தமிழ்மணத்தில் ஓட்டு போட்டது யார்? #2


தமிழ்மணத்தின் ரகசியங்கள் (இப்படியும் சொல்லலாம்) பற்றி கடந்த பதிவில் பார்த்தோம் அல்லவா? தற்போது தமிழ்மணத்தில் உள்ள வேறு சில விவரங்களைப் பார்ப்போம். இந்த தகவல்கள் அதிகம் புதியவர்களுக்காக மட்டும்.

தமிழ்மணத்தில் உள்ள வசதிகளில் ஒன்று ஓட்டு போடுதல். இதில் பதிவு பிடித்திருந்தால் ப்ளஸ் ஓட்டு போடுவதற்கும், பிடிக்கவில்லை என்றால் மைனஸ் ஓட்டு போடுவதற்கும் வசதி உள்ளது.


தமிழ்மணத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு பதிவிற்கும் பிரத்யேக எண்கள் (Unique ID) கொடுக்கப்படும். அதை இரண்டு வழிகளில் தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ்மணம் ஓட்டுபட்டையில் உள்ள Thumbs Up படத்தில் வைத்து "Copy link location" என்பதை கிளிக் செய்து, எங்கேயாவது ஒரு இடத்தில் Paste செய்யுங்கள். அந்த முகவரி இப்படி இருக்கும்,

http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1184495

இதில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்கள் தான் உங்கள் பதிவின் ஐடி ஆகும்.


அல்லது, தமிழ்மணத்தில் உங்கள் பதிவு தெரியும் போது தலைப்பில் வைத்து Right Click செய்து "Copy link address"என்பதை கிளிக் செய்து, எங்கேயாவது ஒரு இடத்தில் Paste செய்யுங்கள். அந்த முகவரி இப்படி இருக்கும்,

http://tamilmanam.net/forward_url.php?url=http://www.bloggernanban.com/2012/08/how-to-use-tamilmanam-thiratti.html&id=1184495

இதில் சிவப்பு நிறத்தில் உள்ள எண்கள் தான் உங்கள் பதிவின் ஐடி ஆகும்.

இப்போது  நம்மிடம் இருக்கும் அந்த ஐடி எண்கள் மூலம் ஓட்டு போட்டது யார்? என்று தெரிந்துக் கொள்ளலாம். அதற்கு

http://tamilmanam.net/who_voted.php?id=1184495

என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். (மேலே உள்ள சிவப்பு எண்களை நீக்கிவிட்டு உங்கள் பதிவின் எண்களைக் கொடுக்கவும்)


அந்த பதிவிற்கு ஆதரவு மற்றும்  எதிர் ஓட்டு போட்டவர்களின் பட்டியலைக் காட்டும். ஆனால் யார் ஆதரவு ஓட்டு போட்டார்கள், யார் எதிர் ஓட்டு போட்டார்கள் என்பது தெரியாது.

ஒன்றல்ல இரண்டு, இரண்டும் ஒன்றல்ல:

தமிழ்மணம் திரட்டி இரண்டு முகவரிகளில் இயங்குகிறது. 

ஒன்று www.tamilmanam.net மற்றொன்று www.tamilmanam.net/index.html

பார்க்க இரண்டும் ஒன்று போல தோன்றினாலும் இரண்டும் வேறு வேறு. சில சமயங்களில் இவற்றில் ஒரு முகவரியில் பதிவுகள் சரியாக தோன்றும், இன்னொரு முகவரியில் பழைய பதிவுகளைக் காட்டும். சில சமயம் இரண்டிலும் சரியாக காட்டும். சில சமயம் இரண்டிலும் தவறாக காட்டும்.

பழைய பதிவுகளை காட்டுகிறது

புதிய பதிவுகளை காட்டுகிறது

எந்த முகவரியில் சரியாக காட்டுகிறது என்பதை "வாசகர் பரிந்துரை" பகுதியையோ, அல்லது முகப்பு பக்கத்தில்இருக்கும் (விளம்பர பதிவுகள் தவிர்த்து) வந்திருக்கும் பதிவுகளை பார்த்தோ தெரிந்துக் கொள்ளலாம்.

இறைவன்  நாடினால், மேலும் சில ரகசியங்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

Post a Comment

58 Comments

  1. நல்ல தெளிவான விளக்கம் பிரதர்! கீப் கொண்டினியூ............!!

    ReplyDelete
  2. Replies
    1. இதெல்லாம் உங்களுக்கு தான் ஹாரி நீங்க பிரபல பதிவர் வேற...

      Delete
  3. புட்டு புட்டு வச்சிட்டீங்க போங்க

    ReplyDelete
  4. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  5. தமிழ்மணத்தை பற்றிய முக்கியமான விபரங்கள் ..

    பகிர்வுக்கு நன்றி சகோ..

