இதனைப் பற்றி எழுத வேண்டும் என கடந்த ஒரு மாதமாக நினைத்து வருகிறேன், ஆனால் இப்போது தான் அதற்கான நேரம் வந்துள்ளது. நாம் எதைப்பற்றி எழுதுகிறோமோ, அதற்கு ஏற்றார் போல தலைப்பு வைப்போம். பொதுவாக அந்த தலைப்பை க்ளிக் செய்தால் அந்த பதிவிற்கே செல்லும். ஆனால் தலைப்பை க்ளிக் செய்தால் பதிவிற்கு தொடர்பில்லாத வேறொரு முகவரிக்கு செல்லுமாறு வைக்கும் வசதி ப்ளாக்கரில் உள்ளது.
பதிவு எழுதும் போது வலதுபுறம்,
Links என்பதை க்ளிக் செய்தால், சில அமைவுகள் வரும். அதில்
Title Link என்பதற்கு கீழே நீங்கள் எந்த முகவரியை வேண்டுமானாலும் கொடுக்கலாம்.
பிறகு
Done என்பதை க்ளிக் செய்யுங்கள். அவ்வளவுதான்!
பதிவிட்ட பிறகு பதிவின் தலைப்பை க்ளிக் செய்தால், அது நீங்கள் கொடுத்த முகவரிக்கு செல்லும்.
சோதனைக்காக, இந்த பதிவின் தலைப்பில் வேறொரு முகவரிக்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதை க்ளிக் செய்து பாருங்கள்.
ஆனால், இந்த வசதியால் பிரச்சனையும் இருக்கிறது. முகப்பு பக்கத்திலிருந்து யாராவது பதிவை முழுவதும் படிப்பதற்காக தலைப்பை க்ளிக் செய்தாலும் அது நாம் கொடுத்துள்ள முகவரிக்கு சென்றுவிடும்.
17 Comments
உபயோகமான தகவல்....நன்றி
ReplyDeleteஎன்ன ஒரு ராஜ தந்திரம் உங்க சேனல்க்கு லிங்க் கொடுத்து இருக்கீங்க
ReplyDeleteஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...!
Deleteபலருக்கு தெரியாத விபரம்.
ReplyDeleteநன்றி.
நல்ல பகிர்வு நண்பரே
ReplyDeleteதலைப்பிற்கு ஏற்ற பதிவைத் தான்
ReplyDeleteபடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
வேறு ஒரு பதிவிர்க்கு போவதா....
என்னேமோ போங்க.
புது தகவலை அளித்திருக்கின்றீர்கள்..!
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி சகோ.!
நன்றி சகோ.
ReplyDeleteGOOD INFORMATION, THANKS
ReplyDeleteVisit and comment on my site www.mindsbuilding.com to encourage
ஒரு பதிவிற்கு மற்றொரு யுஆரெல் முகவரி கொடுப்பதன் பயனை எதற்காக கூகுள் கொடுக்க வேண்டும் என்று யாமும் தேடிக்கொண்டிருக்கின்றோம்..
ReplyDeleteதேடுபொறிகளுக்காக இதை அமைக்கவில்லை என்பது மட்டும் உறுதி,,
தொடருங்கள் சகோ,,
அனைவரும் (குறிப்பாக நான்) அறிந்துகொள்ள வேண்டியத் தகவல்கள்...
ReplyDeleteநன்றி.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல்... நன்றி...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றிங்க
ReplyDeleteThanks boy
ReplyDeleteபுதிய தகவல்தான்!நன்றி
ReplyDeleteஉபயோகமான பகிர்வு
ReplyDeleteவணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது
தினபதிவு திரட்டி
புதிய தகவல் தான்! கூகிள் அப்டேட்டை உடனுக்குடன் அறியத்தருவதற்க்கு மிக்க நன்றி! :)
ReplyDelete