மாயப் படம் உருவாக்குவது எப்படி?
மேலே உள்ள படத்தில் நடுவில் இருக்கும் சிவப்பு புள்ளியை முப்பது நொடிகள்
பாருங்கள். அதன் பின் அதற்கு கீழே இருக்கும் வெள்ளை பகுதியை பாருங்கள். அந்த நெகடிவ் படத்தின் உண்மையான படம் தெரிகின்றதா?

இதுவும் ஒரு வகையான மாயத் தோற்றம் (Illusion) ஆகும். இது போல படங்களை இணையதளங்களில் பார்த்திருப்பீர்கள். இதனை நாமே செய்வது எப்படி? கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.


1. MS Paint-ஐ கணினியில் திறந்துக் கொள்ளுங்கள்.

2. அதில் மாற்றப் போகும் படத்தை திறந்துக் கொள்ளுங்கள்.

3. Select All செய்துக் கொள்ளுங்கள். ("Cntrl + A" அழுத்தியும் செய்துக் கொள்ளலாம்)

4. படத்தின் மீது Right Click செய்யுங்கள்.

5. "Invert Colour" என்பதை கிளிக் செய்யுங்கள்.

6. படத்தில் இருக்கும் உருவத்தின் மூக்கில் சிவப்பு கலரிலோ அல்லது பளிச்சென்று தெரியும்விதமாக வேறு நிறத்திலோ புள்ளி ஒன்றை வரைந்துக் கொள்ளுங்கள்.

7. பிறகு Save செய்துக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான்! உங்களுக்கு மாயப் படம் தயாராகிவிடும். நண்பர்களுடன் அதை பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Update:

இது  எப்படி வேலை செய்கிறது? என்ற அறிவியல் நுட்பத்தை நண்பர் அருண் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள். அதனை பார்க்கவும்.

யாரது யாரது? (கண்ணை நம்பாதே #1 )

Post a Comment

22 Comments

 1. படம் உருவாக்கும் விதத்தைவிட, அது செயல்படும் வித்தையைச் சொல்லியிருக்கலாம். (நெகட்டிவ்வை 30 செகண்ட் பாத்தா, அப்புறம் நிஜ படம் எப்படி தெரியுது?)

  ReplyDelete
  Replies
  1. அது தெரியலையே சகோ.! இதை கண்டுபிடிக்கவே எனக்கு ரொம்ப மாதம் ஆச்சு... :D

   Delete
  2. இந்த மாயத் தோற்றம் எப்படி தெரிகிறது?
   மேலும் அறிந்து கொள்ள: <a href="http://www.aalunga.in/2012/09/illusion-girl-photo.html>யாரது யாரது?</a>

   Delete
 2. நல்லா இருக்கு சூபரா இருக்கு நான் இதுவரை பார்த்ததே இல்ல..

  ReplyDelete
  Replies
  1. சந்தானம் நெகடிவ்விலும் சிரிக்க வைக்கிறார்! :)

   Delete
  2. @ஹாரி

   பார்த்ததில்லையா? என் நண்பர் ஒருவர் harry2g என்ற புது ப்ளாக் தொடங்கியுள்ளார். அங்கே பார்க்கவும்.

   :) :) :)

   Delete
  3. @வரலாற்று சுவடுகள்

   படத்துல உள்ளவரை கண்டுபிடிச்சிட்டீன்களா?

   :) :) :)

   Delete
  4. @Abdul Basith
   போச்சு...
   ஊர்ல இருக்குற எல்லாரும் இனி குச்சியைத் (Paint brush) தூக்கிட்டு, ஒரு கோட் போட்டுகிட்டு 'ஹாரி பாட்டர்' மாதிரி சுத்தப் போறாங்க.. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்!!

   Delete
 3. Superb, Thx For This Post.

  Come To My Site;
  http://palathum10m.blogspot.com/

  ReplyDelete
 4. அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே..

  ReplyDelete
 5. புதிய தகவல் எளிமையாக இருக்கிறது நன்றி சகோதரா

  ReplyDelete
 6. புதிய தகவல்..நன்றி நண்பா..

  ReplyDelete
 7. அட எப்படி பாஸ் இது ?சாத்தியம்

  ReplyDelete
 8. ஹா ஹா ஹா சூப்பர்...

  ReplyDelete
 9. மாயப்படம் என்றவுடன் பெரிய கட்டுர்ரையாக இருக்கும் என்று நினத்தேன் இவ்வளவு எளிதாகயிருக்கும் என்று நினக்கவில்லை மிக்க நன்றி.

  ReplyDelete
 10. பூ இவ்வளவுதான் விஷயம், இது தெரியாமல் போச்சே.

  ReplyDelete
 11. வேடிக்கையாக உள்ளது. மிக்க நன்றி.

  ReplyDelete
 12. சந்தானத்தை எப்படி பார்த்தாலும் எனக்கு நெகட்டிவ் இமேஜாகவே தெரிகிறார்...! ஹி...ஹி...!!!!

  ReplyDelete
 13. எப்படிங்க?
  அருமையான விளக்கம்...

  ReplyDelete
 14. என்ன மாயமோ...உங்க புண்ணியத்தில் நானும் ஒரு பதிவு தேத்திட்டேன் :D
  நன்றி!

  ReplyDelete
 15. அவிழ்மடல் விளக்கமும் உங்களின் பகிர்வும் அட்டகாசம்...

  ReplyDelete