    ReplyDelete
  6. ரொம்ப நாளாக இந்த தகவல்களை தான் தேடி கொண்டு இருந்தேன்..
    ரொம்ப நன்றி பாஸ்..

    ReplyDelete
  7. ஆதரவு மற்றும் எதிர் ஓட்டு போடுவோர்களை எப்படி தனித்தனியே தெரிந்துகொள்வது என்பது பற்றியும் இயன்றால் விளக்குங்கள்!

    புதுசு..புத்தம் புதுசு..., நான் தகவலை சொல்லலை :) :)

    ReplyDelete
    Replies
    1. அந்த வசதியை தமிழ்மணம் கொடுக்கவில்லை நண்பா!

      //புதுசு..புத்தம் புதுசு..., //

      கண்டுபுடிச்சேன்...கண்டுபுடிச்சேன்...! புதுசா ஒரு ப்ளாக்கை கண்டுபுடிச்சேன்!

      Delete
  8. இதெல்லாம் பிரபல பதிவர்களுக்கு மட்டும் தான்...நல்ல தகவல் யார் ஒட்டு போட்டார்கள் இப்ப தெரிந்து கொள்ளலாம்.பிளாக்கர் நண்பன் இப்ப பல மாற்றங்கள் வருதே facebook பக்கம் எல்லாம் வந்து உள்ளது...

    ReplyDelete
  9. அந்த பிரபல பதிவர் வேற யாரும் இல்லை நீங்க ஹாரி...

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி நேற்று தான் தம்பி ஒரு பதிவர் நீ யாரு தம்பி ஏதும் பிளாக் வைச்சு இருக்கியா என்று கேட்டாரு.. ஓடி போய் யுத்தம் ஆரம்பம் - 6 போய் பாரு தம்பி.. ஹி ஹி

      Delete
    2. //தல நீங்க என்னை பின் தொடர்வது தெரியும்.. ஆனால் நீங்கள் பிளாக்கர் என்பது எப்படி எனக்கு தெரியாமல் போனது என்று தான் எனக்கு இன்னமும் புரியவில்லை. மன்னிச்சூ....//

      ஹி ஹி ஹி ஹி

      # ஒரு விளம்பரம்

      Delete
    3. தம்பி போ தம்பி.. கடைய சாத்தனும்

      Delete
  10. Nalla padhivu. Aanaal enakku idhu thevaip padaathu. Een enil, enakku naane pottuk kollum vote thavira veru yaarum thamilmanaththil enakku poduvadhillai ullame.

    ReplyDelete
  11. ஏதோ தொழில்நுட்ப ரீதியா இருக்கும்னு வந்தா செம மொக்கையா இருக்கு,அதுக்கு வேற ஜேம்ஸ்பாண்ட் கண்டுப்பிடிச்சா போல சிலர் சொல்லிக்கிறாங்க, அப்போ நான் இத்தனை நாளும் தொழில்நுட்பபதிவர்கள் என சொல்லிகிறவங்க எல்லாம் செம கில்லாடினு நினைச்சது வேஸ்ட்டா ?

    -------

    அப்துல் பாசித் ,

    இதெல்லாம் +2 பையனே செய்யறான்,எனக்கு அவன் அளவுக்கு கூட அறிவில்லைனே வச்சுக்கோங்க, இன்னும் நல்ல தொழில்நுட்ப ரீதியாக எதாவது செய்து உண்மையை சொல்லுங்க.

    ReplyDelete
    Replies
    1. :) :) :)

      நண்பா! இது பற்றிய கடந்த பதிவிலும், இந்த பதிவிலும் தொடக்கத்திலேயே சொல்லியுள்ளேன், "இது புதியவர்களுக்காக" என்று. இதற்கு பின்னும் வேறு என்ன சொல்வது?

      Delete
    2. பதிவுலகில் வவ்வாலுக்கு இதே வேலையா போச்சு,இது நொட்டை,அது நொள்ளைனு ஏதாவது உளறது,அப்புறம் வாங்கி கட்டிகிறதுனு

      Delete
  12. பகிர்வுக்கு நன்றி நம்ம எரியவில் ப்ளாக் டெலிட் செய்த பதிவை மீட்பது

    எப்படி

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  14. Plz Come to my Site

    http://palathum10m.blogspot.com/

    ReplyDelete
  15. நல்லதொரு தகவல்..

    ReplyDelete
  16. பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  17. புதியவகளுக்கு பயன்படும் தகவல்!

    ReplyDelete
  18. நீங்க கலகுறீங்க தல

    ReplyDelete
  19. புதிய தகவல் அன்பரே 7 ஓட்டுகளுக்கு மேல் தான் யார் ஒட்டு போட்டார்கள் என பரிந்துரையில் காணலாம் என நினைதேன் இப்படி ஒரு வழி இருக்கா நன்றி

    ReplyDelete
  20. தமிழ்மணம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது இணைந்ததோடு சரி.ரகசியங்களை கற்றுத்தரும் உங்களுக்கு என் நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  21. நல்ல விளக்கமான தகவல்..நன்றி நண்பா

    ReplyDelete
  22. போலி ஓட்டுக்களை தடுக்கலாம். Where there is a will there's a way! With the help of I.P number MAC number, etc, etc..!

    ஆங்கிலத்தில் எழுதுகிறேன்; மன்னிக்கவும்...
    There are several parameters that can pinpoint a system. As you may know the easiest thing to trace is a system through electronic trail.

    The only drawback is that the person can vote only thorough the particular computer system. If s/he wants to vote through another system then s/he has to register other system with Tamilmanam.

    With simple Boolean operators one can prevent double dipping (voting!).

    Since Tamlmanam is a not for profit organization, this may be difficult to achieve as manpower is needed; however, there are several computer wizards here and they could form a blog jointly (for this purpose) to write a program code and donate it to Tamilmanam!

    Where there is a will there's a way!

    ReplyDelete
    Replies
    1. I dont know coding, if you know, you can help tamilmanam.

      Delete
    2. I don't have that much knowledge! This is request to people who have deep comp. knowledge.

      Delete
    3. அப்துல் பாசித்,

      நீங்க கள்ளஓட்டு போட்டவங்களைத்தான் புடிச்சிங்கன்னு நினைச்சு வந்த ஏமாற்றத்தில் முன்னர் பின்னூட்டம் போட்டிருந்தேன், ஏன் எனில் இந்த தமிழ்மண ஐடி வச்சு ஓட்டுப்போடுறதை முன்னரே ஒருப்பதிவர் விளக்கிட்டார்,அப்போ சிறந்தப்பதிவு எதுன்னு தேர்வு செய்ய ஓட்டுப்போட்டாங்க. அப்பவும் இதே கள்ள ஓட்டுத்தான் பிரச்சினையாச்சு.

      மேலும் இப்போதும் எந்த கோடிங் இல்லாமலே தளநிர்வாகி ஒரே ஐபியில் எத்தனை ஐடி உருவாக்கி இருக்காங்கன்னு அட்மினியா இருப்பதால் பார்த்து நீக்கலாம். அதை செய்ய நேரமில்லாமல் இருக்கலாம்.

      நான் நிறைய ஃபோரம்களில் கலந்துக்கொள்ளும் போது அங்கே சில மெம்பர்களை இப்படித்தான் தடை செய்றாங்க, ஒன்றுக்கு மேற்பட்ட ஐடி வச்சுக்கிட்டு ஃபோரம்ல நிறையப்பேரு போல பேசுவாங்க :-))

      இதிலும் ஒரு சிக்கல் என்ன்னனா டைனமிக் ஐபி இருக்கிறவங்க தப்பிச்சுடுவாங்க.

      Delete
  23. ஏழு ஒட்டு பெற்று விட்டால் பின்னர் எளிதில் தெரிந்துவிடுகிறது.ஆனால் குறைவைகாப் பெற்றாலும் யார் வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்கும் வழியை கூறி இருக்கிறீர்கள். உண்மையிலேயே நிறையப் பேருக்கு தெரியாது என்பதுதான் உண்மை.நீங்கல தொடருங்கள் பாஸ்.தமிழ்மணம் என்று இருப்பதையே நெடுநாள் கழித்து தெரிந்துகொண்டவர்கள் இருக்கிறார்கள்.(நானும் அதில் ஒருவன்) நீங்கள் தொடருங்கள் பாஸ்

    ReplyDelete
  24. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  25. புதியவகளுக்கு பயன்படுM

    ReplyDelete
  26. ஓட்டு போட்டாச்! :)

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும், ஓட்டு பட்டன் மக்கர் செய்கிறது! :)

      Delete
    2. ஓட்டு போட்டதற்கு நன்றி சகோ.!

      நீங்கள் பின்னூட்டம் இட்டால், முகவரி

      http://www.bloggernanban.com/2012/09/who-voted-on-tamilmanam-thiratti.html?showComment=1346732062817#c8457301695013344773

      என்பது போல வரும். அப்போது தமிழ் 10 தள ஓட்டுப்பட்டை வேலை செய்யாது.

      சவுண்ட் ஒன்று கேட்டிருப்பீர்களே?

      Delete
    3. தற்போது சரி செய்துவிட்டேன்.

      :) :) :)

      Delete
  27. முதல்ல ஓட்டு போட்டு இருக்கோம். ஏதாவது பாத்து போட்டு கொடுங்க. :-)))

    ReplyDelete
    Replies
    1. என்ன வேணும்னு சொலுங்க சகோ.! அதனை ஈமெயிலில் அனுப்பி வைக்கிறேன்,,, (புகைப்படமாக)

      :D :D :D

      Delete
  28. யண்ணோவ் வவ்வால் அண்ணோவ் :-)

    நானெல்லாம் இணையத்துல பாலகன் தாங்னா.. எனக்கெல்லாம் இந்த விசயமெல்லாமே புதுசுங்னா..

    அப்துல் பசித் அண்ணன் ஒரே நெரத்துல பி எச் டி முடிச்ச உங்களுக்கு தேவையானவற்றவையும், பால் வாடி படிக்கிற எனக்கு தேவையானவற்றையும் எழுதறாரு... அவர் வாழ்க அவர் குலம் வாழ்க!!

    ReplyDelete
  29. சிலருக்கு... ஏன் நேரடியாவே பேர போட்ருவமே..
    வவ்வாலுக்கு என்னமோ தான் தான் அதிபுத்திசாலின்னு நினைப்பு..

    சகோ அடக்கி வாசிங்க... உங்க பில்டப்பு ரொம்ப ஓவரா இருக்கு... உங்க பெருமைய பல இடங்லளில் நீங்களே சொல்லிக்கிறீங்க... அடுத்த ஆள் சொல்லணும் பாஸ்...

    ஏதோ சொல்லணும்னு தோணிச்சு சொல்லிட்டேன்...

    ReplyDelete
    Replies
    1. சிராஜ்

      இங்கேயும் நாட்டாமையா ?

      அது சரி உங்க கிட்டே அனுமதி வாங்கினால் தான் வலைப்பதிவு வச்சிருக்கலாம், கமெண்ட் போடலாம்னு நீங்களே சொல்லிக்கிறிங்க :-))

      இங்கு எங்கும் என் பெருமையை சொல்லிக்கவே இல்லை என்பதை தமிழ்ப்படிக்க தெரிந்தவர்களாக இருந்தால் புரிந்துவிடும், ஆனாலும் எப்போடா நேரம் கிடைக்கும் ,சொம்பை எடுத்து நாட்டாமை செய்யலாம் என நினைத்தால் :-))

      Delete
    2. வவ்வால் ஜி

      ஆக்கபூர்வமா யோசிங்க பாஸு ... எல்லாரும் திறமையான ஆட்கள் இல்லையே இணைய தொழில்நுட்பத்தில்... பாசித் ஆரம்பத்திலே சொல்லிருக்கார்ல .. புதியவர்களுக்கு ...

      வவ்வால் நீங்க வேணா இணைய தொழில்நுட்பம் பற்றி எழுதுங்க .. நாங்க follow பண்றோம் ...

      Delete
  30. பதிவுகளின் கீழ் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வரவைப்பது எப்படி னு சொல்லுங்க அண்ணா.தமிழ்மணம் கொடுக்கும் முறைப்படி செய்யும் போது பதிவின் மேல் புறம் ஓட்டுப்பட்டை வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. http://www.bloggernanban.com/2012/02/blog-post.html

      இந்த பதிவில் தமிழ்மணம் ஓட்டு பட்டையின் நிரல் உள்ளது. அதை காப்பி செய்து பதிவின் கீழே நீங்கள் வைத்திருக்கும் ஓட்டுப் பாட்டிகளுக்கு அருகில் பேஸ்ட் செய்யுங்கள்.

      Delete
  31. வவ்வால் ஜி....

    பின்னூட்டங்கள் எடுத்து காட்டவா????? தேவை இல்லைனு நினைக்கிறேன்..உங்களுக்கு புரியாமல் இருக்குலாம்...பார்க்கிறவங்களுக்கு தெரியும்.... நான் நாட்டாமை பண்ணனும்னு நினைச்சு இருந்தா குடி பிரச்சனை அப்பவே பதிவு போட்டு இருப்பேன்... நண்பர்களுக்காக செய்யல... சும்மா வம்பிழுக்கிறத மட்டும் பொளப்பா வச்சிக்காம, கொஞ்சம் ஆக்கப்பூர்வமா சிந்திங்க வவ்வால்... திறமைய வேஸ்ட் பண்ணாதீங்க....

    ReplyDelete
  32. தமிழ் மணத்தில் பதிவுகளை இணைத்தாலும் , ஓட்டு பட்டை எனது பதிவில் தெரிவதில்லை நண்பரே ! கொஞ்சம் விளக்கவும் !

    ReplyDelete
    Replies
    1. நண்பரே! இந்த பதிவை பார்க்கவும்.

      http://www.bloggernanban.com/2010/12/blog-post.html

      Delete
    2. மிக்க நன்றி நண்பரே !இப்போது ஓட்டுபட்டை தெரிகின்றது ! நீண்ட நாள் இன்னல் தீர்ந்தது!

      Delete
  33. தகவலுக்கு நன்றி சகோ.!

    ReplyDelete