![]() |
விண்டோஸ் 8 |
விண்டோஸ் எட்டு - Windows 8:
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை விண்டோஸ் எட்டு இயங்குதளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முதல் மூன்று நாட்களில் விண்டோஸ் 8 Upgrade மட்டும் நான்கு மில்லியன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
(அதில் நானும் ஒருவன். விண்டோஸ் 8 சிறப்பம்சங்கள் மற்றும் சிறப்பு சலுகைகள் பற்றி இறைவன் நாடினால் விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்.)
இதுவரை வந்துள்ள விண்டோஸ் பதிப்புகளில் விண்டோஸ் 7 தான் அதிக விற்பனையாகியுள்ளது. 2009 ஆம் ஆண்டு அறிமுகமான விண்டோஸ் 7, மூன்று வருடங்களில் 670 மில்லியன்கள் விற்பனையாகியுள்ளது.
ஆன்ட்ராய்ட் 4.2:
கூகுள் தனது ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீனில் 360 டிகிரி கோணங்களில் படம் எடுக்கும் வசதி, டேப்லட்களிலும் கணினிகளில் இருப்பது போல பல்பயனர் (Multi-user) வசதி, கம்பியில்லா தந்தி (Wireless) மூலம் ஆன்ட்ராய்ட் திரையில் தெரிவதை (கம்பியில்லா தந்தி வசதிக் கொண்ட) டிவியில் தெரியவைக்கும் வசதி போன்ற புதிய வசதிகளுடன் சேர்த்து 4.2 பதிப்பை வெளியிட்டுள்ளது.
மூன்று அளவுகளில் கூகுள் நெக்ஸஸ்:
கூகுள் நிறுவனம் தற்போது மூன்று புதிய நெக்ஸஸ் சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மூன்றிலும் ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் 4.2 இயங்கும்.
Nexus 4 - LG நிறுவனத்துடன் இணைந்து 4 இன்ச் அளவிலான ஸ்மார்ட்போன்.
Nexus 7 - Asus நிறுவனத்துடன் இணைந்து 7 இன்ச் அளவிலான (புதிய) டேப்லட்.
Nexus 10 - Samsung நிறுவனத்துடன் இணைந்து 10 இன்ச் அளவிலான டேப்லட்.
இதில் Nexus 7 விற்பனை மாதம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் விற்பனையை நெருங்கிவருவதாக Asus நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்ட்ராய்டில் மால்வேர் ஆதிக்கம்:
கடந்த ஒரு வருடத்தில் ஆன்ட்ராய்ட் சாதனங்களில் மால்வேர் எண்ணிக்கை 580 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் அதிகமானவை கூகுள் ப்ளே அல்லாத வேறு தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டவைகளாகும்.
அன்றும், இன்றும்:
வாரம் ஒரு கேள்வி :
நீங்கள் எந்த இயங்குதளம் (Operating System) பயன்படுத்துகிறீர்கள்?
என் பதில்: விண்டோஸ் 8.
உங்கள் பதில்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.
டிஸ்கி: நமது சிறப்பு நிருபர் விண்டோஸ் எட்டில் மூழ்கிவிட்டதால் அதிக செய்திகளை சேகரிக்க முடியவில்லை.
Log Out!
28 Comments
எட்டாத.. எட்டாவது ஜன்னலுக்காக வழிமேல் விழி வைத்து வாசலில் காத்திருக்கிறேன்!
ReplyDelete#கவித..!
எட்டவில்லை என்றால் எட்டி பார்க்கலாம். :)
DeleteSuper post nanbaaa ....
ReplyDeleteThank You friend!
Deleteஎல்லாரும் windows7 தான் அதிகபட்சம் பயன்படுதுவதாய் சொல்லுவாங்க,,,நீங்க பயன்படுத்தறது நேர்மையான சாப்ட்வேர்ரான்னு கேட்க வேண்டியது தானே
ReplyDelete670 மில்லியன்கள் என்பது பணம் கட்டி வாங்கப்பட்டது மட்டுமே!
Deleteஇல்லையே கூகிள் ப்ளேவிலும் மால்வேர் இருப்பதாக கேள்விபட்டேனே
ReplyDeleteமீண்டும் ஒருமுறை படியுங்கள்.
Delete//இதில் அதிகமானவை கூகுள் ப்ளே அல்லாத வேறு தளங்களில்...//
இதன் அர்த்தம், குறைவானவை கூகுள் ப்ளேயில் உள்ளது.
:) :) :)
windows8 அவ்வளவாய் ஈர்க்கவில்லை
ReplyDeleteஎன்னை ஈர்த்துவிட்டது...
Delete:) :) :)
நல்ல தகவல்கள்...விண்டோஸ் 8 பற்றி உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்...
ReplyDeleteநன்றி சகோ.! அந்த பதிவிற்கு கொஞ்சம் மெனக்கட வேண்டியுள்ளது.
Deleteநானும் Win8 லைசென்ஸ் வாங்கி விட்டேன்! :) இனிமேல்தான் இன்ஸ்டால் செய்து பார்க்க வேண்டும்!
ReplyDeleteவெல்கம் டூ விண்டோஸ் 8!
Delete:) :) :)
windows 8 தரவிறக்கி கொண்டிருக்கிறேன்....
ReplyDeleteபயன்படுத்திப் பாருங்கள் நண்பா!
DeleteWin 7
ReplyDelete:) :) :)
Deleteநன்றி சகோ.!
how can i update 4.2 in my samsung glexy s3?
ReplyDelete4.2 not yet come to samsung s3 or any other mobiles. Wait for announcement from samsung.
Deleteசகோ உங்கள் விண்டோஸ் 8 screen அழகாக உள்ளது ...
ReplyDeletewin 7
நன்றி சகோ.!
Deleteஇந்தப்பதிவின் மூலம் நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது.
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
வாரம் இரு நட்சத்திர பதிவர்
தினபதிவு திரட்டி
Win7 & xp in same system. இனி Windows 8 அப்டேட்டா போட்டு வயித்தெரிச்சலை கிளப்புங்க.... ;)
ReplyDeleteகண்டிப்பா....
Delete:) :) :)
Thanks.friend
ReplyDeleteUseful information. Keep it up bro
ReplyDelete