இன்ட்லி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!

உங்கள் ப்ளாக்கில் இன்ட்லி Follower Gadget வைத்திருந்தாள் உடனடியாக நீக்கிவிடவும். தற்போது அதில் Gadget-கு பதிலாக ஆபாச படம் தெரிகிறது. தயவு செய்து இதனை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.

Update:

இது  இன்ட்லி தளத்தினரால் நடைப்பெற்ற தவறு இல்லை. இன்ட்லி தளத்தினர் www.mikemerritt.me/ என்ற தளத்தில் இருந்து TinyTips என்னும் நிரலை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த நிரல் மாறியிருக்கிறது. இதற்கான காரணத்தை www.mikemerritt.me/ தளத்தினரிடம் தான் கேட்கவேண்டும்,

இன்ட்லி நிர்வாகிகளுக்கு மெயில் அனுப்பியுள்ளேன், பதில் வந்ததும் சொல்கிறேன்.

Update 2 (11:05pm IST, 24/10/2012):

 இன்ட்லி தளத்தினர் follower gadget நிரலில் Mike Meritt- தளத்தின் நிரல் இருக்கும் ஹோஸ்ங்கிற்கு நேரடியாக இணைப்பு கொடுத்திருக்கின்றார்கள். இதற்காக  www.mikemerritt.me தளத்தின் ஓனர் தான் வேண்டுமென்றே அந்த படத்தை இணைத்துள்ளார். அவரித் தொடர்புக் கொண்ட போது சொன்னார். அவரிடம் தற்போது அந்த படத்தை நீக்குமாறும், அவகாசம் கொடுக்குமாறும் கேட்டுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.

இன்ட்லி தளத்தினருக்கும் மெயில் அனுப்பியுள்ளேன். இன்னும் பதில் வரவில்லை.

Update 3 (11:25pm IST, 24/10/2012):

 www.mikemerritt.me தளத்தின் ஓனர் தற்காலிகமாக அந்த ஆபாச படத்தை நீக்கியுள்ளார். இருபத்திநான்கு மணி நேரத்திற்குள் நீக்க சொல்லியுள்ளார். இல்லையென்றால் மீண்டும் அந்த ஆபாச படத்தை வைத்துவிடுவார்.

Update 4 (1:35am IST, 27/10/2012):

 Mike Merritt கொடுத்த கேடு முடிந்தது. தற்போது மீண்டும் பழையபடி ஆபாச படம் வந்துவிட்டது. இதுவரை இன்ட்லி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை. எந்த தளத்திலாவது அந்த ஆபாச படத்தைப் பார்த்தால் மறக்காமல் அந்த தளத்தின் நிர்வாகியிடம் இது பற்றி சொல்லி நீக்க சொல்லுங்கள்.

Post a Comment

38 Comments

 1. எடுத்து விட்டேன்... மிக்க நன்றி...

  ReplyDelete
 2. சரியான நேரத்தில் சரியான தகவல், எடுத்துவிட்டேன் சகோ. நன்றி.

  ReplyDelete
 3. மிக்க நன்றி நண்பா.....
  எனக்கு நெஞ்சுக்குள்ள டமார்னு குத்து குத்திச்சுப்பா.....
  அட சீ என்ன வேலைகள் பார்க்கிறாங்களோ

  ReplyDelete
 4. பார்த்தேன் அந்த அசிங்கத்தை.

  நீக்கிவிட்டேன்.

  மிக மிக மிக மிக்க நன்றி நண்பரே.

  ReplyDelete
 5. நண்பேன்டா.....தகவல் தரா பட்சம் சத்தியமா கஷ்டம்தான்...சரியான நேரத்தில் அலாரம் அடிச்ச நண்பனுக்கு நன்றி சகோ....

  ReplyDelete
 6. நல்ல காரியம் செய்து பலரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்.
  நன்றி!

  ReplyDelete
 7. என் தளத்தை மொபைலில் பார்த்தவுடன் பயந்துவிட்டேன். இது என்ன புது பிரச்சனை என்று, கண்டுபிடித்து நீக்கிவிட்டேன். உங்கள் பதிவை பார்த்த பிறகுதான் நிம்மதி, நன்றி சகோ

  ReplyDelete
 8. நீங்கள் "ப்ளாக்கர் நண்பன்" மட்டுமல்ல நண்பரே! "ப்ளாக்கர் காவலன்"
  Anti Virus program போல உடனே அபாய மணி அடித்துவிட்டீர்! மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 9. இண்ட்லி பட்டையை நான் இணைப்பதில்லை, இருந்த போதும் பயன் மிக்க தகவல்களுக்கு நன்றிகள் !

  ReplyDelete
 10. சரியான சமயத்தில் தகவல் சொன்னது பலருக்குப் பயன்படும்.

  ReplyDelete
 11. அதன் வோட்டிங் பார் வைத்திருப்பதில் பிரச்சினை இல்லையே?!

