுமே கேட்க தெரிந்த என்னை போன்றவர்களுக்கு ஒரு சிறந்த தளம்..!! ;)

    ReplyDelete
  12. உங்கள் முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  13. All the best Basith & Prabhu Krishna !!!

    ReplyDelete
  14. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. Hey guys,
    Very good attempt. I have been waiting to get get answers for some basic things like how to post reply in Tamil and so forth.
    I am sure I will benefit from this for sure. All the best.

    ReplyDelete
  16. நேற்று உங்கள் தளம் ஓபன் ஆகவேஇல்லை இன்னைக்கு தான் ஓபன் ஆச்சு இப்போது புதிய மின்வெட்டு முறை அறிமுகம் ஆகியுள்ளது காலை ஆறு டு மதியம் மூணு வரை சந்தோசமாய் இருக்கோம்.....

    ReplyDelete
  17. தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. ஆஹா....நல்ல சிந்தனை ...நல்ல முயற்சி
    வெற்றிபெற வாழ்த்துகிறேன் .

    ReplyDelete
  20. இருவரின் முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  22. நல்ல ஆரம்பம் தொடருங்கள்.

    ReplyDelete
  23. நல்ல முயற்சி இறைவனின் உதவியும் வெற்றியும் கிடைக்க நான் பிராத்திக்கிறேன்..

    ReplyDelete
  24. பெருமாள் கரூர்November 22, 2012 at 8:16 AM

    வாவ் அருமையான முயற்சி...

    வாழ்த்துக்கள்...

    நானெல்லாம் எல் கே ஜி தனமாத்தான் கேள்வி கேட்பேன்...

    சகித்துக்கொள்ளுங்கள்...

    ReplyDelete
  25. அருமயான திட்டம்.வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. நல்லது. நல்ல முயற்சி. பாராட்டுகிறேன் பலமுறை

    ReplyDelete
  27. நல்ல முயற்சி. தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete