கடந்த ஜூலை மாதம் கூகுள் தளம் தனது பயனாளர்கள் கூகுள் தேடுதல் பற்றிய நுட்பங்களைத் தெரிந்துக் கொள்வதற்காக Power Searching with Google என்னும் ஆன்லைன் பாட வகுப்பை நடத்தியது. இது பற்றி தேடுவது எப்படி? பாடம் நடத்தும் கூகுள் என்ற பதிவில் பார்த்தோம். தற்போது மீண்டும் பாடம் நடத்துகிறது கூகுள். இலவசமாக நடைபெறும் இந்த பாடத்தில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழையும் வழங்குகிறது.
இந்த பாடத்தில் நீங்கள் சேர்வதற்கு www.powersearchingwithgoogle.com/register என்ற முகவரியில் உங்கள் கூகுள் கணக்கு மூலம் பதிவு செய்ய வேண்டும்.
- 50 நிமிட அமர்வுகளாக ஆறு வகுப்புகள் (வீடியோ மூலம்) நடைபெறும்.
- புதிய திறன்களை அறிந்துக் கொள்வதற்காக பரிமாற்ற நடவடிக்கைகள் (Interactive Activities) மூலம் பயிற்சி அளிக்கப்படும்
- Google Groups, Google+ மற்றும் Google+ Hangout மூலம் மற்றவர்களுடன் தொடர்புக் கொள்ளும் வசதி
- பாட இறுதியில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அச்சிடக் கூடிய சான்றிதழ்கள் (Printable Certificate) மின்னஞ்சலில் அனுப்பப்படும்.
பாடங்கள் :
17 Comments
பகிர்வுக்கு நன்றி சகோ பங்குபெறுவோருக்கு வாழ்த்துக்கள் .
ReplyDeleteநன்றி சகோ.!
Deleteதேடுவதற்க்கும் ஒரு சான்றிதழா.! கொள்ளும் என்பது மாறி கொல்லும் என்று ஆகி இருக்கிறது சரி பார்க்கவும்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே! அது பழைய பதிவில் இருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்து போட்டேன், கவனிக்கவில்லை!
Deleteகாபி பேஸ்ட் பண்ணுவது தவறு.. அது உங்கள் தளமாய் இருந்தாலும்.. :-)
Delete// காபி பேஸ்ட் பண்ணுவது தவறு..// பேஸ்ட் பண்ணிவிட்டு காபி குடித்தால் தவறில்லையாம் கோல்கேட் விளம்பர டாக்டர் சொன்னார்
Deleteநல்ல தகவல்
ReplyDeleteநண்பர் Abdul Basith அவர்களே...
ReplyDeleteஎன்னோட பழைய கூகிள் ப்ளாக் வலைதள முகவரி எனக்கு ஞாபகம் இருக்கிறது. ஆனால் அதனுடைய மின்னஞ்சல்(ஈமெயில்) முகவரி மறந்துவிட்டேன் அதை எவ்வாறு திரும்ப பெறுவது என கூரவும்..
நன்றி...
நண்பரே! ஈமெயில் முகவரி எது என்று ப்ளாக்கர் சொல்லாது.
Deletehttps://www.blogger.com/forgot.g
இந்த முகவரிக்கு சென்று உங்கள் ப்ளாக் முகவரியைக் கொடுத்தால், அந்த ப்ளாக்கின் ஈமெயிலுக்கு செய்தி அனுப்பும்.
கோர்ஸ் முடித்ததும்...எங்கு பதிய வேண்டும்...வேலை வாய்ப்பு எப்படி இருக்கும்...எவ்வளவு சேலரி கிடைக்கும்..என்பது பற்றியும் குறிப்பிட்டிருக்கலாம் பேருதவியாக இருந்திருக்கும்! :D
ReplyDeleteBSNL லில் பதிய வேண்டும்... வேளை வாய்ப்பு பற்றிய விளம்பரப்களை அதிகமாகப் பார்க்கலாம்...
Delete// சேலரி கிடைக்கும் // தெரியலியே மச்சி ஒரு கோட்டேர் சொல்லேன்
உங்களுக்கே பிடிக்கவில்லை என்றால் எப்படி...?
ReplyDeleteதகவலுக்கு மிக்க நன்றி...
// பாட வகுப்பை நடத்தியது. // பாடம் படிப்பு... அய்யகோ கேட்கவே அலர்ஜியாய் உள்ளது
ReplyDelete//எனக்கு பிடிக்கவேயில்லை. // எனக்கும் பிடிக்கவே இல்லை....
வாங்க தல.. பிரபல பதிவர் ஆவது எப்படி அப்படின்னு எதுவும் பரிட்ச நடந்த அதுல கலந்துக்கலாம்
பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteமிகவும் நல்ல பயனுள்ள தகவல்.....பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteநன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)
எனக்கு நீங்கள் உங்கள் வலைப் பூ மூலம் ட்யூசன் சொல்லித் தந்தால் அதுவே போதும் நண்பா
ReplyDeletethank u bro...
ReplyDelete