  ReplyDelete
 12. thanks bro.. i have seen it about 2hours ago.. i removed it. and worried abt it.. thanks for this informatin.. kudos.. :)

  ReplyDelete
 13. பெயருக்கு ஏற்றபடி பொறுப்பாக செயல்படும் உங்களின் நடவடிக்கைகள் பாராட்ட பட வேண்டியது! தொழில்நுட்ப பதிவுகள் எழுதுபவர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகலை உங்களிடம் அதிகம் காண்கிறேன்!

  தொடரட்டும் தங்கள் சேவை!

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை சகோ.

   Delete
 14. இப்படில்லாம் ஆகும்னு தெரிஞ்சுதான் நான் வைக்கல்ல. :-)

  பலருக்கும் இந்த தகவல் பயன்படும். நீங்கள உண்மையிலேயே பிளாக்கர் நண்பன்தான்.

  ReplyDelete
 15. பிளாக்கர் நண்பன் என்றால் பிளாக்கர் நண்பன்தான்....
  காலத்தினார் செய்த உதவி. ஜசாக்கல்லாஹு க்ஹைரன் சகோ.அப்துல் பாசித்.

  ReplyDelete
 16. மிக்க நன்றி சகோ .தக்க சமயத்தில் உதவும் தங்கள்
  பண்புக்கு தலைவணங்குகின்றேன் .வாழ்த்துக்கள் சகோ .

  ReplyDelete
 17. பயனுள்ள தகவல் & சேவை.

  நன்றி சகோ

  ReplyDelete
 18. உரிய நேரத்தில் தெரியப்படுத்தியுள்ளீர்கள், நன்றி சகோ.

  ReplyDelete
 19. வலைப் பூவின் தலைப்பிற்கு தகுந்த பொறுப்புடன் எழுதிய பதிவிற்கு நன்றி.

  ReplyDelete
 20. இன்ட்லி follower gadget முன்பு வைத்திருந்தேன். follower படங்களுக்கு பதில் ஷேட் இமேஜ் வந்த பொழுது எடுத்துவிட்டேன்.

  உங்களுக்கும், தனபாலன் சாரின் மின் அஞ்சல் தகவலுக்கும் எனது நன்றி :)

  ReplyDelete
 21. நல்ல வேலை செய்தீர்கள் பாசித்.னான் கூட குழம்பி விட்டேன்.சரிசெய்து விடுகிறேன்.தகவலுக்கு நன்றி

  ReplyDelete
 22. முன்பு ப்ளாக்கில் ஸ்லைடு ஷோ வெட்ஜ் வைத்திருந்தேன் அதில் flowers டிஸ்ப்ளே செலக்ட் செய்திருந்தேன். கொஞ்ச நாளில் "அந்த" மாதிரி படங்கள் வர அதிர்ந்து தூக்கிவிட்டேன்.

  ReplyDelete
 23. மிகவும் உபயோகமான தகவல்! அப்டேட் செய்து பதிவர்களுக்கு உதவியமைக்கு மிக்க நன்றி! நண்பா!

  ReplyDelete
 24. ரொம்ப நன்றி ...

  நானும் இந்த படத்தை பார்த்து பயந்துட்டேன். உடனே அதை ரிமூவ் செய்துவிட்டேன். பிறகுதான் உங்க பதிவைப் பார்த்தேன்.

  மீண்டும் நன்றி.

  ReplyDelete
 25. நன்றி நண்பா கொஞ்ச நாட்களாக தொடர்ந்து பிரயாணம் ஆகவே ஊரில் இல்லை இனியும் சில நாட்கள் இருக்க மாட்டேன். ஆகவே அசம்பாவிதம் நடைபெற்ற நேரம் எனக்கு தெரியவே இல்லை. உங்கள் உடனடி நடவடிக்கைக்கு நன்றி

  ReplyDelete
 26. என் வலைச்சரப் பொறுப்பின் கடைசிப் பகுதியில் தங்களுடைய வலையகத்தை அறிமுகப் படுத்தியிருக்கின்றேன் என்பதனை மனமகிழ்வோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

  மேலும் அறிய : http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_6632.html

  நன்றியுடன்,
  சிவஹரி

  ReplyDelete
 27. அருமையான தளம்....

  அன்புத்தம்பி வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு அன்பு வாழ்த்துகள்...

  பயனுள்ள தளம் எல்லோருக்கும்...

  இண்ட்லி எனக்கும் இப்படி வந்தது பயந்து நீக்கிவிட்டேன்...

  மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா..

  ReplyDelete
 28. தங்களின் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் பகிருங்கள் (http://www.tamiln.org/)
  தமிழனின் நன்றிகள்...

  ReplyDelete
 29. சரியான நேரத்தில் அறிவுறுத்தியமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 30. மிக்க நன்றி நான் இப்போதுதான் பார்த்தேன் உடனே எடுத்துவிட்டேன்.

  ReplyDelete
 31. தகவலுக்கு நன்றி

  ReplyDelete